ilakkiyainfo

ilakkiyainfo

புலிகளை உருவாக்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தயார்!!: விஜயகலா தலைமையில் போராட தமிழர்களே நீங்கள் தயாரா??

புலிகளை உருவாக்க  அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தயார்!!: விஜயகலா தலைமையில் போராட   தமிழர்களே நீங்கள் தயாரா??
July 02
13:36 2018

இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஐனாதிபதியின் மக்கள் சேவையின் எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரு ம்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்.” என்று தெரிவித்தார்.

“அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தனது கட்சியை வளர்கின்றார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை.”

“நாங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” என்றார்.

ஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம் .ஏ.சுமந்திரன்,ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

1 Comment

  1. Niyayam
    Niyayam July 03, 13:53

    இப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். இவருக்கும் வட முதல்வருக்கும் தற்போது தான் உணர்வு ஏற்பட்டுள்ளது

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

கோட்டாவை தொடடால் சிறு பான்மை இனங்களே இலங்கையில் இருக்காது என்பது ஜூலை 1983 கலவரத்தை வழி நடத்திய [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News