ilakkiyainfo

ilakkiyainfo

பண்டாரம் வன்னியகளும் – காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை)

பண்டாரம் வன்னியகளும் – காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை)
August 30
11:02 2014

கி.பி.1786களில் பண்டாரம் வன்னியனார் முல்லைத்தீவிலும் கி.பி.1590களில் காக்கைவன்னியனார் ஊர்காவற்றுறையிலும் இருந்தவர்கள்!
தேசிய வீரர் பண்­டாரம்  வன்­னி­ய­னா­ரு­டைய நினைவு தின­விழா இம்­மாதம் 25 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வவு­னி­யாவில் இடம் பெற­வி­ருக்­கி­றது. பண்­டாரம் வன்­னி­யனார், ஒல்­லாந்தர் மற்றும் ஆங்­கி­லேய ஆட்­சி­க­ளுக்கு எதி­ராக 1786 -1811 வரை போர்க்­கொடி உயர்த்­தி­யவர். இதனால் இலங்­கையின் தேசிய வீரர் என்ற அந்­தஸ்து அவ­ருக்கு கிடைத்­துள்­ளது.

padaeavaniyan பண்டாரம் வன்னியகளும் - காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை) padaeavaniyanபண்­டா­ர­வன்­னி­யனார் சிலை

தேசியவீரர் பண்­டாரம் வன்­னி­ய­னா­ரு­டைய வர­லாற்­றிலே துர­தி­ர்ஷ்ட வச­மாக ”காக்கை வன்­னி­யனார்” என்ற கதா­பாத்­திரம் நாட­கத்தின் மூலம் இடைச் செரு­க­லாக வந்து, தற்­போது வர­லா­றா­கவும் மாறி­வ­ரு­கி­றது. காக்கை வன்­னி­யனார் யாழ்ப்­பா­ணத்தில் ஊராத்­துறை என்று அழைக்­கப்­பட்ட ஊர்காவற்றுறையில் இருந்­தவர்.

அங்கு அவர் நிர்­வாகம் செலுத்­திய காலம் 1590 தொடக்கம் 1620 வரைக்குள் என்று யாழ்ப்­பாண வர­லா­று­களில் குறிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை தேசிய வீரர் பண்­டாரம் வன்­னி­ய­னா­ரு­டைய வர­லாற்றில் காக்கை வன்­னி­ய­னாரைச் சேர்த்து இன்று வரை பல குழப்­ப­மான விட­யங்கள் எழு­தப்­பட்டும், பேசப்பட்டும் வரு­வது கவ­லையைத் தரு­கி­றது.

அதனால் வர­லாற்றுத் தேவை கருதி காக்­கை­வன்­னி­ய­னாரைப் பற்றி யாழ்ப்­பாண வர­லா­று­களில் உள்­ள­வற்றை அப்­ப­டியே பதிவு செய்­கிறேன்.

யாழ்ப்­பாண வர­லா­று­களில் காக்கை வன்­னி­யனார்:

1879இல் ”யாழ்ப்­பாண வைப­வ­மாலை” என்ற யாழ்ப்­பாண வர­லாற்று நூல் பிறிற்றோவால் ஆங்­கி­லத்தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அந்த நூலில் காக்கை வன்­னியன் பற்றி தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாண வைப­வ­மாலை ஆங்­கி­லத்தில் வெளி­யி­டப்­பட்டு 33 வரு­டங்­களின் பின்னர் 1912ஆம் ஆண்டு வர­லாற்­றா­சி­ரியர் ஆ.முத்­துத்­தம்­பிப்­பிள்ளை தமிழில் யாழ்ப்­பாணச் சரித்­திரம் என்ற நூலை வெளி­யிட்­டுள்ளார்.

1915ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளி­வந்­துள்­ளது. அந்த நூலில் சங்­கிலி மற்றும் ”காக்கை வன்­னி­யனார்” ஆகி­யோ­ரு­டைய வர­லாற்றை எழு­தி­யுள்ளார்.

இதனை நாடக பாணியில் ஆசி­ரியர் எழு­தி­யுள்ளார் என்ற குற்­றச்­சாட்­டு­க்களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. வர­லாற்­றா­சி­ரியர் இரா­ச­நா­யகம் முத­லியார் இந்த வர­லாற்­றிற்கு மறுப்பு எழு­தி­ய­போ­திலும் காக்கை வன்­னியன் என்ற பாத்­தி­ரத்தை மறுத்­து­ரைக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. வர­லாற்றில் பறங்­கியர் என்று குறிக்­கப்­ப­டு­வது போர்த்­துக்­கே­ய­ரை­யாகும்.

* 1915இல் வெளி­வந்த ”யாழ்ப்­பாணச் சரித்­திரம்” என்ற தமிழ் வர­லாற்று நூலில் 63ஆம் பக்கம் தொடக்கம் 72 ஆம் பக்கம் வரை சங்­கிலி அரசன் மற்றும் ”காக்கை வன்­னி­யனார்” பற்றி வர­லாற்­றா­சி­ரியர் ஆ.முத்­துத்­தம்­பிப்­பிள்ளை எழு­தி­யுள்­ளதை அப்­ப­டியே பதிவு செய்­கிறேன். மேலும் தெளி­விற்­காக இணை­யத்­த­ளத்­தி­லி­ருக்கும் படங்­க­ளையும் சேர்த்­துள்ளேன்.

வட­ம­ராட்சிக் கலகம்: ஒரு நாள் வட­ம­ராட்சி சனங்­க­ளுக்­குள்ளே உண்­டா­கிய ஒரு கல­கத்தை விசா­ரித்துத் தீர்க்­கு­மாறு சங்­கிலி போய் மீண்டு வரும்­போது வாச்­சி­ய­காரர் கள்­ளி­யங்­காட்­டெல்­லையில் வாச்­சி­யத்தை நிறுத்­தினர். உடனே சங்­கிலி வாச்­சி­யத்தை நிறுத்­திய கார­ணத்தை யாதென வின­வினான்.

அதற்கு வாச்­சி­ய­காரர் ”மகா­ரா­சாவே, இவ்­விடம் பர­நி­ரு­ப­சிங்க ராசா­வு­டைய எல்­லை­யா­தலின் வழக்கம் போல் நிறுத்­தினோம்” என்­றார்கள். அது கேட்ட சங்­கிலி ”பர­நி­ரு­ப­சிங்­கனைத் தொலைத்­தா­லன்றி இச்­சங்­கடந் தீராது” என மனது­ளெண்ணிப் பேசாது சென்றான்.

padaravaniyan பண்டாரம் வன்னியகளும் - காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை) padaravaniyanயாழ்ப்­பாண பிரி­வு­களைக் காட்டும் இணை­யத்­தள வரை­படம்

சங்­கிலி முறை­கேடு: இது நிகழ்ந்து சில நாளில், சங்­கிலி தனது மந்­தி­ரி­களுள் ஒரு­வ­னா­கிய அப்பா முத­லி­யி­னது புத்­தி­ரி­யு­டைய வடி­வ­ழ­கு­களைக் கேள்­வி­யுற்று, அவளைக் களவிற் கவரக் காலம் பார்த்தும் தூது­போக்­கியு மிருந்தான்.

அதனை அவள் தனது தந்­தைக்கு அறி­விக்க, அவன் அவளைப் பர­நி­ரு­ப­சிங்­க­னு­டைய அர­ண் ம­னைக்குக் கொண்டு போய­டைக்­கலம் வைத்து, அவனை நோக்கி ”வேந்தா என்­னையும் இக்­கன்­னி­கை­யையும் அவள் கற்­பையும் எனது குடும்­பத்தின் பெரு­மை­யையும் காத்­தருள்” என்­ற­ழுது விண்­ணப்பஞ் செய்தான்.

பர­நி­ரு­ப­சிங்கன் அப்­பா­மு­த­லிக்கு அப­யங்­கொ­டுத்துச் ”சங்­கி­லி­யி­னது கொடு­மை­யெல்லாம் பொறுத்தேன். இக்­கொ­டுமை சிறிதும் பொறுக்­க­மாட்டேன். அவனை அடக்கத் துணிந்தேன். இது செய்­யே­னாயின் அடைக்­கலத் துரோகம் செய்தார் புகும் நரகம் புகுவேன்” என்று சத்­தி­யமுஞ் செய்தான்.

காக்கை வன்­னியன்: உடனே ஒரு நிரு­ப­மெ­ழுதி “இதனை ஊர்­கா­வற்­றுறைக் காவல் பூண்­டி­ருக்கும் காக்­கை­வன்­னி­யிடஞ் சேர்ப்பி” என்று கூறி அப்பா கையிற் கொடுத்தான். அப்­பாவும் அதனைத் தனக்கு விசு­வா­ச­முள்­ள­வொரு தூத­னிடங் கொடுத்­த­னுப்­பினான்.

காக்கை வன்­னியன் அதனை வாங்கி வாசித்துப் பர­நி­ரு­ப­சிக­னுக்கு உத்­த­ர­வும­னு  அனுப்­பி­விட்டு, அடுத்த  நாளு­த­யத்தில் மரக்­க­ல­மேறித் தரங்கம்பாடியைய­டைந்து  பறங்கிப்   பிர­தி­நி­தியைக் கண்டு கலந்து, அவர்கள் வரு­வ­தற்குக் கால நிச்­சயம் பண்­ணிக்­கொண்டு மீண்­டு­வந்து யாதுமறியாதான்  போன்று தன் அதி­கா­ரத்தில் அமர்ந்தான்.

பறங்­கிகள்: உரிய காலத்தில் காக்­கை­வன்­னியன் சொல்­லிய சூழ்ச்­சிப்­படி பறங்­கிகள் வர்த்­தக வேட­மிட்டு வினோ­த­மான பண்­டங்­க­ளோடு பண்­ணைத்­து­றையில் வந்­தி­றங்­கினர்.

பறங்­கிகள் உடனே சங்­கி­லியைத் தரி­சித்து வணங்கி நின்று ”நாங்கள் வர்த்­த­கர்கள்: மகா­ரா­சா­வு­டைய அனும­தி­பெற்று இந்­நாட்டில் பண்­டங்கள் விற்­கவும் பண்­டங்கள் கொள்­ளவும் எண்ணிச் சமூ­கத்­தை­ய­டைந்தோம்” என்று விண்­ணப்பஞ் செய்­தார்கள்.

அது கேட்ட சங்­கிலி ”நீங்கள் அந்­நிய தேச­வா­சிகள்: வர்த்­தகர் என்­கின்­றீர்கள், உங்கள் கருத்து வேறொன்­றா­யி­ருக்­கலாம். ஆதலால் உங்­களை நம்­புதல் தகாத கருமம்” என்றான். பர­நி­ரு­ப­சிங்கன் இவர்கள் கொழும்பிற் கோட்டை கட்டி அரசு செய்யும் பறங்­கி­களைச் சேர்ந்தவர்­க­ளல்லர். இவர்கள் வர்த்­த­கர்­களே.

இவர்கள் எமது நாட்டில் வர்த்­தகஞ் செய்யின் எமது அர­சுக்கும் எமது நாட்­டுக்கும் நன்­மை­யுண்­டாகும். ஆதலால் மறாது அனு­மதி கொடுத்தல் நன்று” என்றான்.

சங்­கிலி அதற்­கி­சைந்து அவர்­களை நோக்கி நீங்கள் கூறு­வ­துண்­மை­யானால் பகற்­கா­லத்தில் மாத்­திரம் எனது நக­ரத்தில் வர்த்­த­கஞ்­செய்து பொழுதுபடுமுன்னே உங்கள் மரக்­க­லத்­துக்கு மீளுதல் வேண்டும். பொழு­து­பட்­ட­பின்னர் எனது நாட்­டிலே தங்கக் காணின் கொடி­ய­தண்டம் பெறுவீர்” என்றான்.

பறங்­கிகள் மகிழ்ந்து வணங்கித் தமது   மரக்­க­லத்­துக்கு மீண்டு, அடுத்த நாள் முதல் அவ்­வாறே வர்த்­தகஞ் செய்து வந்­தார்கள்.

ஒருநாள், அவர்கள் ”இராசா சாந்­த­மா­யினான் இனி அவனை வச­மாக்­குவோம்” என்று துணிந்து, நல்ல பட்­டா­டை­களும் வாசனைத் திர­வி­யங்­களும் பாத­கா­ணிக்­கை­யாகக் கொண்டு சங்­கிலி  கொலு  மண்­டபஞ் சென்று வணங்கி, அவற்றை அவன் சமூ­கத்தில் வைத்து  ”இவை­களை அங்­கீ­க­ரித்தல் வேண்டும்” என்று விண்­ணப்பஞ் செய்து நின்­றார்கள்.

சங்­கிலி அவை­களை உவந்­தேற்றான். அது கண்டு பறங்­கிகள்   தம­தெண்ணம் நிறை­வே­றி­ன­தென்று அக­ம­கிழ்ந்து  ”மகா­ரா­சாவே, பக­லெல்லாம் உண­வின்றி வர்த்­தகஞ் செய்து,   இர­விலே எங்கள் கப்­பலிற் சென்று போசனஞ் செய்து அங்­கேயே நித்­திரை செய்து வரு­கின்றோம்.

அது பெருங் கஷ்­ட­மாக விருக்­கின்­றது. ஆதலால் கரை­யிலே ஒரு சிறு­வீடு கட்டி அதி­லி­ருந்து வர்த்­த­கஞ்­செய்ய எங்­க­ளுக்கு அனுமதி தந்­த­ருள வேண்டும்” என்று விண்­ணப்பஞ் செய்­தார்கள்.

அவ்­வா­றா­குக” வென்று சங்­கிலி அவர்­க­ளுக்கு அனு­மதி கொடுத்து இட­மு­மெல்­லையுங் குறித்­து­விட்டான். அவ்­விடம் இப்­போது கோட்­டை­யி­ருக்­கு­மி­டமே. அந்­நாளில் அதுவும் அத­ன­யலும் மிரு­கங்கள் சஞ்­ச­ரிக்கும் அடர்ந்த காடா­யி­ருந்­தன.

பறங்­கிகள் கோட்டை கட்டல்: அவ்­வாறே பறங்­கிகள் 1680இல் அக்­காட்­டிலே வீடு­கட்­டு­வார்­போல மண்­ணினால் ஒரு கோட்­டை­கட்டி, ஆயு­தங்­களும் வெடி­ம­ருந்­து­களும் வேண்­டி­ய­மட்டுஞ் சேக­ரம்­செய்து, படை­வீ­ர­ரையும் இருத்திக் காலம் பார்த்­தி­ருந்­தார்கள். சங்­கி­லிக்கு இச்­செய்தி சிறிதும் புலப்­ப­டா­வகை வழக்­கம்­போலப் பறங்­கிகள் நக­ரத்­திற்­சென்று வர்த்­தகஞ் செய்து வந்­தார்கள். (1680 என்­பது தவ­றான ஆண்­டாகும்)

kodai பண்டாரம் வன்னியகளும் - காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை) kodaiயாழ்ப்­பா­ணத்தில் போர்த்­துக்­கே­யரின் கோட்டை

சங்­கிலி பறங்­கிகள் கோட்­டையைக் காணல்: ஒரு நாள் சங்­கிலி வேட்­டை­யாடிக் கட­லோ­ர­மாகத் தனது பரி­வா­ரத்­தோடு குதி­ரைமேல் வந்தான். அவன் பறங்­கிகள் கோட்­டை­யையும் கொடி­யையுங் கண்டான். புறத்தே வந்த துணை­வரை நோக்கி இஃதென்­ன­வென்றான்.

அவர்கள் பறங்­கி­க­ளு­றை­வி­ட­மென்­றார்கள். சங்­கிலி கண்கள் தீயெழச் சிவந்­தன. குதி­ரையைத் தூண்­டினான். அக்­கோட்டை வாயில் எதிரே வந்­தது. பறங்கித் தவைனும் எதிர்ப்­பட்டான்.

”யாது செய்­தனை? கோட்டை கட்ட அனுமதி தந்­தது யார்? என்றான். பறங்­கித்­த­லைவன் சிறிதுங் கூசாது ”நீயே தந்தாய்” என்றான். இதனை இக்­க­ணத்தே இடித்­து­விடக் கட­வை­யெனச் சங்­கிலி அதட்­டினான். பறங்­கித்­த­லைவன் இடிப்­ப­தில்­லை­யென்றான்.

சங்­கிலி, உனது கப­டத்­தையும் வீரத்­தையும் நாளை­ய­றிவேன் எனக் கூறிக் கோபா­வே­சனாய்த் தன­த­ர­ண்மனை சேர்ந்து சேனா­திப­தியை அழைத்து நாளை உத­யத்தில் பறங்­கி­க­ளோடு யுத்­தத்­திற்கு ஆயத்­த­மா­யி­ரு­வென்று கட்­ட­ளை­யிட்டான்.

kodai-1 பண்டாரம் வன்னியகளும் - காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை) kodai 1கோட்­டையின் மற்­று­மொரு தோற்றம்

யுத்த மூளல்: சேனா­திப­தியும் தனது படை­களை அணி­வ­குத்துக் கொண்டு பேரிகை முழங்­கவும் வீரர்கள் ஆர­வா­ரிக்­கவும் சென்று, வீர­மா­கா­ளி­கோயில் மேலை­வெளி­யிலே கடல்­போலப் பரப்பி நின்றான்.

பறங்­கி­களும் தமது சேனையைத் துப்­பாக்கி கையிலே தாங்கிச் செல்ல நடத்தி எதி­ரூன்­றி­னார்கள். சங்­கி­லி­படை அம்­பு­க­ளையும் கவ­ணினாற் கல்­லு­க­ளையும், வலிய வாள்­க­ளையும் பிர­யோ­கித்­தார்கள். பறங்­கிகள் தமது துப்­பாக்­கி­யினால் குண்­டு­களைப் பிர­யோ­கித்­தார்கள். இரு­பக்­கத்­திலும் அநேகர் காய­சே­தமும், சிலர் உயிர்ச்­சே­த­மு­முற்­றார்கள்.

யுத்தம்: முதல்­நாட்­போரில் வெற்­றி­ தோல்வி காணுமுன் சூரியன் அஸ்­த­ம­னமா­யிற்று. இரண்­டா­நாளும் இவ்­வாறு போர் செய்­தனர். பறங்­கிகள் தமது துப்­பாக்­கியை இலக்­குக்கு நீட்ட, ஒவ்­வொரு துப்­பாக்­கிக்கும் ஒவ்­வோராள் நின்று திரி­வாய்க்கு நெருப்பு வைக்க, அவை சில பற்­றியும் இலக்­குத்­தப்­பியும் சில பற்­றா­மலும் பொய்த்­தன.

சில வெடித்துக் குண்­டு­களைச் செலுத்­தின. இதற்­கி­டையில் அம்­பு­களும் கவண் கல்­லு­களும் எறி­யா­யு­தங்­களும், நஞ்­சூட்­டிய ஈட்­டி­களும் வளை­த­டி­யென்னுஞ் சக்­க­ரங்­களும் சங்­கி­லி­ப­டை­யி­னின்றும் சென்று தாக்­கின.

பறங்­கிகள் இவற்றால் தாக்­குண்டும் கலங்­காது யுத்தம் செய்­தனர். சங்­கிலி படையுந் துப்­பாக்கிக் குண்­டு­மா­ரியால் முதனாட் கலங்­கியு மிரண்­டாநாள் மிக்க தைரி­யத்­தோடும் ஊக்­கத்­தோடும் பொரு­தது. இரு­ப­கு­தி­யிலும் அநேகர் மாண்­டனர். மாண்டும் போர் நடந்­தது. அவ்­வ­ளவிற் சூரி­யனும் மேல்­க­டல்­வா­யாழ்ந்தான். சேனை­களும் தத்­த­மு­றை­விடஞ் சேர்ந்தன.

vndvn1 பண்டாரம் வன்னியகளும் - காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை) vndvn1பதி­னொ­ரா­நாட்போர்: இப்­ப­டியே பத்­துநாள் யுத்தம் நடந்­தது. சங்­கிலி பத்­தா­ம்நாளில் 1700 பறங்­கி­களைக் கொன்றான். பதி­னொ­ரா­நாளிற் சங்­கிலி போர்­வீரர் 400 பேரைத்    தரைப்­ப­டை­யாகத் திரட்­டிக்­கொண்டு,   மற்றப் படைகள் பின் செல்ல முன்­ந­டந்தான்.

பறங்­கிகள் துப்­பாக்கிப் போரிற் பய­னில்­லை­யென்று கண்டு வாட்­போ­ருக்­கா­யத்­தமாய் நின்­றனர். இரு­த­ரப்­ப­டை­களுங் கைக­லந்­தன. சங்­கிலி படை­வீரர்கள் பாய்ந்து வெட்­டினர். பறங்­கிகள் இனி நாம் சரண் புகு­வதே தக்­க­தென்­றெண்ணிப் பின்­வாங்கத் தலைப்­பட்­டனர்.

அச்­ச­மயம் தரங்­கம்­பா­டி­யி­லி­ருந்து பறங்­கி­க­ளுக்குத் துணைப்­ப­டை­யொன்று வந்து சேர்ந்தது. அதனால் பறங்­கிகள் ஊக்­கங்­கொண்டு முன்­னோக்கி நின்று பொரு­தனர்.

பறங்­கிகள் போர்க்­க­ளத்­துக்குப் பக்­கத்தே இரு­ம­ருங்­கு­முள்ள காட்­டி­னுள்ளே மறைந்­தி­ருந்து துப்­பாக்­கியால் பக்­கப்­ப­டையைக் கொண்டு குண்­டு­மா­ரியும் பொழி­வித்­தார்கள். சங்­கி­லி­யி­னது படையுங் கவண்­கல்­லு­களை எதிர்­ம­ழை­யாகப் பொழி­வித்­தனர்.

அன்­று­வ­ரைக்கும் நடந்த யுத்­தத்தில் பர­நி­ரு­ப­சிங்­கனும் மந்­தி­ரி­மாரும் யுத்­தத்திற் கருத்­தின்­றி­யி­ருந்­த­மையைச் சங்கிலி­கண்டு அதற்கு கார­ண­மென்­ன­வென்று வின­வினான்.

அவர்கள் ”பறங்­கி­க­ளு­டைய  யுத்­த­முறை புதி­தா­யி­ருப்­பதால் திகைத்­து­விட்டோம்” என்­றார்கள். சங்­கிலி ”உங்கள் வீரத்­திறல் நன்­றா­யி­ருக்­கின்­றது என்று பரி­க­சித்து, இனி யாதுக்கும் அஞ்­சா­தி­ருங்கள்” என்று கூறிப் போர்மேற் சென்றான்.

அற்­றை­நாட்­போரில் 2400 பறங்­கி­களைக் கொன்றான். ஈற்­றிலே பறங்­கிப்­படைத் தலை­வனும் சங்­கிலி வாட்­ப­டைக்­கி­ரை­யாகி மாண்டான். அவன் மாளு­தலும் பறங்கிவீரர் புறங்­கொ­டுத்­தோடத் தலைப்­பட்­டனர். அவர்­களைச் சங்­கிலி வீரர் தொடர்ந்து துரத்­தினர். பறங்­கிகள் ஓடிக் காட்டில் நுழைந்து மறைந்­தனர்.

சங்­கி­லியுந் தொடர்ந்து பறங்­கிகள் கட்­டிய கோட்­டையில் நுழைந்து, அங்­கி­ருந்த ஆண்பெண் சிறுவர் வயோ­திபர் யாவ­ரையும் கொன்று, அங்­கி­ருந்த திர­வி­யங்­க­ளையுங் கவர்ந்து கோட்­டை­யை­யு­மி­டித்துத் தரை­மட்­ட­மாக்­கினான். பறங்­கிகள் அஃத­றிந்து ஓடி ஊர்­கா­வற்­று­றையை அடைந்­தனர்.

இங்கே சங்­கி­லி­யி­னது படை­வீரர் வெற்­றிக்­க­ளிப்­பு­டை­யராய் வீர­மா­கா­ளிக்குப் பெரு­வேள்­வி­யிட்டு விழா­வணி செய்­வா­ரா­யினர். அப்­பொ­ழுது நாமிது செய்வோம், நாமிது செய்தல் வேண்­டு­மென்று ஒரு­தி­றப்­ப­டை­வீரர் ஒரு திறப்­ப­டை­வீ­ர­ருக்கு முந்த, அவருட் பெருங்­க­ல­க­முண்­டா­யிற்று. சேனா­திப­தியும் அச்­ச­மயம்    தனது பூசை­மே­லி­ருந்­த­மையால் அக்­க­ல­கத்தை அவ­னுக்கு அறி­விக்­கக்­கூ­டா­ம­லி­ருக்க, சங்­கிலி அஃது­ணர்ந்து  இவ்­வேள்­வியை  இன்று முடித்த­லா­காது  நாளை முடிப்­போ­மெ­னக்­கூறி, அக்­க­ல­கத்­தை­ய­டக்­கினான். அஃது அப்­ப­டை­வீ­ர­ருக்கு விச­னத்தை உண்­டாக்­கிற்று. அது நிற்க..

பறங்­கிகள் காக்கை வன்­னி­யனை நெருக்­குதல்: ஓடிப்­போன பறங்­கிகள் காக்­கை­வன்­னி­யனை யடைந்து ”நீ எங்­களைப் போருக்­கேவி விட்டுப் பின்னே நின்று விட்­டனை.

pandara_vanniyan பண்டாரம் வன்னியகளும் - காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை) pandara vanniyanசங்­கி­லியால் எமது சேனையிற் பதி­னா­யி­ர­வரும் தலை­வனும் மாண்­டார்கள். இப்­படி வஞ்சச் சூது­செய்­த­வுன்னைக் கொல்­வதே கருத்­தாக உன்பால் வந்தோம்” என்­றார்கள்.

அச்­ச­மயம் பர­நி­ரு­ப­சிங்கன் தூதனும் ஓலை­கொண்டு அங்­க­டைந்தான். அவ்­வோ­லையில், ”இது­வ­ரையும் வெளிப்­ப­டா­தி­ருந்தோம். இனி­வெளிப்­பட்டுக் கருமம் முடித்தல் வேண்டும். ஆயத்­த­மாக வரு­குக” என்­றெ­ழு­தி­யி­ருந்­ததைக் காக்­கை­வன்­னியன் பறங்­கி­க­ளுக்குங் காட்­டினான்.

பறங்­கிகள் உடனே மீண்­டு­போ­ருக்­கா­யத்­த­ராகிப் பின்னே செல்லக், காக்­கை­வன்­னியன் முந்­திச்­சென்று, விடி­யுமுன் நல்­லூ­ரை­ய­டைந்து பர­நி­ரு­ப­சிங்­க­னோடு கலந்து, மீண்டு மாறு­வேடம் பூண்டு பறங்­கிச்­சே­னை­யுள்ளே புகுந்தான்.

பறங்­கிகள் சேனை சூரி­யோ­த­யத்தில் மேலைக்­கோட்­டை­வா­யிலைச் சென்று வளைந்­தது. அது­கேட்டுச் சங்­கி­லியும் படை­களைத் திரட்­டிக்­கொண்டு ஆயத்­தமாய்க் கோட்டை வாயி­லை­ய­டைந்தான்.

அதற்­கி­டையில் பர­நி­ரு­ப­சிங்கன் கப­ட­மாகச் சேனா­திப­தி­யிடம் ஒரு­வ­னை­ய­னுப்பி, ”ஓரு­பாயஞ் சொல்­வ­தற்­காக ஓரொற்றன் வந்து கீழைக்­கோட்டை வாயிலிற் காத்து நிற்­கின்றான்” என்று அவ­னுக்­க­றி­வித்தான். அது­கேட்ட சேனா­திபதி அவ்­வொற்­றனை நாடிக் கீழைக்­கோ­புர வாயி­லை­ய­டைந்தான்.

காக்கை வன்­னியன் துரோகம்: இங்கே காக்­கை­வன்­னியன் வெளிப்­பட்டுச் சங்­கி­லியை காணச் செல்வான் போன்று செல்ல, சங்­கிலி அவன் வரவைக் கண்­டுள்ளம் பூரித்து, ஆருயிர்த் துணை­வ­னா­தலின் இச்­ச­மயம் வந்­த­னை­யெனக் கள்ளஞ் சிறி­து­மெண்­ணாது எதி­ரோடித் தழு­வினான்.

வஞ்சத் துரோ­கி­யா­கிய காக்­கை­வன்­னியன் தன் கன்­னெஞ்சம் சங்­கி­லி­யி­னது உண்­மை­யான அன்­பு­ரைக்கும் உப­சா­ரத்­துக்கும் சிறிதும் நெகி­ழாது கொடிய வயி­ர­மாக, எதிர்­த­ழு­விய கையி­ரண்­டையும் கொண்டு நெகி­ழ­வி­டாது கட்­டிப்­பி­டித்துக் கொண்டான்.

சங்­கிலி சிறைப்­படல்: பறங்­கிகள் இக்­கொ­டிய வஞ்சத் துரோ­கியின் கண்ணை நோக்கி நின்­றனர். கண்ணாற் குறி­காட்­டினான். பறங்­கிகள் ஓடி அவனைப் பிடித்­துக்­கட்டி விலங்­கிட்­டனர். சங்­கி­லி­யி­னது படை­வீரர் துடித்து வாளை உறை­க­ழித்­தனர்.

பர­நி­ரு­ப­சிங்­கனும் தனது சப­த­மு­டிக்கக் கருதிச் சேனா­திப­தி­ய­னு­ம­தி­யின்றிப் போர் தொடங்­க­லா­கா­தென்று தடுத்தான். அவர்கள் வாளி­லிட்ட கையோடு சேனாதி­பதி வரவை ஆவ­லோ­டெதிர் நோக்கிப் பதைத்து நின்­றனர்.

சேனா­ப­தியும் என்­செய்தேன் என்று மூச்­சு­வி­டா­தோ­டி­வந்தான். இடை­வ­ழியில் வஞ்­ச­வன்­னியன் சூழ்ச்­சிப்­படி பதுங்கியிருந்த பறங்­கி­வீரர் அவனை வளைந்து தமி­ய­னா­யி­ருந்­த­மையால் ஒரு வீச்சில் அவன் சிரசைக் கொய்­தனர்.

பர­ரா­ச­சே­கரன் காட்­டுக்­கோடல்: பறங்­கிகள் செயபேரி முழக்கிக் கோட்­டை­யி­னுள்ளே புகுந்து கொடி­யு­யர்த்­தினர். இத­னை­ய­றிந்த *ப­ர­ரா­ச­சே­கர சக்­ர­வர்த்தி பறங்­கி­க­ளுக்­குட்­பட்டு அர­சா­ளு­வ­திலும் காடா­ளு­வதே நன்­றெனத் துணிந்து வன்­னிக்­காட்­டுக்­கோடி ஒளித்தான்.

பறங்­கிகள் அவனைத் தேடிக் காணா­மையால் அவ­னி­ருக்கும் இடத்தை அறிந்து சொல்­ப­வர்க்கு *இ­றைசால் இரு­பத்­தை­யா­யிரம் பரி­சாகக் கொடுக்­கப்­ப­டு­மென்று பறை­ய­றி­வித்­தனர்.

அது­கேட்டு அவ­னி­டத்து முதன் மந்­தி­ரி­யா­யி­ருந்த ஒரு கன்­னெஞ்சப் பார்ப்பான் பொரு­ள­வா­வென்னுங் கொடிய பேய்­வாய்ப்­பட்டு வன்­னிக்­காட்­டுக்குச் சென்று   ஓரி­ள­நீரும் எலு­மிச்­சம்­ப­ழமுங் கையிற் கொண்டு தேடித்­தி­ரிந்தான். (பர­ரா­ச­சே­கர சக்கர­வர்த்தி : சங்­கிலி மற்றும் பர­நி­ரு­ப­சிங்கன் ஆகி­யோரின் தகப்­பனார்) (இறைசால் ஸ்ரீ முக்கால் ரூபா)

அரசன் அவ­னைக்­கண்டு கூவி­ய­ழைத்தான். பார்ப்பான் தேடி­ய­பொருள் தானே சிக்­கி­ய­தென்று மனம்­பூரித்து அர­ச­னி­டம்போய் ஆசீர்­வா­தஞ்­சொல்லிச் சுகம் விசா­ரித்து இவ்­வி­ள­நீரையுண்­ணு­மென்று நீட்­டினான். அரசன் இரு­கை­யா­லு­மேற்றுத் தன் உடை­வாளால் அதனைத் திறந்து பருகத் தொடங்­கினான்.

எலு­மிச்­சம்­  ப­ழ­மி­ருக்­கின்­றது வாளைத்­தாரும் வெட்டிப் பிழிந்து இள­நீரில் விடுவேன் என்று பார்ப்பான் கூற, அரசன் வாளை அவன் கையிற் கொடுத்தான். அவன் அதனை வாங்கிப் பழத்தை வெட்டிப் பிழிந்­து­விட, அரசன் இரு­கை­யா­லு­மேந்தி   இள­நீரைக் குனிந்து பரு­கினான்.

குனிந்து பருகக் காதகப் புலை­ய­னா­கிய அப்­பார்ப்பான் அவ்வாள் கொண்டு அரசன் சிர­சைக்­கொய்து எடுத்துப் பொதி செய்து கொண்டு வந்து பறங்­கித்தலைவன் கையிற் கொடுத்தான்.

அவன் அதனை வாங்கி அவிழ்த்துப் பார்த்துப் பிர­மித்து யாது செய்­தாய்­பு­லையா” என்று பெருஞ் சினங்­கொண்டு ”நீ சிறிதுங் கூசாது செய்த இப்புலைத்தொழிலுக்குத் தரத்தக்க பரிசு இதுவே” எனக் கூறி உடைவாளையிழுத்து அந்நிலையிலேதானே அவன் சிரசைக் கொய்தான்.

சங்கிலியைக் கொல்லல்: அதன் பின்னர் பறங்கிகள் சங்கிலியை நீதசனத்தார் சபை முன்னேயிட்டு குற்றநிரூபணஞ் செய்வித்து அவனை சிரச்சேதஞ் செய்து கொல்லுமாறு தீர்ப்பிட்டனர். அவ்வாறே காளிகோயிற் சந்நிதியில் பறங்கிகள் அவனைச் சிரச்சேதஞ்செய்து கொன்றனர். அதுகேட்டுச் சங்கிலிதேவி தீ வளர்த்து அதிற்பாய்ந்துயிர் விட்டாள்.

சங்­கி­லி­யி­னது தேவி, தீப்­பா­யுமுன் இத்­தீ­வி­னை­யி­ழைத்த காக்­கை­வன்­னியன் மனை­வியும் தன்­னைப்­போலத் துய­ர­டைதல் வேண்­டு­மென்­றெண்ணி, ஒரு தூத­னை­ய­னுப்பிச் சங்­கி­லி­யோடு காக்­கை­வன்­னி­யனும் பறங்­கி­களால் மடிந்தான் என்­ற­வ­ளுக்கு அறி­வித்தாள். அது­கேட்டுக் காக்­கை­வன்­னியன் மனை­வியும் தீப்­பாய்ந்­து­யிர்­ விட்டாள்.

பர­நி­ரு­ப­சிங்கன் திறை­ய­ரசு: பர­நி­ரு­ப­சிங்­கனும் பறங்­கி­களும் இர­க­சி­ய­மாகப் பொருந்திக் கொண்­ட­படி பறங்­கிகள் பர­நி­ரு­ப­சிங்­கனைத் திறை­ய­ர­ச­னாக்கி அவன் மகன் பர­ரா­ச­சிங்­கனை அவ­னுக்குக் கீழ் ஏழூ­ர­தி­ப­னாக்­கி­னார்கள். அதன் பின்னர் காக்­கை­வன்­னி­ய­னுக்குப் பெருந்திரவியமும் ஊர்காவற்றுறை அதிகாரமும் வேறு வரிசைகளும் கொடுத்தார்கள்.

வினிய தாபிர பேனியா (Vinea Tabrobanea) என்னுஞ் சரித்திரம், பறங்கிகள் 1590இல் யாழ்ப்பாணத்திலே படையேற்றிச் சங்கிலியோடு யுத்தம் செய்து அவன் மூத்த மகனையும் கொன்று அரசைக் கொண்டனர் என்று தெரிவிக்கின்றது. (யா.ச.ஆ.மு.1915. பக்கம் 63-73)

வரலாற்றாசிரியர் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய இந்த வரலாற்றிற்கு 1933ஆம் ஆண்டு இராசநாயகம் முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரத்தில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழப்பமான வரலாறு பற்றி விரிவாக பல ஆய்வுகளை செய்த தமிழ் வரலாற்றாசிரியர்கள், வரலாற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் காக்கை வன்னியனார் ஊர்காவற்றுறையில் இருந்தார் என்பதை இராசநாயகம் முதலியாரோ, அல்லது பின்வந்த வரலாற்றாசிரியர்களோ மறுத்துரைக் கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(-வரலாறு தொடரும்…)-

-அருணா செல்லத்துரை -

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News