ilakkiyainfo

ilakkiyainfo

போஸ்டரில் தம்மை கத்தியால் குத்தும் சிறுவர்கள் வீடியோவை வெளியிட்டு கமல் ஆவேச ட்வீட்

போஸ்டரில் தம்மை கத்தியால் குத்தும் சிறுவர்கள் வீடியோவை வெளியிட்டு கமல் ஆவேச ட்வீட்
November 15
02:42 2017

சென்னை: போஸ்டர் ஒன்றில் தமது முகத்தை கத்தியால் குத்தி குத்தி கிழிக்கும் கொலை வெறியூட்டப்பட்ட சிறுவர்களின் வீடியோவை முன்வைத்து ட்விட்டரில் ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கமல்ஹாசன் இன்று இரவு தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு இது:
என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது.

இயற்க்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார். எதற்காக கமல்ஹாசன் இதனை பதிவிட்டிருக்கிறார்? என்ன நடந்தது? என பலரும் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது கமல்ஹாசன் மற்றொரு பகீர் பதிவை வெளியிட்டிருந்தார்.

இசை என்பவரது வீடியோவுடன் கூடிய ட்வீட்டர் பதிவை ரீட்விட் செய்து “புரியாதவர்க்கு புரியும்படியாய்” என அதில் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்.

இசை என்பவர் “இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. @ikamalhaasan நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர்” என்ற குறிப்பிடுடன் பதிவிட்டுள்ள வீடியோ இதுதான்:

இதற்குதான் கமல்ஹாசன் பதற்றத்துடனும் ஆவேசத்துடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News