ilakkiyainfo

ilakkiyainfo

மாகந்துர மதூஷா விவகாரம்: அதிரவைத்த தொடர் கைதுகள் – டுபாயில் நடந்தது என்ன?

மாகந்துர மதூஷா விவகாரம்: அதிரவைத்த தொடர் கைதுகள் – டுபாயில் நடந்தது என்ன?
February 20
03:38 2019

 

பாதாளக் குழு தலைவனான மாகந்துர மதூஷின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை பொலிஸார் நிலைகுலைந்து போயுள்ளனர். நிகழ்கால பாதாளத் தலைமையை மதூஷே வெற்றி கொண்டிருந்தான் .

இவனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை கூட விடுக்க முடியாமல் சர்வதேச பொலிஸார் திண்டாடுகின்றனர். எவ்வளவு பெரிய குற்றவாளியாக இவன் இனங்காணப்பட்டிருந்தாலும் நம் நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியென இவனுக்கெதிராக எந்வொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

தனது தலைமைத்துவத்தின் கீழ் அவன் ஏனையவர்களையே குற்றங்களில் ஈடுபட வைப்பான். எக்காரணம் கொண்டும் அவ்வாறான செயல்களுக்கு அவன் இரங்கமாட்டான்.

kolai  மாகந்துர மதூஷா விவகாரம்: அதிரவைத்த தொடர் கைதுகள் – டுபாயில் நடந்தது என்ன? kolai e1550633159179தனது சகாக்களைக் கொண்டே எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்வான் . அதனால் எந்தவொரு முறைப்பாடும் இவன் மீது சுமத்தப்படுவதில்லை என்றே கூறவேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக டெனி ஹித்கெட்டியவின் கொலையை குறிப்பிடலாம் . டெனியை கொலை செய்வதே தனது எதிர்பார்ப்பு என்றபோதிலும் அவனை கொலை செய்வதற்காக தனது சகாக்களையே மதூஷ் பயன்படுத்திக்கொண்டான்.

டெனி ஹித்கெட்டியவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கி தாரியான கெமாண்டர் நிஷ்ஷங்க , மினுவாங்கொடை பிரதேசத்திலுள்ள இறப்பர் தோட்டம் ஒன்றுக்குள் வைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் இறந்துபோனார்.

கொஸ்மல்லியின் கொலையும் இவ்வாறான பின்புலத்தைக் கொண்ட ஒரு செயலாகும். இதுவும் மாகந்துர மதூஷின் திட்டப்படியே நடைபெற்ற கொலையொன்றாகும்.

கொஸ் மல்லியை வெடி வைத்து கொன்று விட்டு உடம்பிலிருந்து தலையை வேறாக்கியது ஒரு கும்பல். அவ்வாறு வேறாக்கப்பட்ட தலையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொழும்புக்குச் சென்றது இன்னொரு கும்பலாகும்.

இறுதியாக அந்த தலையை புதுக்கடை நீதிமன்றம் அருகில் போட்டுச் சென்றது இன்னொரு கும்பலாகும். இந்தக் குழுக்களிலுள்ள ஒவ்வொருவரும் இன்னொருவைரைப் பற்றி அறியாதமையே இங்கு விஷேட அம்சமாகும்.

எவ்வாறாயினும் மதூஷûக்கு எதிராக தேசிய பொலிஸார் ஊடாக நீல எச்சரிக்கை ஒன்றை விடுத்துக்கொள்ள பொலிஸாரால் இயலுமாகிப் போனது.

இருப்பினும் சிவப்பு எச்சரிக்கையைப் போன்று நீல எச்சரிக்கை பிரபலமில்லை என்ற போதும் மதூஷை கைது செய்வது கனவுப்போலவே இலங்கை பொலிஸாருக்கு காணப்பட்டது.

மதூஷ் டுபாயில் மறைந்து வாழ்வதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதி செய்துகொண்டாலும் எந்த நகரத்தில் வாழ்ந்து வருகிறான் என்பதை உறுதியாக அவர்களால் தீர்மானிக்கமுடியவில்லை.

தனது எதிராளிகளைத் தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அச்சுறுத்தி வந்த காரணத்தால் எதிர்த்தரப்பு பாதாளத் தலைமைகள் மதூஷ் மீது அதிக கோபத்துடனேயே காணப்பட்டனர்.

இந்தக் கோபத்தின் ஒரு அங்கமாக பொலிஸ் விசேட அதிரடிப்படை ஒன்றியத்துக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கும் அதிக பணச்செலவில் கொண்டாடப்படவிருக்கும் பிறந்தநாள் விழாவொன்று பற்றி புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

மதூஷ் தனது கறுப்பு பணம் மூலம் கோடிக்கணக்கான ரூபா செலவில் தனது பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாட வேண்டி டுபாயிலுள்ள 6 நட்சத்திர ஹோட்டலொன்றை பதிவு செய்திருக்கிறான் எனும் தகவலே கிடைக்கப்பெற்றிருந்தது.

இந்த விழாவுக்கு மதூஷ் தயாரானது தனது இரண்டாவது மனைவியின் ஆண் பிள்ளையின் 4 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காகும்.

இவள் ஹெரோயின் வியாபாரியான மஹரகம கலுதுஷாரவுடனேயே முதல் திருமணம் செய்துக்கொண்டிருந்தாள் . அந்த திருமணத்திலும் அவளுக்கு குழந்தைகள் இருக்கின்றன. இவன் மதூஷின் நண்பனாவான். 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது இறந்துபோனான்.

பின்னர் கலுதுஷாரவின் மனைவியான திலினியை பார்த்துக்கொண்டது மதூஷே. மதூஷின் முதல் மனைவி இன்னும் மாகந்துர பிரதேசத்தில் உள்ள அவளின் வீட்டிலேயே இருக்கின்றாள்.

அவள் மாத்தறை வைத்தியசாலையில் சேவைபுரிந்த ஒருவராவாள். மதூஷ் இங்கிருந்து தப்பிச்சென்ற 2015 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிவரை திலினி மற்றும் மதூஷவுக்கிடையில் நீண்ட நாள் தொடர்பு இருந்து வந்துள்ளது.

2017 மே மாதம் பிலியந்தலைப் பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ உள்ளிட்ட குழுவினரை இலக்கு வைத்து மதூஷின் கட்டளைக்கிணங்க துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் திலினியின் கூற்றுப்படியே நடந்தேறியது.

இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு 6 மாத காலத்திற்கு முன்னரே மதூஷ் திலினியை டுபாய்க்கு வரவழைத்துக்கொண்டான் .

அங்கு வைத்தே மதூஷிடம் தனது கணவர் கொலை செய்யப்பட காரணமான நியோமால் ரங்கஜீவவை கொலை செய்ய வேண்டுமென கட்டளையிட்டாள்.

இந்தத் தடவையும் திலினியின் வேண்டுகோளுக்கிணங்கவே 6 நட்சத்திர ஹோட்டலில் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட நடவடிக்கை மேற்கொண்டான்.

இந்த விழாவில் பாடல் பாடும் பொருட்டு பிரசித்த பாடகரான அமல் பெரேரா மற்றும் அவரது மகனான இளவயதுப் பாடகர் நதீமால் பெரேரா என்போர் மதூஷவால் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த விழாவுக்கு இவர்களைப் போன்றே பிரசித்தமான நடிகரான ரயன் வென்ரொயனும் மதூஷவால் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நடிகர் பிரசித்திப்பெற்றது ”தெவனி இனிம” நாடகத்தில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பாத்திரத்துக்கு லயனல் சந்துன் என்ற பெயரில் உயிரூட்டியதன் மூலமோயாகும்.

பிறந்தாள் விழாவுக்கு தினமொன்றை ஒதுக்கிக்கொண்ட மதூஷ் இரு பாடகர்களுக்கும் நடிகருக்கும் விமான பயணச்சீட்டை அனுப்பிவைத்தான்.

நம்நாட்டு சுதந்திரத் தினமான கடந்த 4 ஆம் திகதி இரவு டுபாயிலுள்ள ஆறு நட்சத்திர ஹோட்டலுக்கு மதூஷவால் அழைக்கப்பட்ட 25 பேர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு ஒன்று கூடியிருந்தனர்.

மதூஷவின் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றவர்களில் இரு பொலிஸார் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் இரு பிரதேச அரசியல்வாதிகளும் அடங்கியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களில் கூறப்படுகிறது.

மேலும் இவர்களுள் ஒருவர் இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்பதும் விசேட அம்சமாகும். கூடியிருந்தோர் பிறந்தநாள் பாடல் பாட மதூஷவின் மகன் பிறந்தநாள் கேக்கை வெட்டினான்.

அவனுக்காகவே மிகவும் உயர்ந்த விலையில் இந்த கேக் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அமல் மற்றும் நதீமாலின் இன்னிசை நிகழ்ச்சியையும் வருகைத் தந்தோர் கண்டுகளித்தனர்.

தனது நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கவென 20 கிராம் கொக்கெய்ன் , ஹெரோயின் மற்றும் ஒருதொகை கஞ்சாவை மதூஷ் கொண்டுவந்திருந்தான். இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களில் கம்புறுபிட்டிய பிரதேச மீன் வியாபாரியொருவர் , அதே பிரதேசத்தைச் சேர்ந்த வாகன விநியோக வியாபாரியொருவர் மற்றும் அப்பிரதேச சபை தொழிலாளர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் சிறையதிகாரிகள் மூவரில் ஒருவர் கம்புறுபிட்டியைச் சேர்ந்தவராவார். அவர் விளக்கமறியலில் புலனாய்வுப் பிரிவில் சேவை செய்துகொண்டிருந்த போது சேவையிலிருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

அவர் இறுதியாக களுத்துறை விளக்கமறியலிலேயே சேவை செய்துள்ளார். அவர் இதுவரை வாகன விபத்தொன்றின் காரணமாக காயமடைந்து ஊன்றுகோல் உதவியுடனேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுபான போத்தல்கள் , போதைப்பொருள் பாவனை என்பவற்றோடு பிறந்தநாள் கொண்டாட்டம் வெற்றிகரமாகவே கொண்டாடப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் உளவாளி ஒருவர் அந்த ஹோட்டலுக்குள் உளவு பார்க்கும் பொருட்டு ஈடுபட்டிருந்தார். பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நள்ளிரவு 12 மணிக்கு பின்னரே உச்சம் தொட்டது.

கிட்டார் இசையோடு சேர்ந்து எல்லோரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பாதாளத் தலைவன் சமயங்கை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான அங்கொட லொக்கா சிகரெட் புகைப்பதற்காக ஹோட்டலுக்குள் இருந்து வெளியே வந்தான்.

சிகரெட்டை புகைத்துக்கொண்டு அங்கொட லொக்கா சற்று தூரம் முன்னுக்குச் செல்லும் போது டுபாய் இரகசியப் பொலிஸ் அதிகாரிகள் ஆறு நட்சத்திர ஹோட்டலில் விழா இடம்பெற்ற பகுதியை சுற்றிவளைத்தனர்.

அங்கொட லொக்கா உள்ளிட்ட விழாவில் பங்குபற்றியிருந்த மதூஷ் அடங்கிய அனைவரையும் பொலிஸ் கைது செய்தனர் . அதுமட்டுமன்றி அவர்களிடம் காணப்பட்ட போதைப்பொருளையும் கைப்பற்றியர்.

மதூஷ் உள்ளிட்ட அவனின் நெருங்கியவர்களை முழங்காலிடச் செய்த டுபாய் இரகசியப் பொலிஸார் எல்லோரையும் தீவிரமாக சோதனை செய்தனர்.

அதில் மதூஷிடம் காணப்பட்ட விமான கடவுச்சீட்டு போலியானது என அம்பலமாகியது. மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் டுபாய் அல் ரபா பொலிஸாரிடம் ஒப்படைக்க அந்நாட்டு இரகசியப் பொலிஸார் தீர்மானித்தனர்.

இவர்கள் கொக்கெய்ன் , ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாவித்திருந்தனரா என்பதை பரிசோதிக்கவென அவர்களின் இரத்த மாதிரிகளைப் பெறஅந்நாட்டு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருப்பது மற்றும் அவற்றை நுகர்வது அந்நாட்டு சட்டத்திற்கேற்ப கடும் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்களாகும்.

எப்படியிருப்பினும் இரத்த மாதிரிகள் பரிசேதனை அறிக்கை கிடைப்பதற்கு தாமதங்கள் ஏற்பட்டன. மதூஷை சுற்றிவளைக்கவென மேற்கொள்ளப்பட்ட திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நிறைவேற்று அதிகாரியான பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் ஆவார்.

அவர் தனது பதவியிலிருந்து விலகிய கடந்த 5 ஆம் திகதியே மதூஷை சுற்றிவளைக்க முடியுமாகிப்போனமை அவரின் கடமை நாட்களில் அவர் செய்த விசேட வேலைத்திட்டமாகக் கருதப்படுகிறது.

பாதாளம் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களை முற்றாக நம்நாட்டில் இல்லாதொழிக்கும் செயற்றிட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு மேலும் ஒருவருட காலத்துக்கு லதீபின் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் ஒப்புதலோடு நீடித்தார். அதன்படி சேவை நீடிப்பு கடிதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றதிகாரிக்கு அனுப்பிவைத்தார்.

இருப்பினும் இந்த விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நம்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் அடுத்த இலக்காகக் காணப்பட்டது, பாதாளக் குழுத் தலைவன் மதூஷ் உட்பட அவனது குழவினரை இங்கு கொண்டு வருவதாகும்.

மதூஷ் இல்லாமல் கைது செய்யப்பட்ட 25 பேரில் பிரபல பாதாளக் குழு உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் கஞ்சிபான இம்ரான் , கொலெஸ்வத்த தினுக , சீதுவ திமுது, தலல்ல சஞ்ஜே, இப்லிபுள்ளபலம் அஜ்மி , அமில , என்டா , மாளிகாவத்த பைசர் , ஜலிபர் சியாம் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்களுள் பிரபல பாதாளக் குழுத் தலைவன் கஞ்சிபான இம்ரானாவான்.

கடந்த காலங்களில் கொழும்பு பிரதேசத்தை பீதிக்குள்ளாக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இம்ரானே மூலமே மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்களில் 15 சம்பவங்களுக்கு பொறுப்பாளி இம்ரான் மொஹமட் இம்ரான் நஜியா மொஹமட் என அழைக்கப்பட்டவனுக்கு ‘கஞ்சிபான்’ என்ற பெயர் வர இரு காரணங்கள் உண்டு.

ஒன்று பாதாளக் குழுச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட முன்னரே அவன் மாளிகாவத்த பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் கஞ்சி விற்பனை செய்து கொண்டிருந்தான்.

அதனால் ‘கஞ்சிபான’ என்ற பெயர் ஏற்பட்டது. மற்றையது பள்ளிவாசலில் நோன்பு காலத்தில் கஞ்சி கொடுக்கும் போது சிறிய வயதென்பதால் வரிசையில் நிற்காது முன்னுக்குச் சென்று கஞ்சியை வாங்கி விடுவானாம். இதன் காரணமாகவும் ”கஞ்சிபான” என்ற பெயர் ஏற்பட்டது எனக் கூறுகிறார்கள்.

பிரதான ஹெரோயின் வியாபாரியான மொஹமட் சித்திக்கின் வாகனச் சாரதியாக செற்பட்ட கஞ்சிபான இம்ரான் 2015 ஆம் ஆண்டில் மதூஷ் தலைமறைவாக வாழ்ந்துவரும் டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்தான். மதூஷûம் இம்ரானும் மாளிகாவத்தையில் நடைபெற்றிருந்த திருமண வீடொன்றிலேயே அறிமுகமாகியிருந்தார்கள். அந்தச் சந்திப்பும் 2015 ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றிருந்தது.

அந்த திருமண விழாவில் வைத்து இவர்களிருவரையும் சுற்றிவளைக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

டுபாய்க்கு தப்பிச்சென்ற கஞ்சிபானவுக்கு அவனது மனைவி இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெறுகிறது. அத்தகவல் கிடைக்கப்பபெற்றதும் தனது ஆட்களை அனுப்பி தனது மனைவியை வெடிவைத்து கொன்றுவிட்டான்.

மொஹமட் முஸம்மில் சித்தி ரினேவிஷா என்ற அப்பெண்ணை, தற்போது டுபாயில் கைது செய்யப்பட்டு புல்லபலம் அஜ்மி மற்றும் மாளிகாவத்த பைசர் ஆகியோரே சுட்டுக்கொண்டனர்.

இச்சம்பவம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதே ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி நிவிஷû என்பவரை இம்ரானின் வேண்டுகோளுக்கமைய புல்லபலம் அஜ்மியே கொலை செய்தான்.

மதூஷûக்கு எதிராக செயற்பட்ட பாதாளத் தலைவனான சமயங் கும்பலில் இருந்த அசித என்பவரை இலக்கு வைத்து பொரளை , கொட்டார பிரதேசத்தில் வைத்து கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் ஜலிபர் சியாம் மற்றும் மாளிகாவத்த பைசர் ஆகியோராலேயே மேற்கொள்ளப்பட்டது. மேலும் மதூஷ் மூலம் டுபாயிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஹெரோயின் வியாபாரத்தை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக இருந்தவர்களை கொலை செய்யும் பொறுப்பை கஞ்சிபான இம்ரான் பொறுப்பேற்றுக் கொண்டான்.

டுபாயில் கைது செய்யப்பட்ட குழுவினரின் இங்கிருக்கும் வீடுகளை பரிசோதனை செய்யும் செயற்றிட்டத்தை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

அதற்கிணங்க கடந்த 7 ஆம் திகதி மாலை வேளையில் பாடகர் அமல் பெரேரா வசித்துவந்த சில வீடுகள் மற்றும் நடிகர் ரயன் வென்ரொயனின் வீடும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மூலம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதில் அமல் பெரேராவின் வீட்டிலிருந்து இரு கொக்கெய்ன் பொதிகளும் ரயனின் வீட்டிலிருந்து டிஜிட்டல் தராசுகள் இரண்டும் மற்றும் சந்தேகத்துக்கிடமாகக் காணப்பட்ட ஆழம் கொண்ட பயணப்பையொன்றும் கைப்பற்றப்பட்டன.

மேலும் இவர்களிருவரினதும் சகோதரர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு அவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவ்வாறே மதூஷின் முதல் மனைவி வசிக்கும் கும்புறுபிட்டிய வீடும் கடந்த 8 ஆம் திகதி விசேட பொலிஸ் குழுவொன்றால் பரிசோதனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் டுபாயில் கைதுசெய்யப்பட்ட ”ஜங்கா” என்பவனின் மாத்தறை கந்தரவில் அமைந்துள்ள வீடும் விசேட பொலிஸ் குழவொன்றினால் பரிசோதனை செய்யப்பட்டதில் அங்கிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 இராணுவச் சீருடைகளும் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 23 ம் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒருசேர கைதுசெய்யப்பட்ட மேற்படி பாதாளக் குழுவினரால் மேற்கொண்டு என்ன நடக்கப்பபோகிறது என்று தெரியாமல் பொதுமக்கள் அதிக பயத்துடனும் சந்தேகத்துடனும் காலத்தை கழித்து வருகின்றனர் என்பதே நிதர்சனமாகும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News