மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி வேலூர் ,காளிக்கோயில் வீதி , 4 ஆம் குறுக்கு வேலூர் கொலனி பகுதியை சிறந்த ஜோன்சன் மேகலா வயது 42 வாய் பேசமுடியாத நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே அவரது வீட்டின் முன் விறாந்தை பகுதியில் இருந்து இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் .
குறித்த பெண்ணின் கணவர் வாய்பேச முடியாதவர் எனவும் இவர் கொழும்பில் தொழில் புரிவதாக தெரிவிக்கும் உறவினர்கள் , இவர்களுக்கு 14 , 12 , 7 ,6 ஆகிய வயதுடைய நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக குறித்த பெண் பெற்றுக்கொண்ட நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ் குழுவினரும் மற்றும் காத்தான்குடி பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்
There are no comments at the moment, do you want to add one?
Write a comment