ilakkiyainfo

ilakkiyainfo

பிள்ளையார் ஆலய அத்திபாரத்தை உடைத்து புத்தர் சிலை வைக்க முயற்சி

பிள்ளையார் ஆலய அத்திபாரத்தை உடைத்து புத்தர் சிலை வைக்க முயற்சி
May 23
11:19 2019

கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திபாரம்  உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை புத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான சிலர் கடந்த ஒருவார காலமாக  மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்தியிருந்த நிலையில் அவ்விடத்தில் எவ்வாறு புத்தர் சிலை வைக்க முடியும் எனத் தென்கயிலை ஆதின குரு முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியதனூடக குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக நிறுத்துவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் பிள்ளையார் இருந்த இடத்தில் அத்திவாரம் உடைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கும் பணிகள் தொடர்வதாகவும் தென்கயிலை ஆதீனம் குருமார்கள் தெரிவித்தனர்.

IMG-20190523-WA0003 பிள்ளையார் ஆலய அத்திபாரத்தை உடைத்து புத்தர் சிலை வைக்க முயற்சி பிள்ளையார் ஆலய அத்திபாரத்தை உடைத்து புத்தர் சிலை வைக்க முயற்சி IMG 20190523 WA0003 e1558610386483இந்நிலையில் மீண்டும் குறித்த விடயம் தொடர்பாக இன்று திருமலை மாவட்டச் செயலருக்கும் பிரதேச சபை தவிசாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளனுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெறுவது கவலையளிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News