திருகோணமலை, லிங்கநகர் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய கொள்ளையர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் லிங்கநகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பெண்ணொருவர் சென்றுவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் குறித்த  கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வீதியில் நடந்துசென்ற வேளை கொள்ளையர் பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் சத்தமிட்டதில் அப்பகுதியில் ஒன்றுதிரண்ட இளைஞர்கள் ஊர் பொதுமக்களின் உதவியுடன் கொள்ளையரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

குறித்த கொள்ளையரிடம் இருந்து 4 பவுண் தங்கச்சங்கிலியை மீட்டெடுத்த பொதுமக்கள், தங்கச்சங்கிலியையும் மடக்கிப்பிடித்த கொள்ளையரையும் திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.