ilakkiyainfo

ilakkiyainfo

மனைவியைக் கண்டதும், மணமகன் தப்பி ஓட்டம்-மணமகள் மயங்கி விழுந்தார்..!!

மனைவியைக் கண்டதும், மணமகன் தப்பி ஓட்டம்-மணமகள் மயங்கி விழுந்தார்..!!
October 06
11:06 2017

ஆடம்பர கார் ஒன்றில் மணமகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த மணமகன், திடீரென காரின் கதவை திறந்து ஓட்டமெடுத்துள்ளார். இதனால் மணப் பெண் அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் வரவேற்பதற்காக காத்திருந்த உறவினர்கள், அயலவர்கள் எல்லோரும் மணமகன் (மாப்பிளை) காரில் இருந்து இறங்கி ஏன் ஓடுகின்றார் என தெரியாது பதற்றமடைந்தனர்.

மாப்பிளை ஓடும்போது கைக்குழந்தை ஒன்றை கையில் தாங்கியிருந்த பெண் ஒருவர் “அவனை பிடியுங்கள்“ என சத்தமிட்டபோதுதான் எல்லோருக்கும் விடயம் தெரியவந்தது.

மாத்தறை மாவட்டத்தின் புறகர் பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கோவிலில் திருமணம் முடிவடைந்து மணமகனும் மணமகளும் விருந்துபசாரத்துக்காக மணமகளின் வீடு நோக்கி ஊர்வலமாக திரும்பிக் கொண்டிருந்தனர். வீடு நெருங்கியதும் மணமக்களின் கார் மெதுவாக நகர்ந்து கொண்டு சென்றது.

மணமக்களை வரவேற்பதற்காக உறவினர்கள் மணமகளின் வீடுக்கு முன்பாகவும் விதிக்கு அருகிலும் காத்திருந்தனர். அப்போது மணமகன் திடீரென கார்க் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார்.

மணமகளின் வீட்டுக்கு அருகில் தனது மனைவி கைக்குழந்தையுடன் நிற்பதைக் கண்டார்.

இதனால் செய்வதறியாது பதற்றமடைந்த மணமகன் காரில் இருந்து இறங்கி ஓட்டமெடுத்தார். அப்போது உறவினர்கள், அயலவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டதாக எண்ணி மணமகளின் பெற்றோர் குழப்பமடைந்தனர்.

காருக்குள் இருந்த மணமகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். மணமகன் ஓடியபோது கைக்குழந்தையுடன் அங்கு நின்ற பெண் ஒருவர் சத்தமிட்டு அழுதவாறு, ”அந்தக் கள்ளனை பிடியுங்கள்“ எனக் கூறிக் கொண்டு, காரில் இருந்து இறங்கிய ஓடிய மணமகனை துரத்திச் சென்றார்.

அப்போதுதான் உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் நிலைமை தெரியவந்தது. மணமகன் ஏற்கனவே திருணம் முடித்தவர் என்றும் அதனை மறைத்து இந்த திருமணத்தை செய்துள்ளார் எனவும் அறிந்துகொண்டனர்.

மணமகனின் மனைவியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அங்கு நின்றவர்களிடம் எடுத்துச் சொன்னார். மணமகனை துரத்திப் பிடித்த அயலவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மணப்பெண் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த பேச்சுத் திருமணத்தை ஒப்பேற்றிய கலியாணத் தரகரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News