ilakkiyainfo

ilakkiyainfo

பெரிய மீன்களின் சின்ன அரசியல்!! – இதயச்சந்திரன் (கட்டுரை)

பெரிய மீன்களின்  சின்ன அரசியல்!! – இதயச்சந்திரன் (கட்டுரை)
December 10
03:46 2017

மீண்டும் தேர்தல்!

அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம் மறுபடியும் அரங்கேறப்போகிறது.

‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடு  சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த ஓரங்க நாடகம்.

பொருளாதார சுமை, வேலைவாய்ப்பற்ற கையறுநிலை, நிலமற்ற அகதிவாழ்வு, நில ஆக்கிரமிப்பு போரின் வடுக்கள், காணாமல்போகடிக்கப்பட்டோரை தேடும் அவலநிலை, இவற்றின் மத்தியில் ‘ தீர்வினைநோக்கிய பயணம்’ என்றவாறு முழக்கமிடும் கூட்டமைப்பு, என்பவற்றை எதிர்கொண்டவாறு நகரும் மக்கள் கூட்டம்.

அதற்குள் ‘ வேலை வேண்டுமா தீர்வு வேண்டுமா?’ என்ற குத்தல் கதை வேறு.

பண்டா காலத்திலிருந்து தீர்வைப் பற்றித்தான் பேசுகிறோம்.

கிழக்கில் அதிலும் குறிப்பாக அம்பாறையிலும், திருக்கோணமலையிலும் பூர்வீக நிலங்களை பறிகொடுத்ததுதான் மிச்சம்.

அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசசபைகளை இழந்துள்ளோம்.

மிச்சமிருக்கும் பிரதேசசபைகளை காப்பாற்றுவதற்கே இப்போது போட்டிநடைபெறுகிறது.

இழந்தவற்றை மீட்கும் அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது போல்தெரியவில்லை.

‘எங்களுக்குள் பிளவுபட்டு நின்றால், மூன்றாமவன் வென்றுவிடுவான்’ என்கிறபதட்ட அரசியலை முன்வைத்தே மக்களின் வாக்குகளைப் பெறுகிறார்கள்.

இழந்த இடங்களை மீட்க வக்கில்லாத அரசியல் தலைமைகள், இருப்பதைக்காப்பாற்றும் தந்திரைத்தையே வாக்குவங்கியை நிரப்பப்பயன்படுத்துகிறார்கள்.

இலங்கை அரசியலில் பொதுவாகவே தேர்தல் வந்தவுடன் கூட்டுக்களும் ஏற்படும் அதேவேளை இருக்கிற கூட்டணியும் உடையும்.

நடந்து முடிந்த ஆட்சிமாற்றத்திலும் இதனைப் பார்க்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான 2001 இலிருந்து இன்றுவரை ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி 2004 யிலும் அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் 2010 யிலும்இ 2017 இல் சுரேஷின் ஈபிஆர்எல்எப் அணியும் பிரிந்துசென்றதே சான்று.

தாம் பிரிந்து செல்வதற்கு கொள்கை முரண்பாடே காரணம் என்பதை முன்வைத்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதனை ‘இறுக்கமானபோக்கு, தமிழ் தீவிரவாதம்’ என்றார்கள் கூட்டமைப்பினர்.

சுரேஸைப் பொறுத்தவரை கூட்டமைப்புத் தலைமை மீதும், அதனைவழிநடத்தும் தமிழரசுக் கட்சியின் மீதே தமது அதிருப்தியை முன்வைத்தார்.

அண்மைக்காலமாக பல போராட்டங்களில் ஒன்றிணைந்த இருவரும், தேர்தல்களத்தில் பிரிந்து நிற்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியவில்லை.

Uthayasooriyan  பெரிய மீன்களின்  சின்ன அரசியல்!! – இதயச்சந்திரன் (கட்டுரை) Uthayasooriyanபெரிய மீன்களின் பின்னணியில் இப்பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பார்வைஉண்டு.

பக்கத்துநாட்டுக்காரருக்கோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமரசமற்றகொள்கை நிலைப்பாடானது தனது பிராந்திய அரசியல் பாதுகாப்பு நலனிற்குமுரணாக அமைகிறது என்கிற எரிச்சல் உண்டு.

மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் மீது ஏற்பட்டுவரும் அதிருப்தியானது, தனதுநலனிற்கு முட்டுக்கட்டையாக வரக்கூடிய சக்திகளின் பக்கம்திரும்பிவிடக்கூடாதென்பதில் கரிசனை கொண்டுள்ளதாகவும் எண்ணலாம்.

வீட்டை எரிக்க உதயசூரியனே சரியான தெரிவு என்கிற ‘ சின்ன ‘ அரசியல், புதிய கூட்டணிக்கான நியாயப்படுத்தலாக இருக்க முடியாது.

பெரிய கட்சிச் சின்னங்களையே, புதிதாக வந்த ஈரோஸின் வெளிச்சவீட்டுச்சின்னம் மூழ்கடித்த வரலாறும் உண்டு.

உறுதியான அரசியல் கோட்பாடுகளோடு மக்கள்சார்ந்த அரசியலைமுன்னெடுத்தால் எதுவும் சாத்தியமே.

தமிழ்நாட்டு அரசியலில் இந்த சின்ன அரசியல் பொருந்திப்போகலாம்.

ஆனால் தமிழர் தாயகத்தில் அவ்வாறு இல்லை.

08-538x300  பெரிய மீன்களின்  சின்ன அரசியல்!! – இதயச்சந்திரன் (கட்டுரை) 08தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பாதையை நோக்கினால், ‘ தீர்வைநோக்கி..’ என்கிற மாயமான் வேட்டையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலாகநடை போடுவார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி, நாடாளுமன்றக்குழுவின் பிரதி தலைவர் பதவி, என்று பல பதவிகள் தீர்விற்கு முன்பாக வந்து போகும். ஏன் மந்திரிப்பதவிகள்கூட வரலாம்.

மக்களோ….மூன்றாம்தர பிரஜைகளாக கிழக்கிலும், இரண்டாம்தர பிரஜைகளாக வடக்கிலும் வாழப்பழகிக் கொள்வார்கள்.

மாகாணசபைகளும் வரும். புதிய தலைகளும் முளைக்கும்.

வழமை போல் ஆளுநரோடு மோதல் தொடரும்.

ஒன்றுமே பெறமுடியாவிட்டாலும், இதையும்விட்டால் (?) வேறுவழி என்ன?என்கிற பிராந்திய நலன் அரசியலைப் பேசுவார்கள்.

இது ஒருபுறமிருக்க, வடக்கு அரசியலில் ஏற்கனவே பரீட்சயமான ஒருவரின்புதுவரவு நிகழப்போவதாக பேச்சடிபடுகிறது.

அவர் வேறுயாருமல்ல. முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாளே.

அவருக்கு இலங்கைக் குடியுரிமை மறுபடியும் கிடைத்துவிட்டது என்கிறசெய்தியும் வந்துள்ளது.

ஆகவே அவர் இனி தேர்தல்களில் குதிக்கலாம் என்பதும்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tamil-leaders_2-1  பெரிய மீன்களின்  சின்ன அரசியல்!! – இதயச்சந்திரன் (கட்டுரை) Tamil leaders 2 1
வரதரின் வருகைக்கும், சங்கரியாரின் மீள்வருகைக்கும் ஏதாவதுதொடர்புள்ளதா?.

வரதரின் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியானது தமிழ் தேசியக்கூட்டமைப்போடு தேர்தலின் பின் இணையலாம் என்கிற செய்தி வருகையில்,  ஆனந்த சங்கரி அவர்களின் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு சுரேஷ்அணியினர் சேர்ந்திருப்பதானது, முடிவடையாமல் தொடரும் மோதல்வரலாற்றினை நினைவுபடுத்துகிறது.

வரதரை உள்வாங்குமுன்பாக, கூட்டமைப்பினை ஒரு ஒழுங்கிற்குள்கொண்டுவந்து, தமிழரசுக் கட்சியின் ‘ நிறைவேற்று’ அதிகாரத்தினைஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பல உயர்மட்ட தலைவர்கள்கருதுகிறார்கள்.

ஏற்கனவே வடக்கில் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து  நீண்ட வரிசையில்பலர் காத்திருக்கின்றனர்.

ஆனாலும் கிழக்கின் நிலைமை வேறு.

அங்கு இருப்புப் பிரச்சினை.

இரண்டுவிதமான இனமுரண்நிலைகள் வாக்குவங்கி அரசியலை முன்னிறுத்திஉருவாக்கப்படுகின்றன.

அதிலும் தமிழ்- முஸ்லீம் இனமுரண்பாடு முன்னெப்போதும் இல்லாதவாறுஅதிகரிக்கும்போது அதில் குளிர்காய நினைப்பவர்கள் இலாபமடைவார்கள்என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

சிலவேளைகளில் தேசியக் கட்சிகளை நோக்கி தமிழ் மக்களை நகர்த்தும்ஆபத்தும் ஏற்படலாம்.

ஆகவே நடைபெறப்போகும் இத்தேர்தல், இனிவரும் காலங்களில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்களுக்கு புதிய அடித்தளங்களை இடப்போவதை உணர்ந்து கொள்ளலாம்.

இதனை மூன்று பெரும் அணியாகப் பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக்கு கூட்டணி ஆகியனபுரிந்து கொள்வது நன்று.

அடித்தட்டு மக்களோடு இணைந்த முற்போக்கு அரசியலை முன்வைக்கும் அதேவேளை, தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையினை விட்டுக்கொடாதஅரசியல் இயக்கத்தின் மீது மக்கள் அக்கறை கொள்வது சாலச் சிறந்தது.

இந்துமாகடல் பெரிய மீன்களின் தாளத்திற்கும், டியாககோர்காசியதளவாசிகளின் மேளத்திற்கும் ஆடுவோரை, இனங்காண்பதும் மக்களின்கடமை.


– இதயச்சந்திரன்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

Jey

What is her name and address..?? [...]

Jey

Krishna [...]

இலங்கை பத்திரிகைகள்

English News