ilakkiyainfo

ilakkiyainfo

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர்: வினோத வழக்கின் தீர்ப்பு என்ன?

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர்: வினோத வழக்கின் தீர்ப்பு என்ன?
November 05
03:03 2018

தன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற அந்நபர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவி தற்கொலைக்கு முயன்றபோது அதற்கு உதவியதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனது மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காகவே கிரஹாம் இவ்வாறு செயல்பட்டதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ஜெனிஃபர் இறந்தால் அதன் மூலம் கிடைக்கும் சுமார் 1.4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பெறும் நோக்கத்தில் கிரஹாம் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

1.4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பெறுவதற்காக உங்களது மனைவியை நீங்கள் மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளீர்கள்” என்று வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய குயின்ஸ்லாந்து மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி பீட்டர் டேவிஸ் கூறினார்.

தனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிஃபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று அப்போது நீதிபதி டேவிஸ் கூறினார்.

பலவீனத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு”

தனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்தாலும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிஃபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி 56 வயதான ஜெனிஃபர் பெட்ரோல் ஜெனரேட்டருக்கு அருகில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அப்போது, அவருக்கு அருகிலிருந்த கடிதத்தில், “தயவுசெய்து என்னை உயிர்ப்பிக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெனிஃபர் இறப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டரை கிரஹாம் தன்னுடைய மனைவியை கடைக்கு அழைத்துச்சென்று வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன்னுடைய மனைவியிடம் அவர் இறந்தவுடன் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு பணத்தை கொண்டு தான் மதக்குழுவை தொடங்கவுள்ளதாக கூறியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரஹாம் தான் செய்த குற்றத்திற்கு எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், “அவரது பலவீனத்தை பயன்படுத்தி நீங்கள் ஆதாயம் கண்டுள்ளீர்கள்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது மேலும் கூறினார்.

தனது மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக ஆலோசனை வழங்கிய குற்றத்திற்காக 10 வருட சிறைத்தண்டனையையும், தற்கொலைக்கு உதவியதற்காக ஆறு வருட சிறைத்தண்டனையும் கிரஹாமுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இருவேறு சிறைத்தண்டனையும் ஒரே நேரத்தில் தொடங்குமென்றும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிணைக்கோரி கிரஹாம் விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News