ilakkiyainfo

ilakkiyainfo

மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -11)

மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!!  (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -11)
June 21
12:37 2018

• 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை தாக்குதல்

• இறுதி யுத்தத்துக்கும், பெரும் மனிதப் பேரவலத்துக்கும், புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாக காலண்டரில் இருந்து கிழிக்கப் பட்ட அந்த நாள் 2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு மாவிலாறு அணை பூட்டப்படுகிறது.

• புலிகள் எப்போதுமே நம்ப நடப்பார்களே தவிர நம்பி நடக்கமாட்டார்கள்.

தொடர்ந்து…

இலங்கை பொதுத் தேர்தலையொட்டி 2005 ம் ஆண்டு புலிகளுக்கும் மகிந்தா தரப்புக்கும் இரகசியப் பேச்சுக்கள் தொடங்கியது.

புலிகள் தரப்பில் எமில் காந்தன் என்பவர் பேரம் பேசலில் ஈடுபட்டார்.

ரணில் விக்கிரமசிங்க வுக்கு தமிழர்களின் வாக்குகள் சென்று விடாமல் தடுத்து மகிந்தாவை எப்படியும் வெற்றி பெறவைத்து விடுவதாக புலிகள் உறுதியளித்தார்கள்.

அதற்கு கைமாறாக பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டார்கள்.

namal-emil-010216-280-seithy மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!!  (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -11) Namal Emil 010216 280 seithyநாமல் ராஜபக்ஸவுடன் எமில் காந்தன்

இந்தப் பணத்தை எமில்காந்தனே பெட்டிகளில் எடுத்துச் சென்றதாகவும் பெற்றுக்கொண்ட பணம் சுமார் இரு நூறு மில்லியன் ரூபாய்கள் என அன்று செய்திகள் கசிந்திருந்தது.

மகிந்தராஜபக்ச வுடன் நடந்த பேரம் பேசலின் பின்னர் எமில்காந்தன் வெளிநாடு சென்று விட்டார்.

தேர்தல் மூலம் மகிந்தா அரசு அகற்றப்பட்டு புதிதாக பதவுயேற்ற மைத்திரி அரசு எமில் காந்தனுக்கான சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது .

இந்தக்கட்டுரை எழுதப்படுக் கொண்டிருக்கும் நேரம் எமில்காந்தன் இலங்கை சென்று நீதி மன்றத்தில் மகிந்தாவுடன் நடந்த பேரம் பேசல் மற்றும் கைமாறிய பணம் பற்றி வாக்கு மூலம் அளிக்கப் போவதாக சேதிகள் வெளியாகியுள்ளது.

இந்தக்கட்டுரை வெளியாகும்போது சிலநேரம் அவர் வாக்கு மூலம் அளித்திருக்கலாம் .

தேர்தல் நெருங்கும் வேளை வாக்களிக்க தமிழர்களும் ஆவலாக காத்திருந்தார்கள்.

ஆனால் தேர்தலை புறக்கணிக்கும் படியும் யாரும் வாக்களிக்கக் கூடாது அப்படி மீறி வாக்களித்தால் அவர்கள் துரோகிகளாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் அறிவித்தார்கள்.

தேர்தல் நடந்து முடிந்தது மகிந்தா புலிகள் கூட்டணி  எதிர்பார்த்தது போலவே தமிழர்கள் எவரும் ஓட்டுப் போடாத நிலையில் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில்  ரணில் விக்கிரமசிங்கே  தோல்வியடைய இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதியாக நவம்பர் 19, 2005 அன்று மகிந்தராஜபக்ச பதவியேற்றார்.

அதே நேரம் பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல தான் பதவியேற்றதும் புலிகள் தன்னைத்தான் குறி வைப்பார்கள் என்று மகிந்தா கணித்திருந்தார் .

புலிகள் எப்போதுமே நம்ப நடப்பார்களே தவிர நம்பி நடக்கமாட்டார்கள்.

ஒருவரிடம் தங்கள் தேவைகளை முடிதுக்கொண்டதுமே பிற்காலத்தில் அவரால் இரகசியங்கள் வெளியாகி எந்த பிரச்சனைகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை போட்டுத்தள்ளிவிடுவார்கள்.

அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் இலங்கை சனாதிபயாகவிருந்த பிரேமதாசா மிகச் சிறந்த உதாரணமாகும்.

இலங்கையில் இந்தியப்படைகள் நிலைகொண்டிடுந்த காலத்தில் அவர்களை வெளியேற்ற அப்போது சனாதிபதியாக பொறுப்பேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்துக்கொண்டதோடு  அவரிடமிருந்து பெருமளவு ஆயுதங்களும் பணமும் பெற்றிருந்தார்கள்.

amirthalingam-680x365 மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!!  (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -11) amirthalingamஅமிர்தலிங்கம்

இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்களது வெளியேற்றத்தை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அப்பாதுரை அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரையும் பிரேமதாசவின் உதவியோடு கொழும்பில் வைத்து சுட்டுக்கொலை செய்தவர்கள்.

சிலகாலத்திலேயே பிறேமதாசவையும் தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்திருந்தனர்.

எனவே பதவிக்கு வந்த மகிந்தவும் தனக்கும் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற கோத்தபாய ராஜபக்சே வுக்கும் தனித் தனியாக நூறு பேரடங்கிய விஷேட பயிற்ச்சி பெற்ற இராணுவ பாதுகாப்பு அணி ஒன்றை உருவாக்கியதோடு தனது நடமாட்டங்களையும் இரகசியமாகவே வைத்திருந்தார்.

அவர் எதிர் பார்த்தது போலவே புலிகள் அவர்மீதும் கோதாபய ராஜபக்சே மீதும் பல கொலை முயற்சிகளை நடத்தினாலும் அதிஸ்ட வசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள்.

இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் புலிகள்  ரணிலோடு போட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செல்லுபடியற்றது எனவே புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள வேண்டும் என மகிந்தா அறிவித்தார் .

அப்படியெல்லாம் முடியாது முன்னர் போடப்பட்ட ஒப்பந்தம் தனியே இந்த இரண்டு தரப்பினரோடு மட்டும் நின்றுவிடாது நோர்ட்டிக் நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளையும் தொடர்பு படுத்திய ஓர் ஒப்பந்தமாகும்.

எனவே புதிய ஒப்பந்தம் எதுவும் போடத் தேவையில்லை என புலிகள் தரப்பும் அடம் பிடித்துக்கொண்டேயிருக்க பேச்சுவார்தைகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

………………………………………………………………………………………………………………………….
இதை வாசித்துவிட்டீாகளா? இல்லாவிட்டால் பிளீஸ் வாசியுங்கள்
(தணுவை தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன இரகசியம்!! (பிரியங்கா சந்திப்பு பற்றி நளினி சொல்லும் பரபரப்பான தகவல்கள் – பகுதி-3)

……………………………………………………………………………………………………………………………

புலிகளையும் இலங்கை அரசையும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கு இழுக்க நோர்வே தொடர்ந்து முயற்சி செய்துகொண்டேயிருந்தது.

எதுவானாலும் மேசையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இரு தரப்பையும் ஒருவாறு 2006 ம் ஆண்டு பெப்ரவரி 22ஜெனிவாவுக்கு கொண்டு வந்தார்கள்.

அந்த பேச்சு வார்த்தைகளில் கருணா குழுவுக்கு இலங்கை அரசு ஆதரவு கொடுத்து புலிகளை பலவீனமக்குகிறார்கள்.

அவர்களிடமிருந்து ஆயுதங்களை களையுமாறு புலிகள் தரப்பு குற்றச்சாடு வைக்க அரசு தரப்பு அதை மறுக்க இரண்டு நாள் நடந்த பேச்சுக்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்து இரண்டு தரப்புமே நாடு திரும்பியிருந்தார்கள்.

அதே நேரம் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் பல இடங்களில் சிறு சிறு உரசல்களும் சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டேயிருந்தாலும் கருணா குழுவினரும் புலிகளும் காண்கிற இடத்தில் மாறி மாறி ஒருவரையொருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

யுத்த நிறுத்த கண்காணிப்பு  குழுவினரோ என்ன செய்வது என்று  விழிபிதுங்கி நின்றார்கள்.

images மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!!  (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -11) imagesஅப்போதுதான் 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை தாக்குதல் நடத்துகிறார்.

அதில் பொன்சேகா மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டவர் கோமா நிலைக்கு நிலைக்கு சென்று விடுகிறார் .

இந்த செய்தியறிந்ததும் இலங்கை இராணுவத்தினர் புலிகளின் நிலைகளை இலக்குவைத்து எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.

பதிலுக்கு புலிகளும் சில கண்ணிவெடி தாக்குதல்களை இராணுவத்தினரை குறிவைத்து தக்க பலர் கொல்லப்பட்டனர் .

இப்படி நிலைமை மோசமாகிக்கொண்டேயிருந்தது.

ஆனால் இறுதி யுத்தத்துக்கும், பெரும் மனிதப் பேரவலத்துக்கும், புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாக காலண்டரில் இருந்து கிழிக்கப் பட்ட அந்த நாள் 2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு மாவிலாறு அணை பூட்டப்படுகிறது.

13_big மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!!  (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -11) 13 big

மாவிலாறு என்பது இலங்கையில்கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கு அண்மித்து வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று.

இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தது.

இந்தக் கதவுகள்  திறந்து விடப்பட்டால்,  மாவிலாற்றின் நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாயும்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு அணைக்கட்டு திறக்கப்பட்டால், தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதிகள்: கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில, செருநுவர ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை செய்யும் வயல்கள்.

mavil-aru மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!!  (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -11) mavil aru
இந்தப் பகுதியில் தமிழ் சிங்கள முஸ்லிம்  என்று மூவின மக்களும் இந்த ஆற்றை நம்பியே விவசாயம் செய்வார்கள்.

பேச்சு வார்த்தைகள் தொடங்கி யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் ஆசிய அபிவிருத்தி வங்கியானது மேலும் பல கிராமத்து விவசாயிகள் பலனடையும் விதமாக மாவிலாறை புனரமைப்பு செய்து கொண்டிருந்தது.

இதன் அணைகளையே தளபதி சொர்ணத்தின் கட்டளைக்கமைய புலிகள் அமைப்பினை சேர்ந்த இருவர் ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு பூட்டி விடுகிறார்கள்.

மறுநாள் காலை ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதைக்கண்ட விவசாயிகள் வேளாண்மை அதிகாரியிடம் விடயத்தை சொல்ல அவரும் அணையை பார்வையிட சென்றபோது காவல் கடமையில் இருந்த புலிகள் அவரை தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லவிடாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

உடனே நூற்றுக்கும் அதிகமான சிங்கள விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவே பிரச்னை பெரிதாக உருவெடுத்தது.

அதன் பின்னரே புலிகளின் தலைமைக்கும் விடயம் தெரியவந்திருந்தது.

sornam_1 மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!!  (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -11) sornam 1sornam and elilan

சொர்ணம் எதுக்காக மாவிலாறை பூட்டினார் என்று விசாரணைகள் நடத்திக்கொண்டிருக்க அவகாசம் இல்லாத காரணத்தால் திருகோணமலை  அரசியல்  பொறுப்பாளர்  எழிலனிடம் (சசிதரன்) நிலைமைகளை கவனிக்கும்படி உத்தரவிட்டு விடுகிறார்.

(இவரது மனைவியே ஆனந்தி பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானவர் .)

சம்பவ இடத்துக்கு எழிலன் செல்லும்போதே அங்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினரும் வந்து விட்டிருந்தனர் .

அணை பூட்டிய விவகாரம் புலிகள் மீது விழுந்து விடாமலிருக்க உடனடியாக அங்கு உள்ள தமிழ் விவசாயிகளை அழைத்து வந்து போராட்டம் நடத்த வைத்த எழிலன் அங்குள்ள விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை தமிழ் விவசாயிகள் பகுதி சரியாக புனரமைப்பு செய்யப்படவில்லை  அதனால் அவர்களே  அணையை பூட்டியதாக  போர் நிறுத்த   கண்காணிப்புக்குழுவினரிடம் சொல்கிறார் .

மறுபக்கம் சிங்கள விவசாயிகள் தாங்களே நேரில் சென்று அணையை திறக்கப் போவதாக புறப்பட இலங்கை இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த புலிகள் பாதையை பூட்டி விடுகிறார்கள்.

அங்கு நிலைமைகள் மோசமானதால் புலிகளின் தலைமையோடும் அரசோடும் பேசி நிலைமையை சரி செய்வதாக சொல்லிவிட்டு கண்காணிப்புக்குழுவினர் கொழும்பு திரும்பிவிடுகிறார்கள்.

அதே நேரம் சொர்ணம் எதற்காக அணையை பூட்டும்படி கட்டளையிட்டார் என்று பார்த்துவிடலாம் .
தளபதி சொர்ணம் யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் திருகோணமலையில் தான் வளர்ந்து கல்வி கற்றுவந்தவர்.

1983 ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைத்தவர் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக பலகாலம் இருந்தார்.

புலிகளின் ஆரம்ப காலத் தாக்குதல்கள் பலவற்றை திறம்பட நடத்தி சொர்ணம் என்கிற பெயரை கேட்டாலே ஸ்ரீலங்கா இராணுவம் கலங்கும் அளவுக்கு முன்னணித் தளபதியாகவும் வலம்வந்துகொண்டிருந்தவர்.

இந்தியப்படைகள் மணலாறுப் பகுதியில் ஒப்பரேசன் பவான் என்கிற நடவடிக்கை முலம் பிரபாகரனை சுற்றி வளைத்திருந்தபோது அந்த முற்றுகையை உடைத்து பிரபாகரனை காப்பாற்றிய பெருமையும் சொர்ணத்துக்கு உண்டு .

ஆனால் புதிய யுக்திகளை புகுத்தாது ஒரே முறையிலான தாக்குதல்கள் காலப் போக்கில் எதிரிக்கு பழகிப்போனதால் அவரது தாக்குதல்கள் புலிகளுக்கு பெரும் இழப்பைக் கொடுத்ததோடு சில தாக்குதல்கள் தோல்வியிலும் முடிந்தது.

புதிய யுக்திகளை கையாண்டு பெரும் வெற்றிகளை குவித்த கருணா, பால்ராஜ், பானு, தீபன், ஜெயம், போன்றவர்கள் முன்னணித் தளபதிகளாக வலம்வரத் தொடங்கியதோடு தலைமைக்கும் நெருக்கமகிக்கொண்டிருக்க 90 களின் பின்னர் சொர்ணம் சண்டைக்களத்திலிருந்து ஓரம் கட்டப்பட்டு முற்றாகவே காணாமல்போயிருந்தார்.

தன்னை நம்பி தலைவர் இப்போ எந்த சண்டையையும் தருவதில்லை என்பது சொர்ணத்துக்கு பெரும் அவமானமாகவே இருந்தது.

வன்னியில் சும்மா இருந்த சொர்ணத்தை கருணா பிரிவின் பின்னர் கருணா அணிக்கு எதிராக படை நடத்த தலைமை கிழக்கிற்கு அனுப்பி வைத்தாலும் பானுவையும் கூடவே அனுப்பி வைத்தார் தலைவர் .

நீண்ட காலத்துக்குப்   பின்னர் படை நடத்த ஒரு சந்தர்ப்பம் அதுவும் கிழக்கின் வீரத்தை உலகறிய வைத்து பலவருடங்கள் கூடவே இருந்து ஒன்றாகப் பழகி உண்டு உறங்கிய நண்பனுக்கு எதிராக படை நடத்தவேண்டும் என்பது மட்டுமல்ல,

இன்னொரு நெருங்கிய நண்பனாகவும் திருகோணமலை மாவட்ட தளபதியாக இருந்த பதுமனையும் கருணா பிரிவின் பின்னர் சந்தேகத்தில் புலிகளின் தலைமை வன்னிக்களைத்து கைது செய்திருந்தனர்.

இப்படி பல விடயங்களாலும் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப் பட்டிருந்த சொர்ணம் கருணாகுழுவுக்கு எதிரான நடவடிக்கையின் பின்னர் அனைவரும் வன்னி திரும்பியிருந்தாலும் அவர் மட்டும் திருகோணமலையிலேயே தங்கியிருந்தார்.

அது மட்டுமல்லாது நீண்ட காலமாகவே தலைமை சண்டையை தொடக்கிவிட சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததால் இனி நடக்கப் போகும் சண்டையில் எப்படியாவது ஒரு பெரு வெற்றியை பெற்று மீண்டும் தனது திறமையை தலைமைக்கு நிருபித்து விடுவதென மனதுக்குள்ளே சபதமெடுத்து விட்டு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்.

வடக்கு கிழக்கில் சிறு சிறு மோதல்கள் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கு நடந்துகொண்டிருந்தாலும் பெரிய யுத்தம் எதுவும் நடக்கவில்லை எனவே மாவிலாறை பூட்டுவதன் மூலம் எப்படியும் இராணுவம் ஒரு தாக்குதல் நடவடிகையை செய்யும் அதனை முறியடித்து வெற்றி செய்தியை வன்னிக்கு அனுப்பி விடலாம் என்பது சொர்ணத்தின் திட்டமாக இருந்தது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :  தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி  அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக் கொன்ற சிவராசா  “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News