ilakkiyainfo

ilakkiyainfo

8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன்!!

8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன்!!
January 09
10:22 2018

சென்னை பேராசிரியை உள்பட 8 பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கில் ஏமாற்றிய கல்யாண மன்னனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குமுதவள்ளி (வயது 45). கணவரை இழந்த இவர் காந்திபுரத்தில் உள்ள திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூரை சேர்ந்த புருசோத்தமன் (57) என்பவரை சந்தித்தார்.

புருசோத்தமன் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் தனது மனைவி இறந்து விட்டார். கல்லூரி படிக்கும் தனது மகளை பார்க்க ஆள் இல்லாததால் மறுமணம் செய்வதாகவும் கூறினார்.

இதை நம்பிய குமுதவள்ளி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புருசோத்தமனை திருமணம் செய்து கொண்டார்.

சில நாட்களில் புருசோத்தமன் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி குமுதவள்ளியிடம் இருந்து ரூ.3 கோடி வாங்கினார். அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த குமுதவள்ளி, புருசோத்தமன் பற்றி விசாரித்தபோது அவர் பல பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து குமுதவள்ளி போத்தனூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் புருசோத்தமனின் மோசடி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

புருசோத்தமன் மீது கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸ் நிலையத்தில் பல மோசடி வழக்குகள் உள்ளன.

தொழில் ரீதியாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்ட இவர் கடந்த சில வருடங்களாக பணக்கார பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

இவரது மோசடிக்கு திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன், வனஜா குமாரி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இவர்கள் வரன்தேடி தங்களது திருமண தகவல் மையத்துக்கு வரும் பணக்கார பெண்களிடம் புருசோத்தமனை பற்றி நல்ல விதமாக கூறி ஆசை காட்டினர்.

இதை நம்பிய பெண்கள் புருசோத்தமனை தொடர்பு கொள்ளும் போது தன்னை பற்றி பெருமையாக கூறுவதோடு, நான் பல்வேறு தொழில்கள் செய்து வருவதால் மகளை கவனிக்க முடியவில்லை, எனவே தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பதாக கூறி உள்ளார்.

அடுத்த சில மணி நேரத்தில் புருசோத்தமனின் மகளான என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கீதாஞ்சலி அந்த பெண்களிடம் பேசுவார். அப்போது அவர் ‘எனக்கு தாய் கிடையாது, உங்களை பார்த்தவுடன் எனது தாய் நினைவு வருகிறது.

உங்களை மிகவும் பிடித்து விட்டது’ என மனதை நெகிழ வைக்கும் வகையில் பேசுவார். இதை நம்பிய பெண்கள் உடனடியாக புருசோத்தமனை திருமணம் செய்துள்ளனர்.

குமுதவள்ளி தவிர இவர் கோவையை சேர்ந்த சபீதா, உஷாராணி, விமலா, சுசீலா, சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியை இந்திராகாந்தி, ஈரோட்டை சேர்ந்த சித்ரா ஆகியோரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.

இவர்களில் குமுதவள்ளி, இந்திராகாந்தி, சுசீலா ஆகியோர் கோவை மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கடைசியாக திருப்பூரை சேர்ந்த சாந்தினியை திருமணம் செய்துள்ளார். கணவரை பிரிந்த இவர் இன்னும் விவாகரத்து பெறவில்லை.

இவர் மேலும் பல பெண்களை திருமணம் செய்து மோசடி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் பிடிபடும் போது அவரது மோசடி பற்றி முழுமையான தகவல்கள் தெரிய வரும்.

தலைமறைவான புருசோத்தமன், திருமண தகவல் மைய நிர்வாகி மோகன், வனஜாகுமாரி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புருசோத்தமனின் வலையில் விழுந்தவர்களில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த இந்திராகாந்தி என்ற கல்லூரி பேராசிரியையும் ஒருவர் ஆவார். கணவரை பிரிந்து வாழ்ந்த இவரை புருசோத்தமன் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு இனிக்க, இனிக்க பேசினார்.

திருமணத்துக்கு பின்னர் சில மாதங்கள் சென்னையில் தங்கிய இவர் வீட்டை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்வது முதல் பாத்ரூம் கழுவுவது வரை அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து இந்திரா காந்தியின் மனதை கவர்ந்துள்ளார்.

பின்னர் எனக்கு தொழிலில் சிறிய பிரச்சனை உள்ளது, உனது சொத்தை விற்று பணம் தந்தால் பிரச்சனையை சரி செய்து விடுவேன், பின்னர் நாம் கோவை சென்று நிம்மதியாக வாழலாம் என கூறியதன் அடிப்படையில் இந்திரா காந்தி தனது சொத்தை விற்று ரூ.1½ கோடி கொடுத்து ஏமாந்ததாக போலீசார் தெரிவித்தனர். #TamilNews

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவது உங்கள் உடல் உள ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவ்வாறான வியாதிகளிலிருந்து விரைவில் [...]

ஐசிஸ் பயங்கரவாதிகளை தேடி ராணுவம் நாடு முழுவதும் தேடுதல் நடத்த வேண்டும், அவசர கால அமுலில் உள்ள இந்த வேளையில் [...]

ஓவ்வொரு மதத்தவரிலும் கிருக்கனுகள் பலர் இருக்கிறார்கள். இவர் எங்கள் மார்கத்தில் உள்ள ஒரு பச்ச வெங்காயம் ஆவார், இவரை போலிஸ் [...]

இந்த மனநோய்க்கு மருந்தில்லை. [...]

இவன் எந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை வைத்தே இவன் செய்யும் ஈன செயல்களில் தன்மை தெரியும். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News