பதுங்கியிருந்த கருணா மீண்டும் பேச தொடங்கியுள்ள நிலையிலேயே மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் எமக்கு ஆழமான சந்தேகங்கள் உண்டு.

எனவே, இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை, இன்னொருவர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைத்தூக்கியுள்ளார். இவர் தன்னை ஒரு அமைச்சராக தெரிவித்துக்கொண்டு,  நான் மீண்டும் வந்துட்டேனு சொல்லு என்று ஒரு சினிமா நடிகரின் தொணியில் கூறியுள்ளார்.

இந்த போலி அமைச்சரின் கட்சியினராலேயே அங்கு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனவே இவை தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.