ilakkiyainfo

ilakkiyainfo

பெண்ணைச் சரமாரியாகத் தாக்கிக் கைது செய்யும் காவலர்கள்’ – வைரலான வீடியோ

பெண்ணைச் சரமாரியாகத் தாக்கிக் கைது செய்யும் காவலர்கள்’ – வைரலான வீடியோ
May 29
17:03 2018

அமெரிக்காவில் உள்ள கடற்கரையில் ஒரு பெண்ணை மூன்று காவலர்கள் சரமாரியாகத் தாக்கி கைது செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி கடற்கரையில் நடைபெற்ற வார இறுதி நினைவு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டுள்ள வீடியோ தொடங்கும் போது, கடற்கரையில் ஒரு பெண்ணைக் காவலர் ஒருவர் தாக்குகிறார்.

அந்தப் பெண் அவரது பிடியிலிருந்து வெளியேற நினைக்கும் போது அந்தக் காவலர் பெண்ணின் தலையில் பலமாக இரண்டு முறை அடிக்கிறார்.

பிறகு பெண்ணின் மீது ஏறித் தப்பிக்க முடியாமல் செய்கிறார். மற்றொரு காவலர் அந்தப் பெண்ணின் கால்களை இருக்கப் பிடித்துக்கொண்டார்.

மூன்றாவது காவலர் அந்தப் பகுதியில் கூட்டம் சேராதவாறு தடுத்துக்கொண்டிருக்கிறார்.

இரு காவலர்களிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் கடுமையாகப் போராடுகிறார். இறுதியில் அந்தப் பெண்ணின் கைகளில் விலங்கு மாட்டிக் கைது செய்கின்றனர் காவலர்கள். வீடியோவின் பின்புறத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.

யாரோ ஒருவர் நிறுத்துங்கள், நிறுத்துங்கள் எனக் கூறுகிறார். என்னை இப்படி அடிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என அந்தப் பெண்ணின் குரல் ஒருபுறம் கேட்கிறது.

இந்த வீடியோ கடந்த சனிக் கிழமையன்று சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை இதை சுமார் 3.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

உண்மை, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் , சம்பந்தன் போன்ற வகையறாக்கள் கோழைகள் , இவர்களை விட புலிகள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News