ilakkiyainfo

ilakkiyainfo

59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன?

59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன?
October 04
11:28 2017

59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டலின் திறந்தவெளியில் 1–ந் தேதி இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணிக்கு சற்றும் எதிர்பாராத வகையில், ஸ்டீபன் கிரேக் பாட்டாக் (வயது 64) என்பவர், தானியங்கி துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர் சுட்டுக்கொண்டிருந்தார். இதில் 59 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 527 பேர் காயம் அடைந்தனர்.

44F40D4700000578-4946612-This_is_the_carnage_that_occurred_on_Sunday_as_festivalgoers_scr-a-116_1507097448538  59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன? 44F40D4700000578 4946612 This is the carnage that occurred on Sunday as festivalgoers scr a 116 1507097448538

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஸ்டீபன் பாட்டாக்கும் உயிரிழந்தார். அவர் அதிரடிப்போலீசார் அங்கு வந்துசேர்வதற்கு முன்னால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

அதை தொடர்ந்து போலீசார் புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் தாக்குதல் நடத்தி விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ள ஸ்டீபன் பாட்டாக் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர், நெவாடா மாகாணம் மெஸ்குயிட் என்ற இடத்தை சேர்ந்தவர். ஓய்வு பெற்ற கணக்காளர்.

அவர் தீவிரமான சூதாட்டக்காரர். பணக்காரர். அவர் 34 துப்பாக்கிகளை குவித்து வைத்துள்ளார். அவரது வீட்டில் இருந்து 18 துப்பாக்கிகளும், தாக்குதல் நடத்தப்பட்ட ஓட்டலில் அவர் தங்கி இருந்த அறையில் இருந்து 16 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

லாஸ் வேகாஸ் தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருந்தாலும்கூட, இதில் சர்வதேச பயங்கரவாத தொடர்பு இல்லை என்று அமெரிக்க மத்திய புலனாய்வு படையினர் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலை அவர் நடத்தியதின் பின்னணி என்ன என்பது மட்டும் இன்னும் தெரியவரவில்லை. இதில் துப்பு துலங்காமல் போலீசார் திணறுகின்றனர்.

இதுபற்றி லாஸ் வேகாஸ் நகர மேயர் கரோலின் குட்மேன் கருத்து தெரிவிக்கையில், ‘‘என்னை பொறுத்தமட்டில் இந்த தாக்குதல் வெறுப்புணர்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட பைத்தியத்தின் வேலை என்றுதான் சொல்வேன்’’ என குறிப்பிட்டார்.

லாஸ் வேகாஸ் தாக்குதலின்போது, பல நூறு ரவுண்டுகள் சுட்டுத்தள்ளிய ஸ்டீபன் பாட்டாக், நிமிடத்துக்கு 400 முதல் 800 ரவுண்டுகள் சுடத்தக்க விதத்தில் தானியங்கி முறையில் மாற்றி அமைக்கக்கூடிய அளவு குண்டுகளை கையிருப்பு வைத்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News