ilakkiyainfo

ilakkiyainfo

மழை கைகொடுத்தபோதிலும் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா

மழை கைகொடுத்தபோதிலும் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா
November 18
08:33 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மழை கைகொடுத்த போதிலும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது இந்திய அணி இன்றைய 3 ஆவது நாள் ஆட்டத்தின் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

மழை­யினால் இந்­திய அணி காப்­பாற்­றப்­ப­டு­கி­றது என்றே சொல்ல வேண்­டி­யுள்­ளது. காரணம் நேற்றும் போட்டி ஆரம்­ப­மாகி சிறிது நேரத்தில் 2 விக்­கெட்­டுக்­களை இழந்து இந்­திய அணி திணற மழை குறுக்­கிட்டு போட்­டியை நிறுத்­தி­விட்­டது.

முதல் நாளில் சுரங்க லக்மால் வேகத்தில் மிரட்­டி­ய­து­போல நேற்­றைய போட்­டியில் தசுன் சானக்க அசத்­தினார்.

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் கொல்­கத்­தாவில் நடை­பெற்று வரும் டெஸ்ட் போட்­டியின் நேற்­றைய 2ஆ-வது நாள் ஆட்­டத்தின் பெரும்­ப­கு­தியும் மழையால் தடை­ப்பட்­டது. 21 ஓவர்­களே வீசப்­பட்­டன.

நேற்­று­முன்­தினம் தொடங்­கிய இந்த போட்­டியில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று களத்­த­டுப்பை தேர்வு செய்தார்.

மழைக்­கா­ர­ண­மாக மதியம் 1.30 மணிக்­குத்தான் ஆட்டம் தொடங்­கி­யது, இலங்கை வேகப்­பந்து வீச்­சாளர் லக்­மாலின் அபார பந்து வீச்சால் லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோஹ்லி (0) ஆகி­யோரை வீழ்த்தி அசத்­தினார்.

இதனால் இந்­திய அணி 11.5 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 17 ஓட்­டங்­களை எடுத்­தி­ருக்­கும்­போது மீண்டும் மழை குறுக்­கிட்­டது.

இதனால் முதல் நாள் ஆட்டம் அத்­துடன் முடித்­து­வைக்­கப்­பட்­டது, புஜாரா, ரஹானே களத்தில் இருந்­தனர். சுரங்க லக்மால் 6 ஓவர்­களில் ஓட்­ட­மேதும் விட்­டுக்­கொ­டுக்­காமல் 3 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரண்­டா­வது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்­டிய போட்டி 15 நிமிடம் முன்­ன­தாக 9.15-க்கே தொடங்­கி­யது.

நேற்றைய போட்­டியில் 98 ஓவர்கள் வீச முடிவு செய்­யப்­பட்­டது.

புஜாரா, ரஹானே ஆட்­டத்தை தொடர்ந்­தனர். ரஹானே 4 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து வந்த அஷ்வின் 4 ஓட்­டங்­க­ளுடன் பெவி­லியன் திரும்­பினார்.

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்­தாலும் மறு­மு­னையில் புஜாரா நம்­பிக்­கை­யுடன் விளை­யா­டினார்.

6ஆ-வது விக்­கெட்­டுக்கு புஜா­ரா­வுடன் சஹா ஜோடி சேர்ந்தார். இந்­தியா 32.5 ஓவர்­களில் 74 ஓட்­டங்கள் எடுத்­தி­ருக்­கும்­போது மழை குறுக்­கிட்­டது. இதனால் ஆட்டம் நிறுத்­தப்­பட்டு உணவு இடை­வேளை விடப்­பட்­டது. அதன்­பின்பும் மழை தொடர்ந்து பெய்­தது.

பின்னர் மழை விட்­டாலும் பவுண்­டரி லைன் அருகே ஈரப்­பதம் அதி­க­மாக இருந்­ததால் 2ஆ-வது நாள் ஆட்டம் அத்­துடன் முடித்துக் கொள்­ளப்­பட்­டது. 2ஆ-வது நாளில்­இந்­தியா 21 ஓவர்கள் மட்­டுமே விளை­யா­டி­யது. புஜாரா (47), சஹா (6) களத்தில் உள்­ளனர்.

லக்மால் 11 ஓவர்கள் வீசி 5 ஓட்­டங்கள் விட்­டுக்­கொ­டுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாக வீசியுள்ளார். நேற்றைய இரண்டு விக்கெட்டுக்களையும் இலங்கையின் மற் றொரு வேகப்பந்து வீச்சாளரான தசுன் சானக்க வீழ்த்தினார்.

இந்நிலையில் 75 ஓட்டங்களுடன் இன்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி மிகுதி 5 விக்கெட்டுகளையும் 100 ஓட்டங்களைப் பெறுவதற்குள் இழந்து 172 ஓட்டங்களை பெறுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக புஜாரா மாத்திரம் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News