ilakkiyainfo

ilakkiyainfo

போனி கபூர் காதலை சொன்னதும் கோபத்தில் 8 மாதமாக பேசாமல் இருந்த ஸ்ரீதேவி

போனி கபூர் காதலை சொன்னதும் கோபத்தில் 8 மாதமாக பேசாமல் இருந்த ஸ்ரீதேவி
March 13
18:06 2018
மும்பை: போனி கபூர் தன் காதலை சொன்னதும் ஸ்ரீதேவி அவருடன் 8 மாதங்களாக பேசவே இல்லையாம்.
ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியை பார்த்ததும் காதல் வசப்பட்டார்.முதல் மனைவியிடம் உண்மையை சொல்லிவிட்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்தார் போனி. இது குறித்து போனி கபூர் பேட்டி ஒன்றில் முன்பு கூறியதாவது,

நான் ஸ்ரீதேவி மீது காதல் வயப்பட்டபோது அது முதலில் ஒருதலையாக தான் இருந்தது. ஒரு முறை சென்னையில் என் நண்பர், அவரின் மனைவி, நான், ஸ்ரீதேவி, அவரின் அம்மா மதிய உணவுக்கு ஹோட்டலில் சந்திப்பதாக இருந்தது

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வர முடியவில்லை. அது தான் ஸ்ரீதேவி தனது குடும்பத்தார் யாரும் இல்லாமல் முதல்முறையாக வெளியே வந்தது.

மதிய உணவு சாப்பிட்ட பிறகு நான் ஸ்ரீதேவியை வீட்டில் விடச் சென்றபோது என் காதலை தெரியப்படுத்தினேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. அதன் பிறகு 8 மாதங்களாக அவர் என்னுடன் பேசவே இல்லை.

1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது.

அப்போது ஸ்ரீதேவி சீ ராக் ஹோட்டலில் தங்கியிருந்தார். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உடன் ஸ்ரீயின் அம்மாவுக்கு போன் செய்து பேசி அவரின் மகளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

1993ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஸ்ரீதேவி எங்கள் வீட்டில் தங்கினார்.

அப்போது அவரின் கோபம் மாறி சமாதானம் ஆனார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அவர் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது என்றார் போனி கபூர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News