ilakkiyainfo

ilakkiyainfo

பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!!

பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!!
January 10
18:40 2017
உலகின் பல நாடுகளில், பல இன மக்கள் இடையே வினோதமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டு வருவது மிகவும் சாதாரணம் தான். ஆனால், அதில் சில சடங்குகள் வினோதமாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் தங்கள் துணையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு வினோதமான, விசித்திரமான சடங்குகள் நிறைய இருக்கின்றன.
ஆனால், பெண்களின் உடலமைப்பை கலாச்சாரம், பாரம்பரியம், அவர்களின் பாதுகாப்பு என்று கூறி மிகவும் கொடூரமான முறையில் சடங்கு என்ற பெயரில் உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இவை அவர்களை உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிப்படைய செய்கிறது என்பது தான் உண்மை.
இதில் சிலவன இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது தான் சோகத்தின் உச்சக்கட்டம்..
20-1447994854-1themostextremefemalebodymodificationpracticesfromaroundtheworld  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!! 20 1447994854 1themostextremefemalebodymodificationpracticesfromaroundtheworld
முர்சி லிப் ப்ளேட்டிங் (Mursi Lip Plating)

உலகின் மிகவும் பழமையான பெண் உடல் மாற்றமைப்பு சடங்குகளில் முர்சி லிப் ப்ளேட்டிங்கும் ஒன்றாக இருந்து வருகிறது. ஏறத்தாழ 8700 B.C-ல் இருந்து இந்த சடங்கு முறை நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சடங்கு முறையில் பெண்களின் இதழ் ஓர் வட்ட ப்ளேட் பயன்படுத்தி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

திருமணம் ஆகும் பெண்களுக்கு அல்லது இளம் பெண்களுக்கு இவ்வாறு செய்யப்படுகிறது.

இதை வாழ்நாள் முழுக்க அணிய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை எனிலும், கணவனுக்கு உணவு பரிமாறும் போது, சடங்கு சம்பிரதாயங்கள் நிகழும் போது அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

Kayan_woman_with_neck_rings  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!! Kayan woman with neck rings

கான் நெக் ஸ்ட்ரெச்சிங் (Kayan Neck Streching)

(அன்றைய பர்மா) இன்றைய மியான்மர் பகுதியில் பெண்கள் பின்பற்றும் ஓர் வினோத சடங்கு இது. கழுத்தில் வளையங்கள் அணிந்து நீட்டிப்பு செய்வது.

பித்தளை வளையங்களை இவர்கள் அணிகிறார்கள்.  (அன்றைய பர்மா) இன்றைய மியான்மர் பகுதியில் பெண்கள் பின்பற்றும் ஓர் வினோத சடங்கு இது. கழுத்தில் வளையங்கள் அணிந்து நீட்டிப்பு செய்வது. பித்தளை வளையங்களை இவர்கள் அணிகிறார்கள்.

ஓர் பெண் தனது ஐந்து வயதில் இருந்து இதை அணிந்து வர வேண்டும். ஏறத்தாழ 10 வது வயதில் இருந்து மியான்மர் பெண்கள் இதை தங்களது ஓர் உடல் உறுப்பாகவே உணர தொடங்குகிறார்கள்.இதை அணியவேண்டும் என்பது கலாச்சார முறையாக மியான்மரில் இருந்து வருகிறது.
சீனர்களின் கால் பிணைப்பு (Chinese Foot Binding) இந்த சடங்கு மிகவும் வலி மிகுந்ததாக இருந்து வருகிறது. கால் பாதத்தை பிணைப்பு செய்வது என்பது மிகவும் கொடூரமானது.கொஞ்சம் சிறிய அளவு ஷூவை சில மணிநேரம் அணிவதே வலி மிகுந்தது. ஆனால், இதை இவர்கள் சடங்கு என்ற பெயரில் எப்போதும் அணிகிறார்கள். இந்த சடங்கு முறை பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
chinese-foot-binding-041  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!! chinese foot binding 041
சீனர்களின் கால் பிணைப்பு (Chinese Foot Binding)

இந்த சடங்கு மிகவும் வலி மிகுந்ததாக இருந்து வருகிறது. கால் பாதத்தை பிணைப்பு செய்வது என்பது மிகவும் கொடூரமானது.

கொஞ்சம் சிறிய அளவு ஷூவை சில மணிநேரம் அணிவதே வலி மிகுந்தது. ஆனால், இதை இவர்கள் சடங்கு என்ற பெயரில் எப்போதும் அணிகிறார்கள். இந்த சடங்கு முறை பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

1662903087_1389791545  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!! 1662903087 1389791545
சீனர்களின் கால் பிணைப்பு (Chinese Foot Binding) இது வாழ்நாள் முழுக்க அணிய வேண்டும் என்ற கட்டாயம் நிலவி வருகிறது.இதை அணிவதால் பெண்களின் கால்கள் பொம்மையின் கால்களை போல மாறிவிடுகிறது. இது அவர்களை மனதளவிலும், உடலளவிலும் மிகவும் புண்படுத்துகிறது.சீனாவின் டாங் மற்றும் சாங் இராஜ்ஜியத்தின் காலக்கட்டத்தில் இருந்து இது பின்பற்றப்படுவதாக கருதப்படுகிறது.

Tight-Lacing-Corset_zpsb4c4e244  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!! Tight Lacing Corset zpsb4c4e2441 nnnnnnnnn  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!! nnnnnnnnn

விக்டோரியன் டைட் லேசிங் (Victorian Tight Lacing)
பிரிட்டிஷ்காரர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக பின்பற்றப்பட்டது.இவ்வாறு உடை அணிந்து பல மணிநேரம் இருக்கும் போது பலமுறை பெண்கள் மயக்கம் அடைவதுண்டு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை சார்ந்த ஆங்கில திரைப்படங்களில் நீங்கள் இவ்வாறான உடை அணியும் முறையை நன்றாக காணலாம்.
20-1447994887-5themostextremefemalebodymodificationpracticesfromaroundtheworld  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!! 20 1447994887 5themostextremefemalebodymodificationpracticesfromaroundtheworld

காமரூன் மார்பக மாற்றமைப்பு (Cameroonian Breast Ironing)

காமரூன் பகுதியில் பெண்களுக்கு மார்பகங்கள் வளர்வது அவமானமாக கருதப்பட்டு இஸ்திரி செய்வது போல பெண்களின் மார்பகங்களில் சூடு வைக்கப்படுகிறது.இளம் வயதில் பெண்களுக்கு மார்பகம் வளரும் போதே இவ்வாறு செய்ய தொடங்கிவிடுகிறார்கள்.இது பெண்களுக்கு பாதுகாப்பானது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் இது அந்த பெண்களின் மனநிலையை மிகவும் பாதிக்கிறது என்பது தான் உண்மை.

20-1447994893-6themostextremefemalebodymodificationpracticesfromaroundtheworld  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!! 20 1447994893 6themostextremefemalebodymodificationpracticesfromaroundtheworld

மென்த்தவாய் பற்கள் கூர்மைப் படுத்துதல் (Mentawai Teeth Cheseling)
மென்த்தவாய் எனும் தீவு இந்தோனேசியா அருகில் இருக்கும் ஓர் சிறிய தீவு.இங்கு பெண்களின் பற்களை கூர்மையாக்குவது என்பது ஓர் சடங்காக நடத்தப்பட்டு வருகிறது.ஓர் பெண் பருவமடையும் போதே அவளது பற்கள் கூர்மையாக்கப்படுகிறது. இது அவர்களை அழகாக காட்டுகிறது என்று அந்த தீவில் இருக்கும் மக்கள் கருதுகிறார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

ஆசியாவின் துரோகிகள் அழியும் காலம் வந்து விட்ட்து போல் தெரிகிறது. அந்நியனை ஆசியாவில் தளம் அமைக்க விட்ட்து [...]

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

இலங்கை பத்திரிகைகள்

English News