மனைவி மூலம் கணவர் கர்ப்பிணியானார்!: இது ஒரு விசித்திரமான கதை?
ஈக்குவடோரிலுள்ள பாலின மாற்றம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் அடுத்த வருடம் தமது முதல் குழந்தையைப் பெறவுள்ளனர்.
இத்தம்பதியினரில் தற்போது ஆணாக உள்ளவரே கர்ப்பம் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டியன் ரொட்றிகஸ் என்பவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இவரின் காதலரான பெர்னாண்டோ மச்சாடோ பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்.
தற்போது 33 வயதான டியன் ரொட்றிகஸும் 22 வயதான பெர்னாண்டோ மச்சாடோவும் 2013 ஆம் ஆண்டு முதல் இணைந்து வாழ்கின்றனர்.
அடுத்த வருடம் இத்தம்பதிக்கு குழந்தை கிடைக்கவுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பாலின மாற்றம் செய்த ஒரு தம்பதியினர் பெற்றோராகவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
பெண்ணாகப் பிறந்து ஆணாக வாழும் பெர்னாண்டோ மச்சாடோ தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ளார்.
ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழும் தனது மனைவி டியன் ரொட்றிகஸ் மூலம் மச்சாடோ கர்ப்பமடைந்துள்ளார்.
பெர்னாண்டோ மச்சாடோ வெனிசூலா நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது காதலி டியனுடன் இணைந்து வாழ்வதற்காக ஈக்குவடோருக்கு குடிபெயர்ந்தார்.
ஆணாகப் பிறந்த டியன் ரொட்ரிகஸ் தனது உடற்தோற்றத் தைப் பெண் போன்று மாற்றிக்கொள்ள, பெண்ணாகப் பிறந்த பெர்னாண்டோ மச்சாடோ ஆண் தோற்றத்துக்கு மாறினார்.
வெளித்தோற்றத்துக்கு இவர்கள் சாதாரண ஆணும் பெண்ணும் போலவே காணப்படுகின்றனர். ஆனால், உள் அங்கங்களில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால், ஆணாக வாழும் ரொட்றிகஸே கர்ப்பப்பையைக் கொண்டுள்ளார்.
இதனால், ஆணாகப் பிறந்த தனது மனைவி மூலம் அவர் கர்ப்பிணியாகியுள்ளார்.
பெற்றோராகப் போவதையிட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தமக்கு ஆண் குழந்தையொன்று பிறக்கவுள்ளதாகவும் இத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
தான் பாலின மாற்றம் செய்து ஆணாக மாறுவதற்கு தனது குடும்பத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாக மச்சாடோ கூறுகிறார். ஆனால் டியனின் குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கினராம்.
‘நாம் இருவருமே பாலின மாற்றம் செய்துகொண்ட போதிலும், நாம் பெற்றோராகுவதை உயிரியல் விடயங்களோ, சட்டமோ தடுக்கவில்லை. அதனால் நாம் குழந்தை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தோம்’ என டியன் ரொட்றிகஸ் தெரிவித்துள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment