ilakkiyainfo

ilakkiyainfo

பேருந்தை ஓட்டிய குரங்கு; வைரலான காணொளி

பேருந்தை ஓட்டிய குரங்கு; வைரலான காணொளி
October 07
08:03 2018

கர்நாடகாவில் குரங்கை பேருந்து ஓட்டுவதற்கு அனுமதித்த ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குரங்கு ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டும்போது அதில் பயணம் செய்தவர்கள் புகாரளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாறாக குரங்கு பேருந்து இயக்குவதை போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிய பிறகு கர்நாடக அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

“பேருந்தின் இயக்கத்தை ஒரு குரங்கிடம் கொடுத்துவிட்டு பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஓட்டுநரின் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்று கர்நாடக அரசு போக்குவரத்துத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், ஆச்சர்யமளிக்கும் விதமாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் ஓட்டுநர் மீதான நடவடிக்கையை பொது மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.

அருமையான காணொளி. எதற்கு அந்த ஓட்டுநரை பணிநீக்கம் செய்யவேண்டும்? இதேபோன்று இன்னொருமுறை செய்யக்கூடாது என்று எச்சரித்து விட்டிருக்கலாமே” என்று பராக் ஹெடா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமையே நடந்தேறியுள்ள நிலையில், இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலான பிறகே தங்களுக்கு தெரியவந்ததாக கர்நாடக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குரங்கு பயணி ஒருவருடன் பேருந்தில் ஏறியதாகவும், ஓட்டுநரின் இருக்கை தவிர மற்ற இடத்தில் அமர்வதற்கு அது மறுத்துவிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேருந்தின் கட்டுப்பாட்டை குரங்கிடம் கொடுத்த அந்த ஓட்டுநரின் பெயர் பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஓட்டுநர் ஒரு கையில் பேருந்தை இயக்குவதை வழக்கமாக கொண்டவர் என்று குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. குரங்கு பேருந்தை இயக்கிக்கொண்டிருந்தபோது பிரகாஷ் சாலையை பார்த்துக்கொண்டிருப்பது காணொளியில் தெரிகிறது.

தான் இறங்கிய வேண்டிய இடம் வந்ததும் பேருந்தின் கட்டுப்பாட்டை ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த குரங்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News