ilakkiyainfo

ilakkiyainfo

பொலித்தீன் கவரில் மெஸ்ஸியின் மனதை வென்ற சிறுவன் : நேற்று இடம்பெற்ற அரிய சம்பவம் (காணொளி இணைப்பு)

பொலித்தீன் கவரில் மெஸ்ஸியின் மனதை வென்ற சிறுவன் : நேற்று இடம்பெற்ற அரிய சம்பவம் (காணொளி இணைப்பு)
December 14
07:40 2016

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மொர்டஷா அகமதி. கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோ மெஸ்சியின் தீவிர ரசிகன்.

அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 10ம் எண் ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம்.

js116055319_afp_topshot-afghan-boy-murtaza-ahmadi-pose_1-large_trans_nvbqzqnjv4bqqvzuuqpflyliwib6ntmjwfsvwez_ven7c6bhu2jjnt8  பொலித்தீன் கவரில் மெஸ்ஸியின் மனதை வென்ற சிறுவன் : நேற்று இடம்பெற்ற அரிய சம்பவம் (காணொளி இணைப்பு) JS116055319 AFP TOPSHOT Afghan boy Murtaza Ahmadi pose 1 large trans NvBQzQNjv4BqqVzuuqpFlyLIwiB6NTmJwfSVWeZ vEN7c6bHu2jJnT8சிறுவன் அகமதி, லயனல் மெஸ்சி அணிவது போன்ற ஜெர்சி ஒன்றை வாங்கித் தருமாறு தந்தையிடம் அடம் பிடித்து கேட்டுக்கொண்டிருந்தான்.

அகமதியின் தந்தைக்கோ, லியோ மெஸ்சி அணிவது போன்ற ஜெர்சியை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை.

இதையடுத்து பிளாஸ்டிக் பை ஒன்றை எடுத்து அதில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சி போன்று மெல்லிய நீலம் மற்றும் வெள்ளைக் கோடுகளை உருவாக்கி 10ம் எண் பொறித்து ‘மெஸ்சி’ என எழுதி அகமதியிடம் கொடுத்துவிட்டார்.

kid-boy-plastic-baj-10-lionel-messi-argentina-jersey-1453829031-800  பொலித்தீன் கவரில் மெஸ்ஸியின் மனதை வென்ற சிறுவன் : நேற்று இடம்பெற்ற அரிய சம்பவம் (காணொளி இணைப்பு) kid boy plastic baj 10 lionel messi argentina jersey 1453829031 800இதையடுத்து, அந்த பிளாஸ்டிக் ஜெர்சியை அணிந்து அகமதி விளையாடத் தொடங்கினான்.

கடந்த 11 மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. அகமதி மெஸ்சியின் பிளாஸ்டிக் ஜெர்சி அணிந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

இந்த தகவல் பார்சிலோனா ஸ்டார் மெஸ்சிக்கு தெரிய வந்தது.

இதையடுத்து மெஸ்சியின் நண்பர்கள் சிலர் காபூல் வந்து அகமதியை சந்தித்தனர். மேலும் அவனுக்கு கால்பந்து, பூட் மற்றும் பார்சிலோனாவின் மெஸ்ஸி ஜெர்சியையும் வழங்கினார்.  ஆப்கானிஸ்தான் தேசிய அணியுடன் விளையாடும் வாய்ப்பும் அகமதிக்கு கிடைத்தது.

topshot-fc-barcelona-lionel-messi-talk  பொலித்தீன் கவரில் மெஸ்ஸியின் மனதை வென்ற சிறுவன் : நேற்று இடம்பெற்ற அரிய சம்பவம் (காணொளி இணைப்பு) TOPSHOT FC Barcelona Lionel Messi talkபிற்காலத்தில் மெஸ்ஸி போலவே ஒரு கால்பந்து வீரனாக வேண்டுமென்பது அகமதியின் கனவும் கூட.

காபூலில் மெஸ்ஸியின் நண்பர்கள் அகமதியை சந்தித்த பிறகு அல்ஜஸிரா தொலைக்காட்சி சிறுவனிடம் பேட்டி கண்டது.

அப்போது, ”மெஸ்ஸியையும் கால்பந்தையும் நேசிக்கிறேன். என்றாவது ஒருநாள் மெஸ்ஸியை சந்திப்பேன்” என அகமதி கூறியிருந்தான். தற்போது அகமதியின் கனவும் உண்மையாகியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2017
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

சிறந்த சேவை மேலும் தொடரட்டும் [...]

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு [...]

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் [...]

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க [...]

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News