ilakkiyainfo

ilakkiyainfo

அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -4) -வி.சிவலிங்கம்

அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -4) -வி.சிவலிங்கம்
September 19
14:50 2017

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம்.

நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996 இல் தான் ஏற்பட்டது.

அங்கு அரச சார்பற்ற  தொண்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த நோர்வேஜியரான வெஸ்ற்போர்க் ( Westborg) தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு இலங்கையில் பல அரசியல் முக்கியஸ்தர்கள் ஏற்கெனவே அறிமுகமாகியிருந்ததால் அவரது தூதுவர் அலுவல்களை விரைவாக தொடர்வதற்கு அது வசதியாக இருந்தது.

இதுவரையும் அரசிற்கு வெளியில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்ட நோர்வே அரசு தற்போது அபிவிருத்தி குறித்து அரசின் திட்டமிடலுடன் இணையும் வாய்ப்புக் கிட்டியது.

ஆரம்பத்தில் நோர்வே அபிவிருத்தி காப்பரேஷன் (Norway Development Coorperation )   என்ற பெயரில் மட்டும் இயங்கியவர்கள் தற்போது தூதுவர் அந்தஸ்து கிடைத்ததும் நாட்டில் சமாதானத்தை எட்டுவதற்கான வழிவகைகளையும்  அரசிற்கான பொருளாதார  உதவிகளோடு இணைத்தனர்.

இதனால் Norad   என அழைக்கப்பட்ட உதவி நிறுவனம் சமாதான முயற்சிகளிலும் இறங்கியது.

நாட்டில்  சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தெற்கில் வாழும் மக்கள் சமாதானத்தின் அவசியத்தை உணரவேண்டும் எனக் கருதி சிங்களப் பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் கவலையை அளித்தது. ரணில் மிகவும் கடுமையான விமர்சனங்களை அதாவது வெளிநாடுகள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக விமர்ச்சித்தார்.

ஆனால் அப்போதைய வெளியுறவு அமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமரின் விளக்கம் இன்னொரு விதமாக இருந்தது.

அதாவது ஜனாதிபதி சந்திரிகாவின் விருப்பம் பேச்சுவார்த்தை மூலமாக சமாதானம் எட்டப்படவேண்டுமென்பதாக இருந்த போதிலும், அவர் தமிழ் மக்களின் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலும் அவர் இறுக்கமான பார்வையை வைத்திருப்பதாக பலரும் நம்பினர்.

ஆனால் அவர் பிரிவினை கோரும், பயங்கரவாதத்தை பின்பற்றும் விடுதலைப்புலிகளுடன் சமாதானம் பேசுவது ஜனநாயக விரோத அணுகுமுறை எனக் கருதினார்.

இக் காலகட்டத்தில் இலங்கை  அரசினது மனித உரிமை மீறல்கள்   நோர்வே பாராளுமன்றத்தில் பெரும் விவாதங்களை எழுப்பியிருந்தன.

அதாவது போர் நடக்கும்போது அங்கு அபிவிருத்தியில் ஈடுபடுவதாக நாம் கூறுவது பல்வேறு வியாக்கினங்களுக்குள் செல்வதால் அச் செயற்பாடுகளை நிறுத்தலாமா? என கருதப்பட்டது.

cbk_helgesen_eric_190402 அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -4) -வி.சிவலிங்கம் அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -4) -வி.சிவலிங்கம் cbk helgesen eric 190402இன்னொரு சாரார் சந்திரிகா அவர்கள் சமாதானம், ஜனநாயகம், போர் நிறுத்தம் என்ற கோஷங்களோடு பதவிக்கு வந்திருப்பதாலும், அதுவும் புலிகளோடு பேசலாம் எனக் கருதுவதாலும்   நிதி உதவிகளை சமாதான முயற்சிகளைக் கட்டி எழுப்பவும், சிவில் சமூகத்தைப் பலப்படுத்தவும் உதவலாம் என வாதிக்கப்பட்டது.

இதன் பின்னணியில் நோர்வே வெளிநாட்டமைச்சு ஓர் உயர்மட்ட மாநாடு ஒன்றினைக் கூட்டியிருந்தது. 1996 பெப்ரவரியில் நடத்தினர்.

அம் மாநாட்டில் நோர்வேயின் கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், பின்னர் 2013 இல் நோர்வேயின் பிரதமராக  பதவியைப்  பெற்றவருமான  எர்னா சொல்பேர்க் (Erna Solberg) , இலங்கையின் மூத்த பாராளுமன்ற உறுப்பினரான  சரத் அமுனுகம, வி. உருத்ரகுமாரன் போன்றோர் கலந்துகொண்டனர்.

இச் சந்தர்ப்பத்தில்தான்  1997 இல் தான்  சார்ந்த  தொழிற் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்த   சமாதான முயற்சிகளுக்கு வருகிறார்.

1998 இல் இலங்கைக்கு முதன்முதலாக செல்லும் சோல்கெய்ம் அங்கு அமைதியாக இருந்து தனது அனுபவங்களை நூலாக எழுத அவரது நோர்வேஜிய நண்பரின் அழைப்பில் சென்றிருந்தார்.

நோர்வே  தூதுவராலய நண்பர்  அவ்வேளையில்  அரச மற்றும்  அரசியல் பிரமுகர்களுடன் சமாதானம் தொடர்பான தீவிர பேச்சுவார்த்தைகிளில் குறிப்பாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஏ சி எஸ், ஹமீட், நீலன் திருச்செல்வம், அப்போதைய கொழும்பு மேயரும், ஐ தே கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய சபாநாயகருமான கரு ஜெயசூரியா போன்றோருடன் உரையாடல்களை நடத்தியிருந்தார்.

அவ்வேளைகளில் சோல்கெய்ம் உடனிருந்தார்.

இந்த அனுபவங்கள்   இலங்கை விவகாரத்தில் ஈடுபட அவரை ஈர்த்தது. குறிப்பாக ஜே வி பி இன் நடவடிக்கைகள், அதன் விளைவுகள் என்பன பாரிய அனுபவத்தை அவருக்கு வழங்கின.

இதனால் இலங்கை அரசியல் குறித்து ஆழமாக அறியத் தொடங்கினார். சர்வதேச அரசியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சோல்கெய்ம்   இச் சம்பவங்களே அவரை இலங்கை விவகாரத்தில் ஈடுபட வைத்தது.

இதன் பின்னணியில் நோர்வே சர்வ கட்சி பாராளுமன்றக் குழு ஒன்றினை இலங்கைக்கு அழைத்துச் சென்றார்.

இதற்குக் காரணம் நோர்வே- இலங்கை உறவுகளை பரந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகும்.

இப் பாராளுமன்ற தூதுக் குழுவினர் ஜனாதிபதி சந்திரிகாவை சந்திக்காத போதிலும் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களைச் சந்தித்தனர்.

இத் தூதுக் குழுவில் நோர்வே பாராளுமன்றத்தின் தலைவரும் சென்றிருந்தார். அவரது பதவி அந் நாட்டின் அரசருக்கு அடுத்ததாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக நோர்வே தூதுக் குழுவினர் மிகவும் ஆடம்பரமாக இலங்கை அரசால் வரவேற்கப்பட்டனர்.

போரின் மத்தியிலும் இலங்கை அரசு தமக்கு அளித்த உயர்ந்த வரவேற்பு இருநாடுகளுக்குமிடையேயான உறவுகளை மட்டுமல்ல  ஏரிக் சோல்கெய்ம்  அவர்களின்  ராஜதந்திரமும் சிறப்பாக வெளிப்பட்டது.

ltte_nor_delegations_25_01 அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -4) -வி.சிவலிங்கம் அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -4) -வி.சிவலிங்கம் ltte nor delegations 25 01விடுதலைப்  புலிகளுக்கும்  எரிக் சொல்கெய்ம்  அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு மிகவும் ருசிகரமானது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அபிப்பராயத்தை அறியும்பொருட்டு சோல்கெய்ம் பிரான்ஸ் நாட்டிற்கு 1998 இல் சென்றிருந்தார்.

அங்கு தொழிலாளர்கள் செறிந்து வாழும் பரிஸ் நகரத்தின்   வட கிழக்கு பகுதிக்கு   அதாவது லாச் சப்பல் (Porte la de Chapelle )   சென்றார். அங்கு சிறிதளவு தமிழர்களும் வாழ்கின்றனர்.

இதனால் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக ஒரு மாதத்தின் பின்னர் அதாவது செப்டெம்பர் 1998 இல் செல்லையா ராஜகுலசிங்கம் என்ற தொலைக்காட்சி   ஊடகவியலாளர், அவர் புலிகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பவர், ஒஸ்லோ தமிழ் சமூகத்தின் தலைவர் ஒருநாள் நோர்வே பாராளுமன்றத்திற்குச் சென்று சோல்கெய்மிடம்  மிகவும்  முக்கியமான செய்தி ஒன்றைத் தெரிவித்திருந்தார்.

பாலசிங்கம் நீரிழிவு நோயால் மிக மோச பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெளியில் வைத்தியம் செய்ய நோர்வே உதவுமா? என்பதாகும்.

குறிப்பாக அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமானவர். அவர் ஐரோப்பாவிற்கு வந்தால் பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புலிகள் ஏன்  எரிக் சொல்கெய்ம் அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்? என்பதற்கு அவரே விளக்கம் கொடுக்கிறார்.

நோர்வேயில் மிக பிரசித்தமான அரசியல்வாதி, அத்துடன் இலங்கை விவகாரத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்தமை, பரிஸில் சந்தித்தபோது புலிகளின் வெளிநாட்டு முக்கியஸ்தர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்த கருத்துக்கள் அச் சந்திப்பிற்கான உந்துதலை வழங்கியிருக்கலாம்.

அத்துடன் வெளிநாட்டமைச்சருக்கென தெரிவித்த செய்திகள் தன்னால் மட்டுமே அங்கு கிடைக்கச் செய்ய முடியும் என அவர்கள் கருதியிருக்கலாம் என்கிறார்.

சோல்கெய்ம் உடனடியாகவே வெளிநாட்டமைச்சருக்கு தெரிவித்ததும் அவ் விவகாரம் தொடர்பாக யாருடன் தொடர்பு கொள்வது? குறித்த விபரங்களை அமைச்சர் வழங்கியிருந்தார்.

வெளிநாட்டமைச்சரும் இவ் அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி புலிகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த அவர்கள் ஆவலாக இருந்தனர்.

பாலசிங்கத்தை இலங்கையிலிருந்து எவ்வாறு வெளியே எடுப்பது? என்பது இலங்கை அரசின் உதவி இல்லாமல் சாத்தியப்படாது.

அது எவ்வாறு சாத்தியமானது?

( அடுத்த வாரம் )

-வி.சிவலிங்கம்

(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்..1..2..3)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News