ilakkiyainfo

ilakkiyainfo

மன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா?-கபில்

மன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா?-கபில்
March 22
18:41 2019

மன்னார் புதை­குழி பற்­றிய மர்­மத்தை துலக்கும் என்ற நம்­பிக்­கையைச் சிதைத்து விட்­டி­ருக்­கி­றது அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டாவில் உள்ள பீட்டா ஆய்­வ­கத்தில் மேற்­கொள்­ளப்­படும் காபன் பரி­சோ­தனை அறிக்கை.

மன்னார் நகர நுழை­வா­யிலில் கண்­டு­ பி­டிக்­கப்­பட்ட பாரிய மனிதப் புதை­கு­ழியில் இருந்து 150 நாட்­க­ளுக்கு மேலாக நடத்­தப்­பட்ட அகழ்வுப் பணி­களின் போது, 330இற்கும் அதி­க­மான எலும்­புக்­கூ­டுகள் முழு­மை­யாகக் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டன. அவற்றில் 29 எலும்­புக்­கூ­டுகள் சிறு­வர்­க­ளு­டை­யவை.

இந்த புதை­கு­ழியில் எப்­போது, யாரால் சட­லங்கள் புதைக்­கப்­பட்­டன என்ற கேள்­விக்­கான பதில், பல மாதங்­க­ளாக கிடைக்­காமல் இருந்து வந்­தது.

இந்தப் புதை­கு­ழியில் எலும்­புக்­கூ­டுகள் தவிர்ந்த வேறு தடயப் பொருட்­களும் அவ்­வ­ள­வாகக் கிடைக்­க­வில்லை. குறிப்­பிட்ட சில தடயப் பொருட்கள் தான் கிடைத்­தன. ஆடைகள் எதுவும் கிடைத்­தி­ருக்­க­வில்லை.

2009ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்த, சுமார் 30 ஆண்டு காலப் போரில், பல்லா­யிரக் கணக்­கானோர் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், இந்தப் புதை­குழி பெரும் சந்­தே­கங்­களை ஏற்­படுத்­தி­யி­ருந்­தது.

போரின் இறு­திக்­கட்­டத்தில், படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள், கைது செய்­யப்­பட்­ட­வர்கள் ஆழ­மாக தோண்­டப்­பட்ட குழியிலும், நீருக்­குள்­ளேயும், அதன் சுற்றுப் புறங்­க­ளிலும், பெரும்­பாலும் ஆடைகள் அற்ற நிலையில், அல்­லது ஒற்றை ஆடை­யுடன், இரா­ணு­வத்­தி­னரால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த படங்­களும் கூட வெளி­யா­கி­யி­ருந்­தன.

இவ்­வா­றான நிலையில் மன்னார் புதை­குழி, 2009இல் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் புதைக்­கப்­பட்ட இட­மாக இருக்­கலாம் என்ற பல­மான நம்­பிக்கை காணப்­பட்­டது. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் மத்­தியில் இத்­த­கைய வலு­வான சந்­தே­கங்கள் இருந்­தன. இவை தவிர, அதற்கு முன்­ன­தாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டை­ய­தாக இருக்­கலாம் என்றும் சந்­தேகம் கிளப்­பப்­பட்­டது.

ஏன், இது புலி­களால் புதைக்­கப்­பட்­ட­தாக இருக்­கக்­கூ­டாதா, இந்­தியப் படை­யி­னரால் புதைக்­கப்­பட்­ட­தாக இருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்­பி­ய­வர்­களும் இருந்­தனர்.

ஆனால் , எந்­த­வொரு காலத்­திலும், புதை­குழி அமைந்­தி­ருந்த பிர­தேசம் புலி­களின் நிரந்­தர கட்­டுப்­பாட்டில் இருந்­த­தில்லை. போர்க்­கா­லத்தில் கிட்டத்­தட்ட முழு­மை­யான காலத்­திலும், புதை­குழிப் பிர­தேசம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்குள் தான் இருந்­தது.

எனவே , இதற்கு இரா­ணுவம் தான் பதில் கூற வேண்டும் என்ற கோஷம் வலு­வாக எதி­ரொ­லித்­தது. இதனை மறுப்­பதில் இலங்கை இரா­ணுவம் சிக்கல்­க­ளையும் எதிர்­நோக்­கி­யி­ருந்­தது.

அதனால் தான், காபன் பரி­சோ­தனை அறிக்கை வெளி­யா­னதும், ஊடகம் ஒன்­றுக்கு கருத்து வெளி­யிட்ட இரா­ணுவத் தள­பதி லெப். ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, அமெ­ரிக்க ஆய்­வ­கத்தின் அறிக்கை வெளி­யா­னதும், இரா­ணு­வத்தின் மீது குற்­றம்­சாட்­டி­ய­வர்கள் வாய­டைத்துப் போய் அமை­தி­யாக இருக்­கி­றார்கள் என்று கூறி­யி­ருந்தார்.

இந்தப் புதை­குழி கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பின்னர், அது எந்தக் காலத்தில் புதைக்­கப்­பட்­டது என்று கண்­ட­றிய வேண்­டிய தேவை எழுந்­தது. அதன் அடிப்­ப­டையில் தான் புல­னாய்­வு­களை ஆரம்­பிக்க முடியும்.

எலும்பு மாதி­ரி­களை மர­பணுச் சோதனை­க­ளுக்கு உட்­ப­டுத்தி, அவற்றின் காலத்தைக் கணிக்கும் ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தற்கு இந்­தி­யா­விலும் வச­திகள் இருந்­தன. ஆனால், இந்­தி­யாவின் பரி­சோ­தனை தவிர்க்­கப்­பட்­டது.

அமெ­ரிக்­காவில் மேற்­கொள்­ளப்­படும் காபன் பரி­சோ­த­னையின் மூலம், துல்­லி­ய­மாக காலத்தைக் கணிக்­கலாம். அதா­வது. எந்த தசாப்­தத்­துக்குள் அவை புதைக்­கப்­பட்­டன என்­பதை சரி­யாக கணிக்க முடியும் என்று கரு­தப்­பட்­டது.

அதன் அடிப்­ப­டையில் தான் புளோ­ரி­டாவில் உள்ள ஆய்­வ­கத்­துக்கு 6 எலும்­புக்­கூ­டு­களின் மாதி­ரிகள் அனுப்­பப்­பட்­டன. அந்தப் பரி­சோ­தனை அறிக்­கையின் படி, எலும்­புக்­கூ­டுகள், குறைந்­த­பட்சம் 300 ஆண்­டு­க­ளுக்கும் அதி­க­பட்­ச­மாக 500 ஆண்­டு­க­ளுக்கும் முற்­பட்­டவை என கணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

கி.பி. 1499ஆம் ஆண்­டுக்கும், 1720 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலத்தில், இந்த எலும்­புக்­கூ­டுகள் புதைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்று காபன் ஆய்வு அறிக்கை கூறி­யி­ருக்­கி­றது.

இந்தக் கால­கட்­ட­மா­னது, போர்த்­துக்­கேயர் மற்றும் ஒல்­லாந்தர் இலங்­கையில் கால் வைப்­ப­தற்கு முற்­பட்ட மற்றும் அவர்­களின் ஆட்­சிக்­கா­லத்தை உள்­ள­டக்­கி­யது.

இந்தக் கால­கட்­டத்தில் கட்­டாய மத­மாற்­றங்­களும், அதற்கு எதி­ரான போர்­களும் நிகழ்ந்­தன. அதை­விட, இறந்­த­வர்­களின் சட­லங்­களை புதைக்­கின்ற வழக்கம் கூட இந்தக் காலத்தில் தான் தோன்­றி­யி­ருக்கக் கூடும்.

இந்தப் புதை­குழி தோண்­டப்­பட்ட போது, அதற்குப் பொறுப்­பாக இருந்த சட்ட வைத்­திய அதி­காரி, புதை­கு­ழியின் ஒரு பகு­தியில் சட­லங்கள் ஒழுங்­கான முறையில் – வரி­சை­யாக, புதைக்­கப்­பட்­டி­ருந்­தன என்றும், இன்­னொரு பகு­தியில், சட­லங்கள் ஒன்றின் மீது ஒன்­றாக, ஒழுங்­கற்ற முறையில் புதைக்­கப்­பட்­டி­ருந்­தன என்றும் கூறி­யி­ருந்தார்.

இதன்­மூலம், அந்தப் பகு­தியின் ஒரு இடத்தில் இடு­காடு இருந்­தி­ருக்­கலாம் என்றும், இன்­னொரு பகு­தியில் கொல்­லப்­பட்­ட­வர்­களின் சட­லங்கள் ஒன்­றாகப் போட்டுப் புதைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்றும் ஊகிக்­கப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில், காபன் ஆய்வு அறிக்கை, இந்தப் புதை­கு­ழிக்கும், கடந்த 2009ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்த போரின் போது, இர­க­சி­ய­மாகப் புதைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறும் நிலையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

ஆனால், இதனை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தமிழர் தரப்பு – குறிப்­பாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பில் தயா­ராக இல்லை.

இந்த புதை­குழி எலும்பு மாதி­ரிகள் அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­பப்­பட்ட பின்னர், தமி­ழர்­க­ளுக்கும் அதிர்ச்சி ஏற்­ப­டலாம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் கூறி­யி­ருந்தார். இந்தப் புதை­கு­ழியின் காலம் தொடர்­பாக அவ­ருக்குக் கிடைத்த தக­வல்­களின் கார­ண­மா­கவே, அவர் அவ்­வாறு கூறி­யி­ருக்கக் கூடும்.

ஆனால், பாதிக்­கப்­பட்ட மக்­களோ, அமெ­ரிக்க ஆய்­வ­கத்தின் அறிக்கை மீது சந்­தே­கங்­களை எழுப்­பு­கின்­றனர். எலும்­புக்­கூ­டு­க­ளுடன் மீட்­கப்­பட்ட சில தடயப் பொருட்கள், எவ்­வாறு பல நூற்­றாண்­டு­க­ளாக அழி­யாமல் இருந்­தன என்ற கேள்வி அதில் ஒன்று.

பிஸ்கட் பொதி செய்­யப்­பட்ட பொலித்தீன் எப்­படி, பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் அங்கு வந்­தது என்­பது இன்­னொரு கேள்வி.

இவ்­வா­றான பல சந்­தே­கங்கள் இருக்கும் நிலை­யி­லேயே, மன்னார் புதை­குழி எலும்­புக்­கூ­டு­களை இரண்­டா­வது பரி­சோ­த­னைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்­தி­ருக்­கி­றது.

மன்னார் புதை­கு­ழியை நேரில் பார்­வை­யிட்­டி­ருந்த, இந்­திய தட­ய­வியல் நிபுணர் ஒருவர், இந்தப் புதை­குழி அரை நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டது தான் என்று கூறி­யி­ருக்­கிறார். அவர், புளோ­ரி­டாவில் பெறப்­பட்ட காபன் அறிக்­கை­யையும் ஜெனீ­வாவில் நிரா­க­ரித்து கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

இவை­யெல்லாம், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் மத்­தியில் குழப்­பத்­தையும் கேள்­வி­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள், மிகவும் நொந்து போய், விரக்­தியின் உச்­சத்தில் இருக்­கி­றார்கள். அவர்­களின் உற­வுகள் காணாமல் ஆக்­கப்­பட்டு குறைந்­தது 10 ஆண்­டு­க­ளாகி விட்­டன இன்னும் பலர், 20, 30 ஆண்­டு­க­ளாக கூட காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் என்ற அடை­யா­ளத்­துடள் இருக்­கி­றார்கள்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களில் ஒரு பகு­தி­யினர் தமது உற­வுகள் இன்­னமும் எங்­கா­வது உயி­ருடன் மறைத்து – தடுத்து வைத்­தி­ருக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்று நம்­பு­கி­றார்கள். ஜோதி­டர்கள் அவர்­களின் நம்­பிக்­கையை பலப்­ப­டுத்தி வரு­கி­றார்கள். இவர்­களைப் பொறுத்­த­வ­ரையில், புதை­குழி மீது நம்­பிக்­கை­யில்லை. தமது பிள்­ளையை காட்ட வேண்டும், விடு­விக்க வேண்டும் என்­பதே அவர்­களின் கோரிக்கை.

இன்­னொரு பகு­தி­யி­ன­ருக்கு, காணாமல் ஆக்­கப்­பட்ட தமது உறவு திரும்பி வரப் போவ­தில்லை என்றும், அவர்கள் உயி­ரோடு இருக்க வாய்ப்­பில்லை என்றும், நன்­றா­கவே தெரியும். அவர்­களைப் பொறுத்­த­வரை, தமது உற­வுக்கு என்ன நடந்­தது என்று தெரிய வேண்டும். என்­ன­வானார் என்று அறிய வேண்டும்.

அவர்கள் எங்­கா­வது ஒரு புதை­கு­ழியில் புதைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்று நம்­பு­கி­றார்கள். அவர்கள் தான், மன்னார் புதை­கு­ழியில் தமது உறவு இருக்­க­லாமோ என்ற ஆதங்கம் கொண்­டி­ருந்­தனர்.

அவர்­க­ளுக்கு, புளோ­ரிடா ஆய்­வ­கத்தின் காபன் அறிக்கை திருப்­தியைத் தர­வில்லை. ஏமாற்­றத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது. தம்மை எல்­லோரும் சேர்ந்து ஏமாற்­று­கி­றார்­களோ என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களை, விசா­ர­ணை­களின் மூலம் திருப்­திப்­ப­டுத்த வேண்­டி­யது, சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ரதும் பொறுப்பு. இதனால் தான், இரண்­டா­வது பரி­சோ­தனை ஒன்று நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது நியா­ய­மா­னதும் கூட.

ஒரு நோய் தொடர்பாகவே, ஒரு மருத்துவரின் முடிவுக்கு அப்பால் இன்னொரு மருத்துவரின் கருத்தையும் பெற்றுக்கொள்ளும் போது, பல ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரண்டாவது பரிசோதனையை முன்னெடுப்பதில் தவறில்லை.

அதேவேளை, காபன் அறிக்கை வெளியானதும் இந்தப் புதைகுழி, நல்லூர் மன்னன் பரராஜசேகரனால், மதம் மாறியதற்காக கொல்லப்பட்டவர்கள் என்று பௌத்த பிக்குகள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். இது குழப்பத்தை ஏற்படுத்தும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது,

புதைகுழி எந்தக் காலகட்டத்துக்குரியது, என்பதை உறுதியாகக் கண்டறிந்து வெளிப்படுத்தாத வரையில் இதுபோன்ற பல குழப்பங்களும், வரலாற்றுப் புரட்டுகள், திரிபுகளும் நீடிக்கப் போகின்றன .

இந்த நிலையில், இதனை அரசியலாக்குவதற்கு அப்பால், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து அணுக முற்படுவது தான் முக்கியமானது. அதனை தமிழ் அரசியல் தரப்புகள் அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News