ilakkiyainfo

ilakkiyainfo

பெயருக்கு முன்னால் ராதாரவி போடும் ‘டத்தோ’ பட்டம் போலியானது- சின்மயி புதிய சர்ச்சை

பெயருக்கு முன்னால் ராதாரவி போடும் ‘டத்தோ’ பட்டம் போலியானது- சின்மயி புதிய சர்ச்சை
December 02
22:28 2018

 

ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். அப்படி ஒரு பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சின்மயி கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பினனணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூவில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். இந்த யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி.

யூனியனுக்கு சந்தா தொகை செலுத்தாததால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வாழ்நாள் சந்தா செலுத்தி விட்டதாக சின்மயி கூறினார்.

யூனியனில் இருந்து நீக்கப்பட்டதால் டப்பிங் பேசும் வாய்ப்பும் சின்மயிக்கு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தனது வாய்ப்புகள் பறிபோக காரணமான நடிகர் ராதாரவி மீது சின்மயி புதிய புகார் தெரிவித்துள்ளார்.

ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம்.

ஆனால் இந்த பட்டத்தை ராதாரவி தவறாக பயன் படுத்துகிறார். அவருக்கு அப்படி ஒரு பட்டமே வழங்கப்படவில்லை என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மலேசிய நாட்டின் மெலேகோ மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் ராதா ரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருப்பதாக அரசு செயலர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ராதாரவி பயன் படுத்துவது போலி பட்டம் என்று விமர்சித்துள்ளார். சின்மயி கிளப்பி இருக்கும் இந்த புதிய சர்ச்சை மீண்டும் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சின்மயியை சும்மா விடமாட்டேன்- ராதாரவி ஆவேசம்

201812021727437376_1_radharavi-161018m._L_styvpf பெயருக்கு முன்னால் ராதாரவி போடும் ‘டத்தோ’ பட்டம் போலியானது- சின்மயி புதிய சர்ச்சை பெயருக்கு முன்னால் ராதாரவி போடும் ‘டத்தோ’ பட்டம் போலியானது- சின்மயி புதிய சர்ச்சை 201812021727437376 1 radharavi 161018m

‘டத்தோ’ பட்டம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளதால் சின்மயியை சும்மா விடமாட்டேன் என்று ராதாரவி ஆவேசமாக கூறியுள்ளார். #Chinmayi Sripada #RadhaRavi

சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து ராதாரவியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை.

இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது.

மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார்.

நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் சென்னை திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன்.

சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News