ilakkiyainfo

ilakkiyainfo

போலி முகவரியில் சொகுசுக்கார்! -நடிகை அமலா பாலைத் துரத்தும் வரி ஏய்ப்புப் புகார்

போலி முகவரியில் சொகுசுக்கார்! -நடிகை அமலா பாலைத் துரத்தும் வரி ஏய்ப்புப் புகார்
October 29
20:48 2017

போலி முகவரி கொடுத்து சொகுசுக் கார் வாங்கி ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமலா பால் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக விலைகொண்ட பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசுக் காரை வாங்கியதாகத் தெரிகிறது. அந்த சொகுசுக் காரை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் அவர் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சொந்தமாநிலமான கேரளாவில் அந்த காரைப் பதிவு செய்திருந்தால் வரியாக மட்டுமே, காரின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாக, அதாவது ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலுத்த வேண்டும்.

அதைத் தவிர்ப்பதற்காகவே, அவர் புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்து அங்கு பதிவு செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள மாணவர் ஒருவரின் முகவரியில் அந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவருக்கு எந்த தகவலும் தெரியாது என்றும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த காரை கொச்சியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தியுள்ள நடிகை அமலாபால், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அந்த காரைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News