ilakkiyainfo

ilakkiyainfo

மகிந்தவுக்கு 103 – ரணிலுக்கு 100 : பெரும்பான்மையை காட்ட இரு தரப்பும் கடும் பிரயத்தனம்!!

மகிந்தவுக்கு 103 – ரணிலுக்கு 100 : பெரும்பான்மையை காட்ட இரு தரப்பும் கடும் பிரயத்தனம்!!
November 25
21:01 2018
 கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரும் மற்றும் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினரும் தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 107 ஆசனங்களையும் , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 95 ஆசனங்களையும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் , ஜே.வி.பி 6 ஆசனங்களையும் , ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது தேசிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்திருந்தாலும் அவர்களால் இன்னும் தமக்குறிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 6 பேரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஒருவரும் புதிய அரசாங்கத்திற்கு தமது ஆதவளித்து வருகின்றனர்.

இதன்படி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான தரப்பு எம்.பிக்களின் எண்ணிக்கை 103ஆக உயர்வடைந்துள்ளதுடன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தரப்பு எம்.பிக்களின் எண்ணிக்கை 100ஆக குறைவடைந்துள்ளது.

இதனால் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் இன்னும் 10 பேரின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் ரணில் தரப்பினர் 13 பேரின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதனால் அரசியல் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

இவ்வாறான நிலைமையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படவுள்ளன.

இதனால் அதற்கு முன்னர் தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இரண்டு தரப்பினரும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி இரண்டு தரப்பினரும் மற்றைய தரப்பிலிருந்தும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்து பெரும்பான்மையை நிரூபித்துக்கொள்வதற்காக திட்டங்களை வகுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று எதிர் தரப்பு கட்சிகளிலிருந்து மேலும் சிலரை இணைத்துக்கொள்ளவும் தற்போது பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News