ilakkiyainfo

ilakkiyainfo

மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு

மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு
April 17
16:12 2019

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பினை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஒரு இரட்டைக்குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளமை மட்டக்களப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த விபத்தில் மட்டக்களப்பு,கல்லடி புதிய டச்பார் இன்னாசியார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வீட்டில் இருந்துசென்ற ஜுட் ஹென்றிக்(48வயது),அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி(42வயது),அவர்களது மகன் ஜு.ஹெய்ட்(19வயது),மகள் ஷெரேபி(10வயது)ஆகியோரும் கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியை சேர்ந்த லிஸ்டர்(34வயது),அவரது மனைவி நிசாலி(27வயது),அவர்களது இரட்டைக்குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா,ஹனாலி ஆகியோரும் இவர்களின் மனைவி நிசாலியின் தாய்தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ்(56வயது),செல்pபியா(53வயது)ஆகியோர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் நிசாலியின் குடும்பத்தினை சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றபோதே இந்த விபத்து சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 12பேர் சென்றுள்ளதாகவும் 10பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு குடும்பங்கள் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு பிரதேசத்த்தினை சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.

pads  மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு padspads1  மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு pads1pads2  மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு pads2pads3  மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு pads3pads4  மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு pads4

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News