மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிறுப்பு சந்தியில் இன்று (6) மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

உயிரிழந்தவர் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த இன்றைய தினம் வியாழக்கிழமை(6) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய எ.அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

addddss மன்னாரில் வாகன விபத்து  ; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் மன்னாரில் வாகன விபத்து  ; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் addddssமன்னாரிலிருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிறிதொரு நபரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த வீதியூடாக மன்னார் நோக்க பயணித்த பட்டா ரக வாகனத்துடன் புதுக்குடியிறுப்பு பகுதியில்  நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பட்டா ரக வாகனம் சரியான பாதையூடாக மன்னார் நோக்கிப் பயணித்த போது,   குறித்த பாதையூடாக நேர் எதிரே குறித்த மோட்டார் சைக்கிள் பயணித்த போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அசோக்குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி விக்கி (வயது-32) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்த  குறித்த நபர் மன்னார் பொது வைத்தியசாலையின் நபர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பட்டா ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் மது போதையில் காணப்பட்டதாகத் தெரிய வருகின்றது.

இதையடுத்து மேலதிக விசாரணைகளை மன்னார் பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.