ilakkiyainfo

ilakkiyainfo

பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை… 2016-ல் மிரட்டிய பேய்கள்!

பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை… 2016-ல் மிரட்டிய பேய்கள்!
January 01
04:30 2017

tamil_ghost_600_14408  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! tamil ghost 600 14408தமிழ் சினிமாவில் எல்லா புது ட்ரெண்ட்களுக்கும் ஒரு சீசன் உண்டு.அப்படி 2015ல் தமிழ்சினிமாவுக்குப் பிடித்த பேய் இந்த வருடமும் நான்ஸ்டாப் பேய்ப்படங்கள் என்று வரிசைகட்டி கெட்ட ஆட்டம் போட்டது.

அந்தப் படங்களில் இருந்தது என்ன வகையான பேய்? அது பயமுறுத்தியதா என்கிற லிஸ்ட் கீழே…


பேய்கள் ஜாக்கிரதை:

peigal-jakkirathai-movie-stills-71_600_14599  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! Peigal Jakkirathai Movie Stills 71 600 14599
‘ஜெமினி’ திரைப்படத்தில் இயக்குனர் சரணிடம் துணை இயக்குனராகப் பணியாற்றிய கண்மணி இயக்கிய படம் இது. புதுமுகம் ஜீவா ரத்னம், ஈஷான்யா ஆகியோருடன் தம்பி ராமையா கைகோர்த்திருந்தார்.

இந்தப் பேய்ப்படத்தில் ஹீரோவின் கண்களுக்கு ஆவிகள் தெரிவதுதான் ஹைலைட் கதை. ஆனால், கடைசி கிளைமாக்ஸில் அந்த ஆவிகள் எல்லாம் யார்? என்று சின்ன ட்விஸ்ட் வைத்து கதை சொல்லியிருப்பார் இயக்குனர்.

சாவு வரை போய் வரும் ஹீரோவின் கண்களுக்குப் பேய் தெரிகிறது என்கிற டைப்பிலேயே போன வருடம் வெளியானது மாஸ் என்கிற மாசிலாமணி, ஓம் சாந்தி ஓம். கொஞ்சம் கொரியன் ஃபீவரை குறைங்க ஜீ என புலம்பவைத்தது படம்.

அரண்மனை 2:

aranmanai_2_600_14235  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! aranmanai 2 600 14235
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு முதலிடம் கொடுத்து படங்களை இயக்கும் ஸ்டார் இயக்குனரான சுந்தர்.சியின் சீக்வல் படம். பெரிதாக எந்த லாஜிக்கும் பார்க்க அவசியம் இல்லை, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் திகில் வைத்தால் ஹிட் தான் என அரண்மனை முதல் பாகம் கொடுத்த தைரியத்தில் எடுத்திருந்தார் இயக்குநர் சுந்தர் சி.

இதிலும், மூன்று ஹீரோயின்கள். முதல் பாகத்தில் பேயாக நடித்த ஹன்சிகாதான் இதிலும் பேய்ய்ய்… கூடவே த்ரிஷா, கேரளத்துப் பெண்ணாக பூனம் பாஜ்வா. காமெடிக்கு சூரி, மனோபாலா, கோவை சரளா என்று நட்சத்திரப் பட்டாளம்.

அவரது படத்தில் அவர் இல்லாமலா? எஸ்…சுந்தர்.சியும் உண்டு பாஸ். வசூலிலும் பட்டையைக் கிளப்பிய அரண்மனை பார்ட் 2, 2016ன் ராயல் பேய்ப்படம்.

ஸீரோ:

zero_600_14457  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! zero 600 14457
ஹீரோயினுக்கு ஒரு அமானுஷ்யப் பிரச்னை அதிலிருந்து அவளைக் காப்பாற்ற போராடும் ஹீரோ. நேரடியாக இதற்குக் காரணம் பேய் எனப் பழி போடாமல் பைபிள் கதையை உள்ளே நுழைத்து பயமுறுத்த முயற்சி செய்திருந்தார் இயக்குநர் ஷிவ் மோகா.

முயற்சி முழுமையானதாக இல்லை என்றாலும், வழக்கத்துக்கு மாறான திரையாக்கம் வரவேற்கப்பட வேண்டியது. ஹீரோயின் ஷிவதா, ஹீரோ அஷ்வின் இருவரின் நடிப்பும் முழுமையாக இருந்தது. நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும், பின்னணி இசையும் கச்சிதம்.

சவுகார் பேட்டை:

socar_600_14076  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! socar 600 14076
பயங்கரமான முகத்துடன் மோகன் நடித்த ‘உருவம்’ படத்திற்குப் பிறகு உறைய வைக்கும் பேய் தரிசனம் என்று விருது கொடுத்தால் இந்தப் படத்தின் ஹீரோ  ஸ்ரீகாந்துக்கும், ஹீரோயின் லட்சுமி ராய்க்கும் தான் அந்த கிரெடிட்ஸ் சென்று சேரும்.

சிங்கம் டயலாக் மாடலில் டரியல் கொடுத்து ஸ்ரீகாந்த் பேசிய பஞ்ச், பார்க்கவே பயத்தைத் தாண்டி பயமுறுத்திய பேய் எஃபெக்ட், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்தை பேக் அடிக்க வைத்தது.

ஒரு வீட்டு மேல் ஆசை வைத்த சேட்டு நாலு பேருக்கு வைக்கிறாரு வேட்டு. அந்த நான்கு பேர் தான் ஸ்ரீகாந்த், லட்சுமி ராய், தலைவாசல் விஜய், அவரது மனைவி.

இந்த நாலு பேரும் ஆவியாகி அந்த சேட்டைப் பழிவாங்குவது தான் கதை. நல்லா தான இருக்குன்னு தோணுதா? இதில் ஒரு ஸ்ரீகாந்த் இல்ல… ரெண்டு ஸ்ரீகாந்த்.

ஆனா, அவர பத்தி சொல்ல முடியாது அப்பிடி ஒரு கேரக்டர். இவ்ளோ பிரச்னைகளுக்கு நடுவில், ஒரிஜினல் சவுகார்பேட்டையின் மொத்த சுற்றளவு அளவிற்காவது படம் ஓடியதென்னவோ உண்மை.

டார்லிங் 2:

darling-2_600_14243  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! Darling 2 600 14243
’டார்லிங்’ படத்தின் முதல் பாகம் கொடுத்த எனர்ஜி பூஸ்ட்டில் உதயமான ஐடியாதான் ‘டார்லிங் 2’. ஜி.வி.பிக்கு டபுள் ஸ்ட்ராங் என்ட்ரி கொடுத்த டார்லிங் முதல் பாகம், பேய் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியதென்றால், டார்லிங் 2 அந்த வகையில் கொஞ்சம் பின்னடைவு தான்.

நான்கு நண்பர்கள் விடுமுறைக்காக வால்பாறையில் ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு செல்கிறார்கள். அங்கு இருக்கும் பேய் நான்கு பேரில் ஒருவரைக் கொல்லப்போகிறேன் என சொல்கிறது. அது யார்? ஏன்? என்பது மீதிப் படம்.

ஹலோ நான் பேய் பேசறேன்:

hello_600_14553  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! hello 600 14553
ஒருபக்கம் சுந்தர்.சி இயக்கி நடித்த படம் ‘அரண்மனை 2’ என்றால், அவரது தயாரிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் ‘ஹலோ நான் பேய் பேசறேன்’.

வைபவ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், ஓவியா ஆகியோரின் அட்டகாச காம்பினேஷன் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது.

மொபைலுக்குள் பேய் அது தான் படத்தின் கான்செப்ட். விபத்து ஒன்றில் இறந்து போகும் ஓவியாவின் ஆவி மொபைலுக்குள் புகுந்து கொள்கிறது (செம கான்செப்ட்ல) அந்த மொபைலை, யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து வீட்டுக்கு தூக்கிவருகிறார். அதன் பின் நடக்கும் அமானுஷ்யமும், ஓவியா எதற்காக மொபைலில் புகுந்தார் என்பதும் ஷ்ஷ்ஷ்யப்பா ரகம்.

ஜித்தன் 2:

jithan_600_14124  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! jithan 600 14124
ஜித்தன் எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் அதிலிருந்த கொஞ்ச சுவாரஸ்யம் கூட இல்லாமல் இருந்ததாலேயே தோற்றது ஜித்தன் 2. தந்தையின் ஆசையை நிறைவேற்ற சொந்த வீடு வாங்குகிறார் ஹீரோ, அந்த வீட்டில் இருக்கும் பேய் அவரைத் துரத்த நினைக்கிறது. ஏன்? என்ன நடந்தது என்பது கதை. மோசமான மேக்கிங், அரதப்பழைய காட்சிகள் என ஆடியன்ஸைக் கடுப்பாக்கியது படம்.

ஜாக்சன் துரை:

jackson-durai_600_14451  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! Jackson Durai 600 14451
கோலிவுட்டின் பேய் ஃபீவர் சிபிராஜூக்கும் தொற்றிக் கொண்டதால் உருவான திரைப்படம்தான் ‘ஜாக்சன் துரை’. சிபிராஜூக்கு எப்போதும் தோளோடு தோள் கொடுக்கும் ஃப்ரெண்ட்லி தந்தையான சத்யராஜ்தான் இதில் ‘படுபயங்கர’ ஜாக்சன் பேய்.

சிபிக்கு ஜோடியாக க்யூட் பிந்து மாதவி. அன்னாள் சுதந்திரப் போராட்டத்தையும், இன்னாள் காதல் போராட்டத்தையும் கொத்து பரோட்டா போட்டு வெளிவந்த ஒரு பேய்ப்படம்.

திரைக்கதையில் இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சலிப்பூட்டினாலும், வசூலில் ஏமாற்றாத திரைப்படமாகவே ரசிகர்களிடம் பெயர் பெற்றது ‘ஜாக்சன் துரை’.

தில்லுக்கு துட்டு:

dhilluku-dhuddu3_600_14288  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! dhilluku dhuddu3 600 14288
சகலகலா காமெடியன் என்று பெயரெடுத்த சந்தானத்தின் ஹீரோ அவதாரக் களத்தில் இரண்டாவது திரைப்படம்தான் ’தில்லுக்கு துட்டு’. கெட்டப்ப மாத்தி, செட்டப்ப மாத்தி ‘ஸ்லிம் ஃபிட்’ சந்தானமாக அவர் அடிக்கும் லூட்டிகள் பக்கா மாஸ். பேயுடன் சண்டை, பேயையே கலாய்ப்பது என்று சந்தானத்திற்கு 2016ம் ஆண்டில் செம பிக்கப் கொடுத்த கோஸ்ட் ஃபிலிம்தான் ‘தில்லுக்கு துட்டு’.

நாயகி:

naya_600_14460  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! naya 600 14460

த்ரிஷா ‘நாயகி’யாக அதாங்க ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்க பிள்ளையார் சுழி போட்டது ‘நாயகி’ திரைப்படம்தான். ’நாயகி அக்கா வந்துகிட்டுருக்காங்க’ என்று ட்ரெய்லரில் மாஸ் பில்டப் கொடுத்தாலும், தியேட்டர்களில் ‘நாயகி அக்கா எப்போ கிளம்புவாங்க?’ என்று கேட்குமளவிற்கு நிறைய போரடித்து.

த்ரிஷாவை வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது கேமிரா வழியாகப் பார்த்தால் தெரியும் என்பதும், அதற்கு சொல்லும் காரணமும்…. முடியல சாமி என தியேட்டரில் அலறினார்கள் ஆடியன்ஸ்.

தேவி:

devi_600_14282  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! devi 600 14282
ஹன்சிகா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று மேலே சொல்லப்பட்ட அத்தனை அழகான பேய்களையும் சாரி…சாரி ஹீரோயின்களின் நடிப்பையும் தூக்கிச் சாப்பிட்டார் தமன்னா ‘தேவி’ திரைப்படம் மூலம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபுல் ஜோஷுடன் பிரபுதேவா ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்து அசத்தினார் என்றால், பாந்தமான மனைவி, பயங்காட்டும் ஹீரோயின் பேய் என்று பிரபுதேவா நடிப்பையே ‘கொஞ்சம் ஓரமா நில்லுப்பா’ என்று சொல்ல வைத்தார் ‘தேவி’ தமன்னா.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், மூன்று மொழிகளில் தயாரான ’தேவி’ கலக்கல் காக்டெய்ல். சாதரண கதை தான் என்றாலும், ஏ.எல்.விஜயின் மேக்கிங் மூலம் தரமான பேய்ப்படமாக இருந்தது ’தேவி’.

காஷ்மோரா:

kash_600_14542  பேய்கள் ஜாக்கிரதை முதல் மியாவ் வரை... 2016-ல் மிரட்டிய பேய்கள்! kash 600 14542
’ஓயா ஓயா’ என ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த சந்தோஷ் நாராயணனின் இசையும், படத்தின் சரித்திர கால ட்ரெய்லரும், கார்த்தியின் மொட்டை கெட்டப்பும், நயனின் பொன் தூறல் சிரிப்பும் காஷ்மோரா படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டிருந்தது.

கூடவே, ப்ளாக் மேஜிக் திரைக்கதை, ராஜா-ராணி பேய் ஆகிய எக்ஸ்ட்ரா பிட்டுகளும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்தன.
ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்கு ‘காஷ்மோரா’ பேய் கண்மணிகளைக் கவரவில்லை. இருந்தபோதும், 2016ம் ஆண்டில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் வந்த திரைப்படம் என்பது இந்த படத்திற்கு பேய்ப்பட ரசிகர்களிடையே வரவேற்பைதான் கொடுத்தது.

இவை தவிர குறிப்பிடத் தகுந்த இரண்டு படங்களான களம், சைத்தான் என இரண்டுமே பேய் பட பாணியிலேயே நகர்ந்து பின்பாதியில் வேறு ஒரு ஜானருக்குள் சென்றது.

இது தவிர மோ, மியாவ் என இரண்டு படங்கள் வருடத்தின் கடைசி பேய்ப்படமாக வெளியாகியிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இருக்கும் படங்கள் தவிர பயம் ஒரு பயணம், விடாயுதம், 54321, போன்ற பேய்ப்படங்களும் 2016ல் ‘பேய் ட்ரெண்ட்’ என்னும் இலக்கில் பயணம் செய்திருந்தபோதும், எண்ணிய தூரத்தை எட்டவில்லை.

எனினும், தொட்டுத் தொடரும் பாரம்பரியமாய் தமிழ் சினிமாவில் இனிவரும் ஆண்டுகளிலும் பேய்களின் துரத்தல் தொடரும் என்பதாய் முடிந்துள்ளது இந்த பேய்…பிசாசு…பூதம் சினிமாக்களின் வரவு…!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News