ilakkiyainfo

ilakkiyainfo

பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 131 )

பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 131 )
September 02
17:08 2017

• வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர்.

•  இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில்  240 புலிகள்  பலி

•  பிரபாகரன் பற்றிய கணிப்பீட்டில் இந்திய அரசு தொடர்ந்தும் தவறிழைத்தது.

தொடர்ந்து….

இரத்த கையொப்பம்.

செல்வி  ஜெயலலிதாவின் தீலிர விசுவாசிகள் பிரபாகரனுக்காக இரத்தக் கையெழுத்துப்போட்டு: மகஐர் அனுப்பி வைத்தனர். இன்றல்ல இது நடந்து அன்றி.

1988 மார்ச் மாதத்தில். ஏம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக உடைந்து ஒரு பிரிவு அ.தி.மு.க ({h) என்று அழைக்கப்பட்டது.

அ.தி.மு.க (ஜெ) சார்பாகவும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பேரவை சார்பாகவும் பெங்களுரில் நடைபெற்ற கூட்டத்தில் மகஜர் அனுப்பினார்கள்.. மகஜர் அனுப்பப்பட்டது ஜெயலலிதாவிற்கு. மகஜரில் கூறப்பட்டவை இவைதான்.

• தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
• தமிழினத் தலைவர் தம்பி பிரபாகரன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் பின்விளைவுகளுக்கு ரஜீவ் காந்தி பொறுப்பு ஏற்க வேண்டும்.
• இந்திய அமைதிப் படையின் தாக்குதலை நிறுத்த போராட்டத்தில் குறிக்க வேண்டும்.

16-1471320561-ltte1 பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 131 ) 16 1471320561 ltte1வீடு தீக்கிரை

புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனையும், பிரதித் தலைவர் மாத்தையாவையும் கைது செய்யப்போவதாக வன்னியில் வலை விரித்தது இந்தியப் படை.

வன்னிக்காடுகளுக்குள் ஊடுருவும் முயற்சிகள் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவின் வீடு இருந்தது. மாத்தையாவை பிடிக்க முடியாத கோபத்தை அந்த வீட்டின் மீது காட்டினார்கள் இந்தியப்படையினர்.

மாத்தையாவின் வீட்டிற்குள் யாரும் இருக்கவில்லை ஆனால் மாத்தையாவின் வீட்டை பிடித்து விட்டோம் என்று துள்ளிக் குதித்த படையினர் வீட்டை தீக்கிரையாக்கினார்கள்.

அந்த வீட்டுக்கு அருகிலிருந்த வீடும் நாசமாக்கப்பட்டது. இந்த அமளிகள் மத்தியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரைஜகள் குழுவினால் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

மணலாறு குடியேற்றத் திட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரியும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

6804.pdf பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 131 ) The135தாக்குதல்

திருமலையில் கும்புறுப்பிட்டியில் இந்தியப் படையினர் ரோந்து சென்றனர். ரோந்து சென்ற படையினர் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர்.

ஒரு அதிகாரி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் பதுங்குமிடம் பற்றி இந்தியப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

முகாம் சுற்றி வளைக்கப்பட்டதும் புலிகளும் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். ஆனாலும் படையினரின் கையே மேலோங்கியது.

புலிகள் தரப்பில் நான்கு பேர் பலியாகினார்கள் ரமேஷ், மாஸ்ட்டர், ஜெயம், ஜீவா ஆகியோரே பலியான நால்வராவார். 1988 மார்ச் மாதத்தில் இந்த மோதல் இடம்பெற்றது.

இக்காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் இலங்கைப் படையினரும் பலியாகினார்கள். இந்தியப் படையினருக்கு மட்டுமல்லாமல் இலங்கை இராணுவத்தினரையும் புலிகளின் துப்பாக்கிகள் குறிவைத்தன.

வவுனியா அரந்தலாவ என்னும் இடத்தில் பஸ் வண்டியொன்றில் இராணுவத்தினர் சென்று கொண்டிருந்தனர். பயணிகளும் பஸ்ஸில் இருந்தனர்.

வீதியின் குறுக்கே தடைபோடப்பட்டிருந்தது. அந்த இடத்தை நெருங்கியதும் பஸ் வேகம் குறைந்து நின்றது. பஸ்சுக்குள் இராணுவ சீருடையை கண்டதும் புலிகளின் துப்பாக்கிகள் சீறத் தொடங்கின.

இராணுவத்தினருக்கு எதிர்த்தாக்குதல் நடத்தும் சந்தர்ப்பமே இருக்கவில்லை. ஆறு இராணுவத்தினர் பலியாகினர். குpராமவாசிகள் ஐந்து பேரும் பலியாகினார்கள். ஐந்து பேரும் சிங்கள இனத்தவர்கள்.

இச்சம்பவத்தின் பின்னர் இலங்கை .இராணவத்தினருடன் இணைந்து இந்தியப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் போய்விட்டார்கள். அப் பகுதியில் உள்ள பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

மாநாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய முல்லைத்தீவு அரச செயலகத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது.

மக்களின் சகஜ வாழ்க்கையில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் காட்டுவதற்கும் மக்களின் ஆதரவைப் பெற்று மக்களிடம் இருந்து புலிகளை தனிமைப்படுத்தவும்  இந்தியப் படை அதிகாரிகள் இவ்வாறான மாநாடுகளை நடத்துவது வழக்கம்.

அநேகமாக இம்மாதியான மாநாடுகளில் கலந்து கொள்வோர் ஆமாம் சாமிகளாக நடித்து படை அதிகாரிகளின் அன்பைச் சம்பாதித்துக் கொள்வார்கள்.

ஆனால் முல்லைத்தீவில் நடைபெற்ற அந்த மாநாட்டில் முல்லைத்தீவு பிரைஜைகள் குழச் செயலாளர் கே.கதிரவேலு கூறிய கருத்துக்கள் சூடாக இருந்தன.

இந்த அமைதிப் படையினர் இங்கு வரும் போது எமது மக்கள் எவ்வளவு சந்தோசமடைந்தனர். கைநீட்டி வரவேற்றனர்.

இனி நாம் நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணினார்கள்அனால் அதற்க முற்றிலும் மாறாகவே இந்தியப்படையின் நடவவடிக்கைகள் அமைந்துள்ளன.

எமது பொருளாதாரம் சீரளிந்துள்ளது. கல்வி பாழடிக்கப்பட்டுள்ளது. எமது பிரதேசங்களில் விவசாய முயற்சிகள் மேற்கொள்ள முடியாதுள்ளது.

சொந்த வீடுகளிலையே சுகந்திரமாக இருக்க முடியாதுள்ளது. என்ற அவர் கூறினார். படையதிகாரியின் முகத்தில் ஈயாடவில்லை.

கைதி விடுதலை

வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர்.

அவர்களில் ஒருவரை விடுதலை செய்ய புலிகள் முன்வந்துள்ளனர். சென்னையில் இருந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு மூலம் அந்த தகவல் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவில் வைத்த இந்தியப் படைவீரரை விடுவிப்பது என்று முடிவானது.

அவரை விடுவிக்கம் ஏற்பாட்டை செய்ய சென்னையிலிருந்து புலிகள் இயக்க முக்கியஸ்த்தர்களான காஸ்ரோவும், வாசுவும் இந்திய அரசால் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

வவுனியாவில் சாஸ்திரி கூலாங்குழம் என்ற இடத்திற்கு காஸ்ரோவும், வாசுவும் இந்தியப் படையினருடன் சென்றனர்.

அங்கிருந்து வோக்கிடோக்கி மூலம் காட்டில் உள்ள புலிகளுடன் தொடர்பு கொண்டனர். “இந்திய பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்களா?” என்ற புலிகள் கேட்டனர். “ஆம் வந்திருக்கிறார்கள்” என்றார் காஸ்ரோ.

அதன் பின்னர் இந்திய படைவீரர் தீலிப்ராமை புலிகள் அழைத்து வந்தனர். இந்தியப்படை கேனல் பி.எல் கன்னாவிடம் திலிப்ராத் ஒப்படைக்கப்பட்டார்.

புலிகளிடம் எந்த கேள்வியையும் கேட்கக் கூடாது என்னு இந்தியப் படையினர் பத்திரிகையாளரிடம் கூறினார்கள் உடனே புலிகள் எங்கள் இலட்சியம் நிறைவேறும் வரை போராடியே தீருவோம் என்று கோசமிட்டனர்.

விடுதலை ஏன்
இந்தியப் படை வீரரை தாம் விடுதலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக புலிகள் இயக்கத்தினர் ஒரு அறிக்கை விடுத்தனர்.

1988 மே 15ல் விடுக்கப்பட்ட அந்த அறிக்கையில் பின்வருமாறு தெருவிக்கப்பட்டிருந்தது.

தமிழீழத்தில் இந்தியப்படை நடத்திய தாக்குதல்களால் இதுவரை முவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைகால்களால் இழந்து ஊனமாகியுள்ளனர்.

ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாகியுள்ளனர். இவற்றையெல்லாம் இந்தியப்படையினர் தமது இராட்சத பிரசார இயந்திரங்கள் மூலமாக மூடிமறைக்கின்றனர்.

கடந்த 6.02.88 நடந்த சண்டையில் எமது இயக்கத்தால் கைதுசெய்யப்பட்ட இந்திய வீரர் தீலிப்ராமை (வயது26) மனித நேய அடிப்படையில் நாம் விடுதலை செய்திருக்கின்றோம்.

சரவதேச சமூகமே சர்வதேச அமைப்புக்களே எமது நியாயமான கோரிக்கைகள் நசுக்கப்பட்டு உரிமைக்குரல் ஒடுக்கப்பட்டு எமது பிரச்சனைகள் இந்தியாவின் பிரசார சாதனங்களால் மறைக்கப்படுகின்றன.

இந்தியப் படையின் அட்டுழியங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. தமிழ் ஈழத்தில் நடைபெறும் சம்பவங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
5960a59ebaa20-IBCTAMIL பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 131 ) 5960a59ebaa20 IBCTAMIL
240 புலிகள்

இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில் தமது தரப்பில் பலியானோர் விபரத்தையும் புலிகள் வெளியிட்டிருந்தனர்.

240 புலிகள் ஏழு மாத சமரில் பலியானதாக புலிகள் உத்தியோகபூர்வமாக தெரிவித்தனர்.

இந்தியப்படை வீரரை புலிகள் விடுவித்ததை வைத்து இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படப்போவதாக ஊகங்கள் கிளம்பின.

சென்னையில் இருந்து வந்த காஸ்;ட்ரோ , வாசு ஆகியோர் இந்தியப்படை வீரரின் விடுவிப்புக்கு உதவியதால் சென்னையில் இந்திய அதிகாரிகளும் கிட்டு தலைமையில் புலிகளும் நடத்திய பேச்சுக்களில் திருப்பம் ஏற்பட்டு விட்டது என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

photo731 பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 131 ) photo731
பிரபாவின் முடிவு

இக் கட்டத்தில் இலங்கைப் பாரளுமன்றத்தில் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டிதாக மாகாண சபை சட்டமும் கொண்டுவரப்பட்டது.

இவை இரண்டுமே தமிழ் அமைப்புக்களின் கருத்தைக் கேட்காமல் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவால் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டதாக புலிகள் குற்றம் சாட்டினர்.

இவற்றுக்கு முன்பாக தழிழர் விடுதலைக் கூட்டணியினர் இந்திய மத்திய அரசின் அமைச்சரான சிதம்பரத்துடன் பேச்சு நடத்தியிருந்தனர்.

மாகணசபைச் சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கான திருத்தச்சட்டங்களின் பிரதிகள் முதலில் இந்தியாவிடமும் பின்னர் தமிழ் அமைப்புக்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டு அவற்றின் சம்மதம்பெறப்பட்ட பின்னரே நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சிதம்பரம் கூறியிருந்தார்.

ஆனால் இலங்கை அரசோ ஜனாதிபதியோ  ஜே.ஆரோ அவ்வாறு செய்யவில்லை. தமக்கு விரும்பிய வடிவத்தில் சட்டமாக்கியுள்ளனர். எனவே அவற்றை ஏற்கமுடியாது என்று புலிகள் கூறினார்கள்.

இந்திய அரசுடன் பேச்சு நடத்துவது தொடர்பாக புலிகள் முக்கிய முடிவொன்றையும் எடுத்திருந்தனர். இன்றுவரை அந்த முடிவைத்தான் இலங்கை அரசுடனான பேச்சுக்களிலும் பிரபாகரன் கடைப்பிடிக்கின்றார்.

அது என்ன முடிவு? “இனிமேல் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளில் எக்கட்டத்திலும் பிரபாகரன் நேரடியாகப் பங்குபொள்ளமாட்டார். அவரின் பிரதிநிதிகளே பங்குகொள்வார்”.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகப் பேசுவதற்காக டில்லிக்கு அழைக்கப்பட்டு அங்கு இந்திய அரசால் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பிரபாகரன் செய்த முடிவு அது.

இலங்கை அரசுகள் தமிழ் மக்களின் உரிமைகளை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. பேச்சென்ற பொறிகளை எம்முன்பாக வைக்கும்போது  தந்திரமாக அதிலிருந்து மீள்வதற்கு பேச்சுக்கள் நடத்தலாம்.

ஆனால் இறுதி இலட்சியத்தை விட்டுக்கொடுக்க முடியாது. அத்தகையத் தந்திரப் பேச்சுக்களில் தானே பங்குகொள்வது இயக்கத்தின் போர்க்குணத்தை மழுங்கடிக்கும் என்ற நிலையிலிருந்து பிரபாகரன் எடுத்த முடிவே அதுவாகும்.

திம்பு பேச்சு நடந்த கட்டத்தில் சகல இயக்கத் தலைமைகளுமே (கூட்டனி தவிர) அவ்வாறான முடிவையே எடுத்தன. தமிழீழத்திற்கு குறைந்த பேச்சுக்களில் தலைவர்கள் பங்குகொள்வதில்லை.

பேச்சுக்குச் செல்வது தந்திரோபாயக் காரணங்களால் அவசியமாக இருப்பதால் பிரதிநிதிகளை அனுப்புது என்றே முடிவுசெய்தனர்.
மற்றொரு முடிவையும் புலிகள் தெரிவித்தனர்.

‘இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் பின்னடைவு ஏற்பட்டதற்கு கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் ஜே.என்.டிக்ஷித் போன்றோரின் அணுகுமுறையே முக்கிய காரணமாகும்.

எனவே, இன்மேல் எம்முடன் சம்மந்தப்பட்ட எந்தப் பேச்சு வார்த்தகைகளிலும் பிரதிநிதியாக டி க்ஷித்தோ அல்லது அவரைச் சார்ந்தோரோ இடம்பெறக்கூடாது’

பேச்சுக்கள் தொடர்பாகப் பிரபாகரன் சார்பாகக் கூறப்பட்ட கறாரான கருத்துக்கள் இந்தியத் தரப்புக்கு ஆச்சரியமளித்தன.

நாலாபுறமும் நெருக்குதல்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் சமரச முடிவுகளுக்குப் பிரபாகரன் முன்வந்தேயாகவேண்டும்.

முதலில் பிகு பண்ணினாலும் படிப்படியாக இந்தியாவின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பணிந்தேயாக வேண்டுமென்றுதான் இந்திய அரசு கணிப்புச் செய்தது.

ஆனால் பிரபாரனோ இந்திய அரசின் பக்கம் நியாயம் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்கு அரசியல் களத்திலும், இந்தியப் படை முற்றுகையை முறியடித்து நெருக்கடிகொடுப்பது எப்படி என்பது பற்றியே போர்க்களத்திலும் தனது திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்தார்.

பிரபாகரன் பற்றிய கணிப்பீட்டில் இந்திய அரசு தொடர்ந்தும் தவறிழைத்தது.

‘இராட்சத இராணுவ பலத்தின்  முன்பாக பிரபாரன் தனது பிடிவாத்ததை தளர்த்தியே ஆகவேண்டும்’ என்று நினைத்தது இந்திய அரசு.

ஆனால் அந்த நினைப்புக்கு நேர்மாறாக புலிகள் நிபந்தனையை விதித்துக்கொண்டிருந்தது இந்திய அரசிற்கு ஆச்சரியத்தை மட்டுமல்ல ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

போதைப்பொருள் விற்பனை.

யாழ் குடாநாட்டில் புலிகள் கட்டுப்பாடு தளர்ந்தபின்னர் போதைப்பொருள் விற்பனை, விபச்சாரம் போன்றவை தலைவிரித்தாடத் தொடங்கின.

இந்தியப் படையதிகாரிகளுக்குப் பெண்களை விநியோகம் செய்து சம்பாதிக்கும் மாமாக்ககும் பெருகத்தொடங்கினர்.

இவற்றைத் தடுத்து நிறுத்த இந்தியப் படையுடன் இணைந்துநின்ற இயக்கங்கள் முன்வரவில்லை. அதுமட்டுமல்லாமல் சமுகவிரோதச் சக்திகள் என்று கருதப்பட்டவர்களே இயக்கங்களில் இணைந்திருந்த நிலையில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் தார்மீக உரிமையையும் பல இயக்கங்கள் இழந்திருந்தன.

யாழ் குடாநாட்டில் சமுகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர்மீது புலிகள் குறிவைத்தனர்.

யாழ்குடாநாட்டில் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்ட யாழ் முட்டாசுக் கடைச் சந்தியில் புவனேந்திரன் எனும் மக்கள் விரோதி புலிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

புவனேந்திரன் ஒரு சண்டியராக இருந்தவர். ‘விலாசம் காட்டுபவர்’ என்று குறிப்பிடப்படும் ஆட்களில் ஒருவர். இவர் யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்தவர் என்று ஞாபகம். போதைப்பொருள் விற்பனையில் இவர் ஈடுபட்டதனாலேயே இவர் கொல்லப்பட்டார்.

1983ல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இவரைத் தேடியது. ரமேஷ். சுரேஷ் ஆகியோர் இவரைச் சுடச்சென்றபோது தப்பியோடிவிட்டார். பின்னர் இந்தியப் படை காலத்தில் மறுபடியும் தனது வியாபாரத்தை ஆரம்பித்தார்.

தேர்தல்.

வடக்கு-கிழக்கு மாகானசபைத் தேர்தல் 1988ல் நவம்பரில் இடம்பெறும் என்று திகதி குறித்தது இந்திய அரசு. அதன் பின்னர் நடந்த சங்கதிகள் அடுத்தவாரம்.

தொடர்ந்து வரும்
-அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்-
தொகுப்பு கி.பாஸ்கரன்

நாயாற்று வெளியில் ஒரு குறி.

nayaruas பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 131 ) nayaruas
மன்னார் மாவட்டப் புலிகள் தளபதியாக இருந்தவர் விக்டர். இலங்கை இராணுவத்தினர் விக்டரைத் தேடித்திரிந்தனர்.
விக்டரின் நடமாட்டம் தொடர்பாக இராணுவத்தினருக்குத் துல்லியமான தகவல் கிடைத்தது.

நாயாற்றுவெளியின் ஊடாக மாந்தைக்கு விக்டர் செல்வதைப் பற்றியும் இராணுவத்தினர் அறிந்தனர்.

நாயாற்றுவெளி கிட்டத்தட்ட ஐந்துமைல் நீளமானது. வழக்கமாக விக்டர் ஒரு ஜீப்பில் செல்வார். அந்த ஜீப்புக்கு முன்பாக சிறு நூறு மீட்டர் இடைவெளிவிட்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் புலிகள் பாதையை அவதானித்துச் செல்வார்கள்.

ஜீப்பில் சாரதி ஆசனத்தின் பக்கத்தில்தான் விக்ரர் அமர்ந்து செல்வார் என்பதையும் தகவல் கொடுப்போர் மறக்காமல் கூறியிருந்தனர்.
நாயாற்றுவெளியில் உள்ள புதர்களுக்குள் மறைந்து நிலையெடுத்து விக்டருக்காகக் காத்திருந்தனர் இராணுவத்தினர்.

தூரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் வருவதையும், பின்னால் ஜீப் வருவதையும் இராணுவத்தினர் கண்டுவிட்டனர். நாயாற்று வெளியைச் சமீபித்து அதனைக் கடக்கும்வரைக் காத்திருந்தனர்.

நாயாற்றுவெளியின் மையப் பகுதியை ஜீப் வந்தடைந்ததும் இராணுவ அணித்தலைவர் கத்தினார்.

‘சுடுங்கள், சுடுங்கள்’

எல்லாத்துப்பாக்கிகளும் ஒரே நேரத்தில் சட சடத்தன. குண்டுகள் ஜீப்பின் முன் கண்ணாடியைச் சிதறடித்தன. ஜீப் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட, ஜீப்பில் இருந்தவர்கள் மறுபுறம் நோக்கிப் பாய்ந்து தரையில் படுத்து நிலையெடுத்தனர்.

இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் ஆரம்பித்தது.

ஜீப்பை நோக்கிப் படையினர் சுட்டனர் அல்லவா. ஆனால் அவர்கள் நினைத்ததுபோல் விக்டர் அன்று ஜீப்பில் வரவில்லை.

ஜீப்பின் முன்பாகச்சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை அன்று ஓட்டிச்சென்றது விக்டர்தான்.

இராணுவத்தினர் விக்டரை மோட்டார் சைக்கிளில் எதிர்பார்த்திருந்தால் அன்று விக்டரைச் சுலபமாகச் சுட்டுகொன்றிருப்பர்.

வெடிச்சத்தம் கேட்டதுமே மோட்டார் சைக்கிளை நிறுத்திய விக்டர் அதனை அப்படியே போட்டுவிட்டு மறுபக்கப் புதருக்குள் மறைந்துகொண்டார்.

இராணுவத்தினருடன் சண்டையிட்டபடியே வோக்கி டோக்கி மூலம் தமது முகாமுக்குச் செய்தி அனுப்பினார் விக்டர். ராதா தலைமையில் விரைந்த புலிகள் அணி விக்டர் குழுவினரை மீட்டது.

சாவுகள் சரித்திரமாகும்!” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -130)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    “ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

0 comment Read Full Article
    பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த  இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News