ilakkiyainfo

ilakkiyainfo

புலிகளை பழிவாங்க செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை புலிகளின் பயிற்சி முகாம் என அரசுக்கு தகவல் கொடுத்த சிறிதரன்!! சிறிதரன் மீது டக்ளஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

புலிகளை பழிவாங்க செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை புலிகளின் பயிற்சி முகாம் என அரசுக்கு தகவல் கொடுத்த சிறிதரன்!!  சிறிதரன் மீது டக்ளஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
August 08
15:53 2019

• பொதுமக்களின் நகைகளுடன் செஞ்சிலுவை வாகனத்தில் தப்பி வந்தார்; மகிந்தவுடன் இரகசிய உறவு; சிறிதரன் மீது டக்ளஸ் பரபரப்பு குற்றச்சாட்டுக்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது பல பரபரப்பு குற்றச்சாட்டுக்களை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா.

டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் கடந்த மாதம் 31ம் திகதி நாடாளுமன்றத்தில் சிறிதரன் தெரிவித்த கருத்துக்களிற்கு பதிலளிக்கும்போதே இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் எம்மீது சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென அவர் ஒப்புவிக்க முடியுமானால், வெறுமனே கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் உங்களுடைய அரசு, நீங்கள் கொண்டு வந்த ஆட்சி என்று கூறும் நீங்கள் அதை வைத்து ஏன் உங்களால் எம்மீதான ஒரு நீதி விசாரணையை நடத்த முடியாமல் இருக்கின்றீர்கள்?

தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டால் நீங்கள் வாக்குகளை அபகரித்து அரசியல் பிழைப்பு நடத்தக் காரணங்கள் இல்லாமல் போய் விடும்.

அது போலவே எம்மீது அடிக்கடி அவதூறு பரப்பும் நீங்கள் எம்மீதான நீதி விசாரணையை நடத்தி அதற்கு நியாத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டால் தொடந்தும் உங்களால் எம்மீது அவதூறுகளைப் பரப்பப் காரணம் இல்லாமல் போய் விடும்.

ஆகவேதான் உங்களால் எதையும் பேசிப் பிழைப்பு நடத்த மட்டும் முடியுமே தவிர, எதையும் சாதித்துக் காட்ட வக்கற்றவர்கள் என்பதையே நீங்கள் மெய்ப்பித்து வருகிறீர்கள்.

உங்கள் அரசியல் பலத்தை வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தான் உங்களால் காண முடியவில்லை.

அதே அரசியல் பலத்தை வைத்து அடுத்தவர் மீதான உங்கள் அவதூறுகளுக்கு ஒரு நீதிவிசாரணையை ஆவது நீங்கள் நடத்திக் காட்டலாமே என்றுதான் உங்களிடம் சவால் விடுத்துக் கேட்கிறேன். நான் தயாராகவே இருக்கின்றேன். நடத்துங்கள் நீதி விசாரணையை!

அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பும் இவர்கள் அதற்கு ஆதாரம் கேட்டால் துணைக்கு அழைப்பது விக்கி லீக்ஸ் இணையத்தையும் தமது பினாமி ஊடகங்களையுமே. மேற்குலக வெளிநாட்டு இராஜதந்திரிகள் இங்கு வருவார்கள்.

இலங்கையில் என்ன நடக்கின்றது என்று அவர்களில் சிலர் நேரில் எங்கும் சென்று ஆராய்வதில்லை.

தாம் சந்திக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் அவிழ்த்துவிடும் அடுத்தவர்கள் மீதான அவதூறுகளையே தாம் திரட்டும் தகவல் என்று கூறித் தத்தமது நாடுகளுக்கு சில ராஜதந்திரிகளை அனுப்புவார்கள்.

அந்தத் தகவல்களைத் திருடியே விக்கிலீக்ஸ் வெளியிட்டுப் பரபரப்புக் காட்டும். ஆகவே எம்மீது சேறடித்து தோற்றுப்போன விக்கிலீக்ஸ் செய்தியாளர்களான தமிழ் கட்சித் தரகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழரின் விடுதலைக்காக சிறு இறகைக்கூட இழந்திருக்காத கூரைக்கோழிகள், இன்று புலிகளின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவது ஏன் என்று கேட்கிறேன்.

மனித குல நாகரீகமே வெட்கித் தலைகுனியும் வகையில் கிளிநொச்சியில் சமூகச் சீரழிவில் ஈடுபட்டுப் புலிகள் இயக்கத்தால் கைது செய்யப்பட்ட இவர் இன்று தானும் ஒரு புலி என்று கூறி மக்களுக்கு புலுடா விடலாமா என்று நான் கேட்கிறேன்.

அண்ணன் தங்கை, அப்பு ஆச்சி, பாட்டன் பூட்டி, கட்டி வளர்த்த தமிழர் பண்பாட்டின் பாரம்பரியத்தையே வெட்கித் தலைகுனிய வைத்த விறகுக்கட்டை வீரன்.

தமிழர் பண்பாடு குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேச அருகதை உள்ளவரா என நான் கேட்கிறேன்.

புலிகளின் பயிற்சிப் பாசறையில் இருந்து தப்பி வருவதற்கு அவர் அதற்குப் பரிகாரமாகத் தன்னிடம் கல்விகற்ற மாணவச் செல்வங்களைப் பயிற்சி முகாமில் பணயம் வைத்துவிட்டு வந்திருந்தார். இது யுத்தக்குற்றம் இல்லையா என்று கேட்கிறேன்.

சந்தர்ப்பம் பார்த்துப் புலிகளிடமிருந்து தப்பி வந்த அவர் பொதுமக்களிடம் இருந்து சேகரித்த தங்க நகைகளை அபகரித்து செஞ்சிலுவைச் சங்க வாகானத்தில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்தாரே, அந்தத் தங்க நகைகள் எங்கே?

அதற்கு விசாரணை இல்லையா என்று கேட்கிறேன். ஒரு புறம் புலி முகம்! மறு புறம் சிங்க முகம்!

இரட்டை முகவராகச் செயற்பட்டு, தன்னைக் கைது செய்த புலிகள் இயக்கத்தைப் பழிவாங்க செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை புலிகளின் பயிற்சி முகாம் என அரசுக்கு தகவல் வழங்கியிருந்தார். இதற்கு நீதி விசாரணை இல்லையா என்று கேட்கிறேன்.

பலருக்கும் தெரியாத இரகசியம். 2009இல் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை திரை மறைவில் சந்திக்க முனைந்ததுதான்.

இன்றுகூடப் பேசுவது தமிழ் தேசியம். திரை மறைவில் அரசுடன் நடத்துவது தேன்நிலவு.

இறுதியாக, உனது கண்களை மறைக்கும் மரக்குற்றியை அகற்றிக்கொள். பிறரது கண்களை மூடும் சிறு மரத்தூசிகள் உன் கண்களில் தெரியும். எம்மீது அவதூறு பரப்புவோருக்கு இதை நான் கூறிக்கொண்டு இத்துடன் முடித்தாலும் தொடரும்“ என குறிப்பிடப்பட்டிருந்தது.


Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News