ilakkiyainfo

ilakkiyainfo

மாஜி காதலர்களுக்கு அழைப்பில்லை!

மாஜி காதலர்களுக்கு அழைப்பில்லை!
October 10
07:14 2017

 

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், பாலிவுட் பிரபலங்களுக்கு நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

இதில் மாஜி காதலன்கள் சல்மான்கான், விவேக் ஓபராய், அக்‌ஷய் கன்னாவுக்கு மட்டும் அழைப்பு தரவில்லையாம். இதில் குடும்பமே கலந்து கொண்டாலும் மாமியார் ஜெயா பச்சன் மட்டும் வரவில்லையாம்.

பாலிவுட்டில் சினிமா வாரிசுகளின் ஆதிக்கம்தான் இருக்கிறது என தடாலடியாக குற்றம் சாட்டினார் கங்கணா ரனாவத். கொதித்துப் போன கரீனா கபூர், அப்படி இருந்தால் கங்கணா எப்படி டாப்புக்கு வந்தார்? வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி பார்ட்டியே கதி என கிடக்கிறாராம். அப்பா போனி கபூர் பலமுறை அட்வைஸ் செய்தும் கேட்கவில்லையாம். அம்மாவின் செல்லத்தால் ஜான்வி உல்லாச உலகில் திளைத்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஜுட்வா படத்தில் பிகினியில் டாப்ஸி இருக்கும் ஸ்டில்களை படத் தரப்பு பிரபலப்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்தப் படத்தின் மற்றொரு ஹீரோயின் ஜாக்குலைன் கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம்.

ஹாலிவுட் படத்தில் நடித்தபோது கலைஞர்களுடன் ஏற்பட்ட நட்பை தொடர்கிறாராம் அனில் கபூர். எப்படியாவது மகள் சோனம் கபூர் அல்லது மகன் ஹர்ஷ்வர்தனை ஹாலிவுட்டுக்கு பேக்அப் செய்ய முயற்சித்து வருகிறாராம்.

கணவர் சித்தார்த் ராய் கபூருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் திடீரென இமாச்சலுக்கு சென்று ஒரு மாதம் தனிமையில் இருந்துவிட்டு வந்தாராம் வித்யாபாலன். நெருங்கிய நண்பர் சஞ்சய் தத் தான் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தாராம்.

சன்னி லியோன் தனது கணவர் டேனியலுடன் சேர்ந்து சன்சிட்டி மீடியா என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்.

டெலிவிஷன் ஷோ ஒன்றை தயாரித்தும் வருகிறார். இதனால் ஏற்கெனவே கவர்ச்சிப் பாடல்களுக்கு ஆடிக்கொண்டிருந்த நடிகைகள் இந்தப் புதுரூட்டை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார்களாம்.

ஜூலி-2 பட டிரெய்லர் பார்த்த ஹேட் ஸ்டோரி-3 பட யூனிட், லட்சுமிராயை போட்டோ ஷூட்டுக்கு அழைத்திருக்கிறார்கள்.

குஷியாகி ஓடியிருக்கிறார். போனபிறகுதான் ஹீரோயின் வேடம் கிடையாது, சைடு ரோலுக்கு என தெரிந்ததாம். வந்தவரை லாபம் என ஷூட் நடத்திவிட்டு வந்தாராம்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

Jey

What is her name and address..?? [...]

Jey

Krishna [...]

இலங்கை பத்திரிகைகள்

English News