ilakkiyainfo

ilakkiyainfo

மன்னார் மனிதப் புதை­குழி அரை­நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டதே தட­ய­வியல் நிபுணர் பேரா­சி­ரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல்

மன்னார் மனிதப் புதை­குழி அரை­நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டதே  தட­ய­வியல் நிபுணர் பேரா­சி­ரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல்
March 10
17:39 2019

மன்னார் மனிதப் புதை­குழி அரை­நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டதே. இது­தொ­டர்­பான உண்­மை­களை கண்­ட­றி­வ­தற்கு சர்­வ­தேச மனி­த­உ­ரி­மைகள் ஆணையம் பரிந்­து­ரைக்கும் தட­ய­வியல் மருத்­து­வர்­களை கொண்டு வெளிப்­ப­டை­யான ஆய்வின் மூலமே உண்­மையை வெளிக் கொ­ணர முடியும் என்று இந்­தி­யாவின் தட­ய­வியல் நிபுணர் பேரா­சி­ரியர் சேவியர் செல்வ சுரேஷ் அதிர்ச்­சித் த­கவல் வெளி­யிட்­டுள்ளார்.

மன்னார் மனிதப் புதை­குழி தொடர்­பான காபன் பரி­சோ­தனை அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது. அந்தப் புதை­குழி கி.பி1400- கி.பி.1650 காலத்­திற்­கு­ரி­யது என்று பரி­சோ­தனை அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ள­து­இ­த­னை­ய­டுத்து பல்­வேறு கருத்­துக்­களும் சந்­தே­கங்­களும் பொது­வெ­ளியில் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லையில் மன்னார் மனி­தப்­பு­தை­குழி அகழ்வு நட­வ­டிக்­கை­களின் போது அதனை நேரில் பார்த்­தவர் என்ற அடிப்­ப­டையில் காபன் அறிக்­கையின் பிர­காரம் குறிப்­பி­டப்­பட்­டுள்ள போர்த்­துக்­கேய கால மனித எச்­சங்­க­ளாக இவை இருக்­கு­மாக இருந்தால் இது­வரை மண்ணில் மக்­கிப்­போ­காது இருப்­ப­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ள­னவா? இந்த விட­யத்தில் உண்­மை­களைக் கண்­ட­றி­வது என்றால் அடுத்த கட்­ட­மாக எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என்­பது தொடர்பில் இந்­தி­யாவின் தட­ய­வியல் நிபு­ணரும், பேரா­சி­ரி­ய­ரு­மான சேவியர் செல்வ சுரேஷ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு மின்­னஞ்சல் ஊடாக கருத்து வெளி­யிட்­ட­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

z_p06-Grave-5  மன்னார் மனிதப் புதை­குழி அரை­நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டதே  தட­ய­வியல் நிபுணர் பேரா­சி­ரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் z p06 Grave 5அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

மனித எச்­சங்கள் மண்ணின் தரம் தட்­ப­வெட்ப சூழ்­நி­லைக்கு ஏற்ப அது பாது­காக்­கப்­படும் காலம் வேறு­படும். நான் நேரில் பார்த்த தட­ய­வியல் மருத்­துவர் என்ற முறையில் என்னால் அந்த ஆய்வு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கால அள­விற்கு உட்­பட்­ட­தல்ல என்றும் அது அரை நூற்­றாண்­டு­க­ளுக்குள் புதைக்­கப்­பட்ட எலும்­புகள் என்றும் கூற முடியும்.

இலங்­கையில் இந்த ஆய்வை மேற்­கொள்ளும் அள­விற்கு அனு­ப­வ­முள்ள தட­ய­வியல் ஆய்­வா­ளர்கள் இல்லை என்­பது என் கருத்து. இவர்கள் உப­யோ­கித்த காபன் டேட்டிங் முறை தவிர்த்து மனித எலும்­புக்­கூட்டில் உள்ள பல்லை வைத்து சரியான பிறந்த நாளையே கண்டுபிடிக்க முடியும். சர்வதேச மனிதஉரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடயவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக்கொணர முடியும் என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News