ilakkiyainfo

ilakkiyainfo

பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா?

பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா?
January 25
06:30 2018

ஒரு பெண், தனது முதல் மாதவிடாயை அடைவதில் என்ன பெரிய விஷயம் இருந்துவிடப் போகிறது? தமிழ் கலாசாரத்தில் அது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுவதோடு, அதைத்தொடர்ந்து ஒரு பெரிய நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

என் மூத்த சகோதரிக்கான நிகழ்ச்சியை நடத்த, குடும்பத்தினர் தயாராகியபோது, எதற்காக என்றே எனக்கு புரியவில்லை. ஆர்வ மிகுதியால், இந்த சம்பிரதாயத்தின் முக்கியத்துவம் குறித்து என் குடும்பத்தினரிடம் கேட்டேன்.

என் சகோதரி `பெரிய பெண்` ஆகியுள்ளதால் இந்த நிகழ்ச்சி நடப்பதாக அவர்கள் கூறியதும், அந்த அறியாத வயதில் எல்லா ஆண் குழந்தையும் கேட்கும் கேள்வியைதான் நானும் கேட்டேன்.

“நான் `பெரிய பையன்` ஆகியதற்கான நிகழ்ச்சி எப்போது?” என்று நான் கேட்டேன்.

என் குடும்பத்தினர் அன்று எதற்காக அவ்வளவு நேரம் சிரித்தார்கள், வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும், அந்த கதையை ஏன் தொடர்ந்து கூறிக்கொண்டு இருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள, எனக்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.

பூப்படைதல் என்றால் என்ன?

பூப்படைதல் என்பது, ஓர் உடல், இனப்பெருக்கம் செய்ய தயாராகி விட்டது என்பதை குறிக்கும் விஷயம். தமிழ் கலாசாரத்தில், பூப்படைதல் நிகழ்ச்சி நடத்தப்படுவது என்பது, பெண்களின் சக்தியை அடையாளப்படுத்துவதற்கே.

“என் ஆண் உறவினர்களிடம் நான் என்ன கூறுவேன்? என் துணியில் படிந்துள்ள கறையை கொண்டாட வந்ததற்கு நன்றிகள் என்றா? எஸ்டி, 22 வயது பெண்”

இது தூய்மையான, அபாயகரமான இயற்கை சக்தி என்பதால், இவை கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்று நம்பப்பட்டது.

இதன்மூலம், மாதவிடாயை அடைந்த பெண், மனப்பக்குவத்தை அடைந்துவிட்டார் என்று பார்க்கப்பட்டது. அதோடு, அவர் குறிப்பிட்ட சில தூய்மையற்ற பலவீனங்களுக்கு ஆளாகக்கூடும் என்றும் பார்க்கப்பட்டது.

ஆண் `வயதை அடைதல்` என்பது, தானாக நடக்கும் என்று பார்க்கப்பட்டாலும், மாதவிடாயை அடையாத பெண்கள், பெண்மையில் முழுமை அடையாதவராக பார்க்கப்படுகிறார்.

ஆகவே, இந்த நிகழ்ச்சி என்பது, இளம்பெண், பெண்மணியாக மாறுவதை பெருமையாக கொண்டாடும் நிகழ்ச்சி. இதன்மூலமாக அவர் திருமணத்திற்கும், குழந்தைகளை பெறவும் தயாராகிவிட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.

“என் ஆண் உறவினர்களிடம் நான் என்ன கூறுவேன்? என் துணியில் படிந்துள்ள கறையை கொண்டாட வந்ததற்கு நன்றிகள் என்றா? என்று கேட்கிறார், 22 வயதுடைய பெண் ஒருவர்.

“குளியல் அறையில், என் தங்கையிடம் ரகசியமாக, என்னுடைய மாதவிடாய் குறித்து கூறிக்கொண்டு இருந்த நேரத்தில், வெளிநாட்டில் வாழும் என் உறவினர்களிடம் என் அம்மா இதை கூறிக்கொண்டு இருந்தார்” எஸ்பி, 27 வயது பெண்.

முதல் மாதவிடாய், பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டது. அந்த கட்டுப்பாட்டில், சமைக்கப்படாத முட்டை சாப்பிடுவது, காலையில் கடலை எண்ணைய் குடித்தல், உணவிற்குப் பிறகு குறைந்த அளவு தண்ணீரே குடித்தல், இனிப்பு உணவுகளை சாப்பிடாமல் இருத்தல் ஆகியவையும் அடங்கும்.

அப்பெண்ணின் வயிறு வீங்குவதை தவிர்க்கவே, தண்ணீர் குறைவாக குடிக்கப்படுகிறது. மேலும், அடுத்து வரவிருக்கும் மாதவிடாய்களின் வலியை குறைக்கவும் இந்த உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

மாதவிடாய் நேரத்தில் பெண் கோவிலுக்கு செல்லக்கூடாது, பூசைக்கான பாத்திரங்களை தொடக்கூடாது, பொதுவாக வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது ஆகியவையும் சில கட்டுப்பாடுகளே.


_99665889_1f09c7ad-1e24-4337-9ea2-d66b4ea9420b  பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா? 99665889 1f09c7ad 1e24 4337 9ea2 d66b4ea9420b
என் மகள், `பெரிய பெண்` ஆகிவிட்டார்!


ஒரு பூப்படைதல் நிகழ்ச்சி என்பது, நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து கொண்டாடப்படுவது. நிகழ்ச்சிக்கு வருவோர் அழகான பரிசுகளோடு வருவார்கள். அவர்களுக்கு நல்ல உணவுகள் பரிமாறப்படும்.

முதல் மாதவிடாயின் முதல்நாள், அப்பெண், தனது நெருங்கிய உறவினர்களால், குளிப்பாட்டி, தனிமைப்படுத்தப்படுவார். அதன்பிறகு, அவருக்கு மிகவும் சுகாதாரமான உணவுகள் அளிக்கப்படும்.

இந்த தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்தபிறகு, மீண்டும் அவரை குளிப்பாட்டி, புடவை அணிவார். மீண்டும் வீட்டின் முக்கிய அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்.

புடவை அணிதல் என்பது, அப்பெண் பாலியல் ரீதியாக பக்குவப்பட்டுவிட்டார் என்பதை குறிக்கிறது.

“இது வெறும் வயதிற்கு வரும் நிகழ்ச்சி. பல்வேறு கலாச்சாரங்களில் இவை உள்ளன. இது நம் கலாச்சார மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதி. யூத ஆண்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சியைப்போன்றது” விகே, 25 வயது பெண்”

“குளியல் அறையில், என் தங்கையிடம் ரகசியமாக, என்னுடைய மாதவிடாய் குறித்து கூறிக்கொண்டு இருந்த நேரத்தில், வெளிநாட்டில் வாழும் என் உறவினர்களிடம் என் அம்மா இதை கூறிக்கொண்டு இருந்தார்” என்கிறார் 27 வயதாகும் பெண் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியை எவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள் என்பது, அந்தந்த குடும்பத்தின் விருப்பத்தை பொருத்தது. மிகவும் நெருக்கமான உறவினர்களைக் கொண்ட ஒரு சிறிய நிகழ்ச்சியில் தொடங்கி, உள்ளூர் தபால்காரருக்குக்கூட தெரியும் அளவிற்கு இந்த கொண்டாட்டம் நடைபெறும்.

என் சகோதரியின் நிகழ்ச்சிக்காக, பெற்றோர் வீட்டின்கீழ் இருந்த ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து 100 பேர் வரை அழைத்து விழாவை நடத்தினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, என் உறவினரின் மகளின் நிகழ்ச்சி என்பது, ஆயிரம் பேர் கலந்துகொள்ளக்கூடிய ஒரு பெரிய மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. வெவ்வேறு வகையான ஆடைகளையும் அவர் அணியவேண்டி இருந்தது.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

_99665891_gettyimages-136061098  பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா? 99665891 gettyimages 136061098

“பெண்களுக்கான உரிமை என்பது, மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மாதவிடாய் கால சுகாதாரம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இத்தகைய `பூப்படைதல்` நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுக்கும்போது, பாலியல் ரீதியாக எடுக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தை அவர்கள் அடையும், அந்த சாதாரண காலம் என்பது மரியாதையை இழக்கிறது” என்கிறார், 27 வயதாகும் டி.எஸ் என்னும் பெண்.

பண்டைய காலங்களில், பதின்பருவத்திலேயே பெண்கள் திருமணம் செய்ய அனுப்பப்படுவர். திருமணத்திற்கு, குறிப்பிட்ட அந்த பெண் தயார் என்பதை விளம்பரப்படுத்துவதற்கு, இந்தப் பூப்படைதல் நிகழ்ச்சிகள் பெரிய பங்கு வகித்தன.

“பெண்களுக்காக உரிமை என்பது, மிகவும் மிகைபடுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மாதவிடாய்கால சுகாதாரம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய `பூப்படைதல்` நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுக்கும்போது, பாலியல் ரீதியாக எடுக்கப்படுகிறது.”

ஆனால், இந்த காலத்தில், பெண்கள் பூப்படைதல் காலத்திற்கும், திருமணத்திற்கு இடையே பெரிய இடைவேளை உள்ளது. இளம் வயதில் இந்த உடல்ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகும் பெண்கள், அதிக வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், பல பெண்கள் பெற்றோரால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான கலாச்சார முக்கியத்துவத்தை பெண்களிடம் எடுத்துக்கூறி, அவர்களின் கருத்தையும் பெற்றோர் கேட்க வேண்டும்.

 

இந்த கால சமூகத்திற்கும் இந்த நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்புள்ளது நேயர்களே?

மகளிரே, இத்தகைய பழக்கவழக்கங்களில் உங்களின் அனுபவம் என்ன?

அதிலும் முக்கியமாக, பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆகப்போகிறவர்களே, உங்கள் பெண் குழந்தைகளுக்கும் இந்த கலாசார முறையை நீங்கள் பின்தொடர்வீர்களா?

“இது வெறும் வயதிற்கு வரும் நிகழ்ச்சி. பல்வேறு கலாசாரங்களில் இவை உள்ளன. இது நம் கலாசார மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதி. யூத ஆண்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சியைப்போன்றது” என்கிறார், வி.கே என்னும் 25 வயது பெண்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News