ilakkiyainfo

ilakkiyainfo

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா? அல்லது முஸ்லிமா?: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி!!

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா? அல்லது முஸ்லிமா?: மறைக்கப்பட்ட  மர்ம பின்னணி!!
February 07
21:08 2020

மகாத்மா காந்தி கொலை வழக்கு 1949-ம் ஆண்டே முடிக்கப்பட்டாலும், அது தொடர்பான பல சர்ச்சைகள் இன்னமும் உலவிக்கொண்டே இருக்கின்றன.

அதில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு சர்ச்சை, ‘காந்தியின் உடலில் பாய்ந்த நாலாவது குண்டு’.

இதை தற்போது தொடங்கி வைத்திருப்பவர் பங்கஜ் பத்னிஸ் என்ற ஆராய்ச்சியாளர். அபினவ் பாரத் அமைப்பின் டிரஸ்டியாகவும் உள்ளார்.

‘காந்தி கொலை வழக்கில் பல விஷயங்கள் இழுத்து மூடப்பட்டதாகவும், காந்தி மீது நான்கு குண்டுகள் சுடப்பட்டதாகவும், மூன்று குண்டுகள் நாதுராம் கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்றும், ‘நான்காவது குண்டை சுட்டது யார்?’

மகாத்மா நான்கு குண்டுகள் பாய்ந்து இறந்தார்’ என்ற அன்றைய தினத்தில் பல பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் இந்த வழக்கை தொடுத்திருக்கிறார் பங்கஜ் பத்னிஸ்.

அதுமட்டுமல்லாமல், காந்தி கொலையில் வேறு சதி உள்ளதா என்றும், இந்தக் கொலைக்கும் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதையும் விசாரிக்கும் வகையில் புதிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை தேடுவதில், நீதிமன்றத்துக்கு உதவ முன்னால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான அமரேந்திர சரணை ‘அமிகஸ் கியூரி’யாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

புதிதாக விசாரணை தொடங்கப்படுமா? என்ற கேள்விக்கு, நீதிமன்றம் அக்டோபர் 30-ம் தேதி விடை கொடுக்கும் என்று நம்புவோம்.

gandhi-54-1496069616

காந்தி கொலை வழக்கில், ‘யார் தூண்டுதலின் பேரில் நாதுராம் கோட்சே, மகாத்மாவை சுட்டான்? துப்பாக்கியின் உரிமையாளர் யார்? என்ற கேள்விகளுக்கு விடை காணாமலேயே 1949-ம் ஆண்டு வழக்கு முடிக்கப்பட்டது நெருடலை ஏற்படுத்துகிறது.

ஒருவேளை பங்கஜ் பத்னிஸின் கோரிக்கை ஏற்கப்பட்டால் இதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புவோம்.

30 ஜனவரி, 1948 மாலை 5.12 மணிக்கு மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அன்று மாலை 6.20 மணிக்கு ஆல் இந்திய ரேடியோ அதை உலகுக்கு எப்படி அறிவித்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

“இன்று மாலை ஐந்து மணி இருபது நிமிட அளவில், டெல்லியில் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி இந்து மதத்தை சேர்ந்தவன்” என்று அறிவித்தது.

கொலை பற்றிய அறிவிப்பில் கொலையாளியின் மதம் குறித்த அறிவிப்பு ஏன்?

இந்து, முஸ்லிம் கருத்து வேறுபாடு உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. காந்தியைக் கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று யாரும் அனுமானித்துவிடக்கூடாது என்பதற்காக அரசு இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டதாகச் சொல்லப்பட்டது.

இதனால், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை வெடிக்கவில்லை. அதே நேரத்தில், அறிவிப்பின் நோக்கம் நிறைவேறியதா என்றால் இல்லை.

அன்றைய தினமே பம்பாயில் குறிப்பிட்ட இன மக்கள் தாக்கப்பட்டார்கள். பதினைந்து பேர் கொல்லப்பட்டார்கள். ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இத்தோடு இந்தப் பிரச்னை நின்றுவிடவில்லை. இன்றுவரை ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள், ‘காந்தியைக் கொன்றவர்கள்’ என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். கலவரத்தில் யார் பாதிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும்விதமாக அந்த அறிவிப்பு அமைந்தது.

காந்தி கொலை பற்றிய செய்தியை ரேடியோவில் வெளியிடும்போது, ‘காந்தியைக் கொன்றவன் ஒரு இந்து என்ற வார்த்தைகளை சொல்லச் சொன்னவர் மௌண்பேட்டன் பிரபு’ என்ற ஒரு கூடுதல் தகவலும் உலவுகிறது. இந்தச் செய்தி நம்மில் பலருக்குத் தெரியாது.

ஒரு தீவிரவாதச் செயல் நடைபெற்றால், அதில் ஈடுபட்ட தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவன், எந்த உட்பிரிவைச் சார்ந்தவன் என்று குறிப்பிடப்படுவதில்லை.

பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதி, இந்தியன் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று அவர்கள் சார்ந்த தீவிரவாத இயக்கத்தின் பெயரால் மட்டுமே அவர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள்.

ஆனால், காந்தியைக் கொலை செய்தவன் “ஒரு இந்து” என்று செய்தியை வெளியிட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது.

கையில் வைத்திருக்கும் கத்தியை வைக்க இடம் இல்லாததால், பக்கத்தில் நிற்பவனின் முதுகில் குத்தி வைக்கப்பட்டது போன்ற ஒரு செயலை அன்றைய ஆட்சியாளர்கள் செய்தனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் மட்டுமே தொடர்ந்து பல காலம் ஆட்சி செய்தது. அதனால் இந்த விஷயத்தில் யாரும் அக்கறை காட்டவில்லை. ஆனால், தற்போதைய பிஜேபி அரசும் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவது சரியல்ல.

“மகாத்மா காந்தியைக் கொன்றவன் இந்து மதத்தை சேர்ந்தவன்” என்ற செய்தியை வானொலியில் வெளியிட்டதன் பின்னணியை அரசு ஆராய வேண்டும். அறிவிப்பின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய வேண்டும்.

மகாத்மா காந்தியின் கொலை இந்துக்களுக்குப் பெரிய அவப்பெயரைத் தந்தது. கொலையாளி, தான் சார்ந்த இனத்திடம் சொல்லிவிட்டு கொலைக்குச் செல்லவில்லை.

கொலையாளியை யாரும் ஏவிவிட்டதாக கொலை வழக்கில் சொல்லப்படவில்லை. ஆனால், களங்கத்தை இந்து அமைப்புகள் இன்றளவும் சுமக்கின்றன.

இந்து அமைப்புகளின் வளர்ச்சி இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்து அமைப்புகளை வெளிப்படையாக ஆதரிப்பது தடைபட்டுப்போனது. சுருக்கமாகச் சொன்னால், இந்து அமைப்புகளின் வளர்ச்சி படுகுழியில் தள்ளி மூடப்பட்டது.

ஒரு குட்டிக்கதையை படிப்போம். இந்தக் கதையை நேர்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. வார்த்தைகளுக்கிடையே அர்த்தங்களைத் தேடாதீர்கள்.

ஒரு நாடு. அந்த நாட்டு அரசன் யாரையும் நம்பமாட்டான். தனக்கு மட்டும் முக்கியத்துவம், மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன்.

அந்த நாட்டில் போர் யானை ஒன்று இறந்துபோனது. அது நாட்டுக்காகப் பல போர்க்களங்களைக் கண்டது. மக்கள் அதன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். அதன் குட்டி அநாதையானது.

நாடே சோகத்தில் மூழ்கியது. தாயிடம் காட்டியதைப் போலவே குட்டியிடமும் மக்கள் அன்பு காட்டத் தொடங்கினர். அரசனுக்கு அது எரிச்சலூட்டியது. தன் நிழலைக் கண்டே பயப்படும் மாவீரனின் மூளை சிந்திக்கத் தொடங்கியது. அடுத்த நாள் ஒரு கூட்டத்தைக் கூட்டினான்.

‘மக்களே! நீங்கள் நினைப்பதுபோல் இது குட்டியானை அல்ல; இது பன்றி. ஆகையால், இன்று முதல் இதை யாரும் குட்டி யானை என்று அழைக்கக்கூடாது’ என்றான்.

‘இல்லை அரசே! இது பன்றியல்ல. இதற்கு துதிக்கை இருக்கிறது பாருங்கள். இது யானை’ என்றனர் மக்கள்.

அரசனுக்குக் கோபம் வந்தது.

‘தவறு. இதன் நிறத்தைப் பாருங்கள். இதன் வாலைப் பாருங்கள். இது பன்றிதான். துதிக்கையுள்ள பன்றி’ என்று கோபத்தோடு சொன்னான்.

அரசனை எதிர்த்துப் பேச யாருக்கும் தைரியமில்லை.

அரசன் அதோடு நிற்கவில்லை. ‘வீட்டுக்கு ஒருவர் தினமும் வந்து இந்தக் குட்டியைப் பார்த்து ‘நீ ஒரு பன்றி’ என்று சொல்ல வேண்டும்’ என்று ஆணையைப் பிறப்பித்தான்.

வேறுவழியில்லாமல், மக்கள் தினமும் காலையில் குட்டியானையிடம் சென்று ‘நீ ஒரு பன்றி’ என்று சொல்லிவிட்டு தங்களின் அன்றாட பணியைத் துவக்கினர். நாளாக நாளாக, அந்தக் குட்டியானை தன்னை பன்றி என்றே நினைக்கத் தொடங்கியது.

மனத்தால் பன்றியாக இருந்தாலும், உடலால் யானை அல்லவா! அது வளரத் தொடங்கியது. விஷயம் அரசனின் காதுகளை எட்டியது. யானைக்கு அளிக்கப்படும் உணவின் அளவை குறைக்கச் சொன்னான். ஆனாலும் யானையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காவலர்களை அழைத்தான்.

‘காவலர்களே! ஒரு குழியை வெட்டுங்கள். அதனுள் இந்தப் பன்றியை இறக்கிவிடுங்கள். பன்றியின் முதுகு, தலை மட்டுமே வெளியே தெரிய வேண்டும். மற்றவர்கள் அதை பார்க்கும்போது அதன் வளர்ச்சி யாருக்கும் தெரியக்கூடாது. அதுமட்டுமல்ல, அது வளர வளர குழியின் ஆழத்தை அதிகப்படுத்துங்கள்’ என்றான் அரசன்.

குழி வெட்டப்பட்டது. யானை அதனுள் இறக்கிவிடப்பட்டது. இனி யானை வளர்ந்தாலும் அதன் வளர்ச்சி யாருக்கும் தெரியாது.

ஒரு நாள், யானையைப் பார்க்க ஒரு சாது வந்தார். உடன் அரசனும் வந்தான். சாதுவை வணங்கியது யானை.

சாது அதனிடம் ஏதோ சொன்னார். அவ்வளவுதான், உடலை சிலிர்த்துக்கொண்டு குழியை விட்டு வெளியே வந்தது. அரசனை துரத்தத் தொடங்கியது.

‘சாதுவே! அதனிடம் என்ன சொன்னீர்கள்? அதற்கு மதம் பிடித்துவிட்டதா? அரசனை துரத்துகிறதே?’ என்று மக்கள் கேட்டனர்.

சாது பேசினார்.

‘என்னது மதமா?’ மக்களே! யானையிடம் பன்றியைக் கண்டான் அரசன். நான் பன்றியிடம் யானையைக் கண்டேன். இதை அதனிடம் சொன்னேன்.

அவ்வளவுதான். நீங்கள் பார்ப்பது அடக்கிவைக்கப்பட்ட ஒருவரின் எழுச்சி, வளர்ச்சி. உங்கள் வசதிக்காக ‘மதத்தை’ அதன் மீது திணிக்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

யானையின் ஓட்டம் நின்றதா? அரசன் சிக்கினானா? என்பது நமக்குத் தேவையில்லை. நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை மூன்று. ஒன்று, அது பன்றியல்ல என்பது. இரண்டு, அதன் வளர்ச்சி, மூன்று, அதன் மீது ‘மதம்’ திணிக்கப்படக்கூடாது. அவ்வளவுதான்.

இது வெளிப்படையான கதை. இதற்கு சாயம் பூச நினைக்காதீர்கள். ஏனென்றால், அது உங்கள் மனத்தில் இருக்கும் சாயத்தை வெளிக்கொணர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

- அன்புடன் சாது ஸ்ரீராம்

(saadhusriram@gmail.com)

Related Articles

3 Comments

 1. Mansoor
  Mansoor October 14, 07:00

  காந்தியை கொன்றது “இஸ்மாயில்” என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே.

  1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

  சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”

  உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

  இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

  கட்டுரையாளர் சொன்ன கதை முஸ்லிம் சமூகத்திற்கு மிக பொருத்தம்.

  Reply to this comment
  • Vani RAM
   Vani RAM October 15, 21:29

   நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் , கொலை செய்தவன் நிட்ச்சியம் ஒரு முஸ்லீம் , இந்து என்று அன்று அறிவிக்கா விடடால் நாதாரி பயங்கர வாத இனத்தை அன்றே இந்தியாவை விட்டு துரத்தி இருப்பார்கள், ( இந்த இடத்தில் மியான்மார் மக்களை கடடயம் பாரடடமல் இருக்க முடியாது, அவர்களின் தூர நோக்கு வியக்க தக்கது. ) இந்திய இன்றைய மியான்மார் போன்று அன்று ஒரு பயங்கரவாதம் அற்ற நாடாக இருந்திருக்கும், ஆனால் இன்று உலகில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடக்கும் நாடாக இந்திய உள்ளத்துக்கு இந்த மூன்று முடடாள் களே காரணம்.

   Reply to this comment
 2. Mansoor
  Mansoor October 16, 07:43

  உங்கள் அறிவை கண்டு வியக்க… காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி இந்திய நீதித்துறையால் மரண தண்டனை வழங்கியது 1949 நவம்பர் 15. இடைப்பட்ட ஒன்றே முக்கால் வருட விசாரணைகளில் அவர் ஒரு முஸ்லிம் என்று கண்டு பிடிக்கவில்லை. வாணி ராமை தவிர எவனுமே இதுவரை கண்டு பிடிக்கவில்லை. அப்படியாயின் RSS இந்து தீவிரவாத அமைப்பு ஏன் கோட்சேயை தியாகியாக கொண்டாடுகிறது.

  உங்களுக்கு முஸ்லிம்கள் மீதான கடுப்பு தீராது, அதோடே நிம்மதியை தொலைத்து வாழுங்கள்.

  Reply to this comment

Write a Comment

Click here to cancel reply.

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News