உயர் பாதுகாப்பு வலையமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கிற்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த மயிலிட்டி துறைமுகம் முதற்கட்டப் புனரமைப்புக்களுடன் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நேற்று காலை நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் காலை 10.30 மணியளவில் மயிலிட்டித் துறைமுக திறப்புவிழாவிலும் அதன் பின்னர் மயிலிட்டி வீட்டுத்திட்டத்தினையும் மக்களிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து நண்பகல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விவசாய ஆராய்ச்சி திறப்புவிழாவிலும் கலந்துகொண்டு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து குருநகர் இறங்குதுறைக்கு அடிக்கலை நாட்டு நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.

சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் பொதுநோக்கு மண்டபம் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமை்பபு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், த.சித்தார்த்தன், ஈ.சரவணவன், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வட மாகாண சபையின அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை முதல்வர் ஆனோல்ட், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், பிரதேச செயலகர்கள், பிரதேச தவிசாளர்கள், உறுப்பினர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மயிலிட்டி வாழ். மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

DSC_0154  மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு DSC 0154DSC_0168  மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு DSC 0168DSC_0174  மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு DSC 0174DSC_0179  மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு DSC 0179DSC_0186  மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு DSC 0186DSC_0193  மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு DSC 0193DSC_0233  மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு DSC 0233DSC_0241  மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு DSC 02411