ilakkiyainfo

ilakkiyainfo

மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள்

மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள்
May 16
05:27 2019

 

 

நான் பொதுவா யாரையும் பெருசா சைட் அடிக்க மாட்டேன். ஆனா திடீர்னு ஒரு நாள், எனக்கே என்­னனு புரி­யாம, ரோட்­டுல போற அத்­தன பசங்­க­ளயும் கண்­ணெ­டுக்­காம பாத்­துட்டே போவேன். பாக்­குற எல்­லாரும் அழகா வேற தெரிஞ்சு தொலை­வாங்க. நல்லா சூப்­பரா ஜாலியா இருக்கும் அந்த ஃபீலிங். ஆனா அது கொஞ்ச நாள் தான் அப்டி இருக்கும். அப்றம் மறு­ப­டியும் பழைய நிலை­மைக்கே போயி, பசங்­கள பாக்­க­ணும்னு கூடத் தோணவே தோணாது.

மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள்

இது ஒரு பக்­கம்னா, சுபா-ன்­னாலே ஒரு சோம்­பே­றின்னு பேர் வாங்கி வைச்­சி­ருக்­குற நான்னு, சில சமயம் எங்க வீட்­டுல இருக்­குற எல்­லா­ரையும் ஆச்­சர்­யப்­ப­டுத்­துற மாதிரி, பாத்­திரம் கழு­வு­றது, துணி தொவைக்­கு­றது, மொட்டை மாடிய பெருக்­கு­ற­துனு வீட்­டுல இருக்­குற அத்­தன வேலை­யயும் இழுத்துப் போட்டு செய்வேன்.

“சும்மா எப்­பப்­பாரு படுக்­கை­லயே கெடைக்­காம, எதாவது ஒரு வேலை­யாச்சும் உற்­ப­டியா பண்ணு”ன்னு என்னைத் திட்­டிட்டே இருக்­குற எங்க அம்­மாவே, “வேலை செஞ்­சது போதும்.

மொதல்ல வந்து சாப்­டுட்டுப் போ”ன்னு சொல்ற அள­வுக்கு, பசி­யெல்லாம் மறந்து வெறித்­த­னமா வேலை பாப்பேன். அதுவும் சில காலம் தான். அப்பறம் பழை­ய­ப­டியே வேதாளம் முருங்­க­மரம் ஏறிரும்.

இப்­படியே வாழ்க்கை மாறி மாறிப் போய்ட்­டி­ருக்கும் போது தான், ஒரு நாள் எதர்ச்­சியா ஒரு TED Talk பாக்­கும்­போது, இந்த four phases of menstrual cycle பத்தி தெரிஞ்­சிக்­கிட்டேன்.

அதக் கேக்­கும்­போதே உண்மை மாதிரி தான் தோணிச்சு. இருந்­தாலும் எந்­த­ள­வுக்கு உண்­மைனு தெரி­ற­துக்­காக, கடந்த எட்டு மாசமா என்னை நானே நுணுக்­கமா கவ­னிச்­சிட்டு வந்­த­துல, மத்­த­வங்­க­கிட்ட இதப் பத்தி பகிர்ந்­துக்­குற அள­வுக்கு அது உண்மை தான்னு நம்­புறேன். எழு­தவும் செய்­யுறேன்.

1 Follicular Phase

மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள்

Follicleல இருந்து கரு­முட்டை வளரக் கூடிய phase. பீரியட்ஸ் முடிஞ்ச நாள்­ல­யி­ருந்து ஒரு ஏழு எட்டு நாளைக்கு இந்த phase இருக்கும். Day 4 to Day 12. இந்தச் சம­யத்­துல, பொண்­ணுங்­க­ளுக்கு உல­கத்­துல இருக்­குற அத்­தன எனர்­ஜியும் கெடச்ச மாதிரி இருக்­குமாம்.

கவுண்­ட­மணி ஸ்டைல்ல, ‘அய்யோ இப்போ நான் எதை­யா­வது செஞ்­சா­க­ணு­மேடா’-ன்னு, நம்ம ஒரு energy bomb மாதிரி இருக்கக் கூடிய phase தான் இது.

புதுசா எதாது கத்­துக்­கணும், புதுசா எதாது ப்ராஜக்ட் ஆரம்­பிக்­க­ணும்னா அதுக்கு இது தான் கரெக்ட்­டான டைம். மைண்டு எல்­லாத்­தையும் பெருசா, big pictureல யோசிக்கும். வீட்­டு­லயோ, வேலை­லயோ இல்ல பிசி­னஸ்­லயோ எல்­லாத்­தயும் எல்லாக் கோணத்­து­லயும் யோசிச்சு பாத்து பிளான் பண்­ற­துக்கு ஏத்த phase. Energetic and Optimistic Phase.

2.Ovulation Phase

Capture  மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள் Capture1

இது பத்தி நெறைய பேருக்குத் தெரிஞ்­சி­ருக்கும். கரு­முட்டை விந்­த­ணுக்­காகக் காத்­திட்­டி­ருக்­குற மேட்டிங் phase. பொதுவா Day 12 to Day 16 வரைக்கும் இந்த phase இருக்கும்.

இந்த நேரத்­துல, பொண்­ணுங்க இயற்­கை­யாவே ரொம்ப அழகா, attractiveவா ஆகி­ரு­வாங்­களாம். அது­மட்­டு­மில்­லாம, பேச்சு திறன் பயங்­க­ரமா இருக்­குமாம்.

எதிர்­பா­லி­னத்த ஈர்க்­கு­ற­துக்­காக இருக்­கலாம். யார­யாச்சும் எதுக்­காச்சும் சம்­மதம் சொல்ல வைக்­க­ணும்னா இந்தச் சம­யத்­துல போய் பேசுனா கண்­டிப்பா workout ஆகிரும். காதல் பத்தி வீட்­டுல பேசலாம், மேன­ஜர்­கிட்ட ப்ரோமோஷன் பத்தி பேசலாம், public speaking. இப்­படி மத்­த­வங்­கள தலை ஆட்ட வைக்கக் கூடிய காந்­தக phase இது. Sighting and Enjoyment Phaseனு கூடச் சொல்லலாம்.

3.Luteal Phase

 

Stressed-woman  மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள் Stressed woman1Day 16 to Day 28 அதா­வது பீரி­யட்ஸ்க்கு முன்­னாடி வரைக்கும் இந்த phase தான். இது தான் இருக்­கு­ற­து­லயே ரொம்ப நீள­மான phase. எனர்ஜி கம்­மியா இருக்­குற phase வேற. பெரிய பெரிய வேலை­கள்லாம் செய்யத் தோணாது.

ஆனா இதோட சிறப்­பம்சம் என்­னனா, எது செஞ்­சாலும் அது­ல­யி­ருக்­குற நுணுக்­க­மான விஷ­யங்­கள கூர்ந்து கவ­னிக்கக் கூடிய detail oriented phase. காசு, பணம், பைனான்ஸ் விஷ­யத்­துல கெட்­டிக் ­கா­ரியா இருக்கக் கூடிய phase.

ஆஃபீஸ்ல ஒரு issue solve பண்­றப்போ, சின்ன சின்ன detailsஸ நோட் பண்ணி, சுல­பமா root cause கண்­டுப்­பு­டிக்­கலாம். ரொம்ப Detailed-ஆ ஒரு கதை எழு­தலாம். ஒரு படத்­துல, ஒரு பாட்­டுல வர்ற ரொம்பச் சின்­ன­தான விஷயங்­கள கூர்ந்து கவ­னிச்சு ரசிக்­கலாம். இல்ல திட்­டலாம். மத்­த­வங்க சாதா­ர­ணமா பேசு­ற­துல ஒரு வார்த்­தைய மட்டும் தனியா நோட் பண்ணி, அவங்­கள பத்தி குறை சொல்­லலாம். சண்டை போடலாம்.

இப்­படிப் பல நிறை குறைகள் கலந்து, நுண்­ண­றிவு அதி­கமா இருக்கக் கூடிய phase இது.அது­மட்­டு­மில்­லாம, நம்­மள சுத்தி இருக்­குற எடத்த ஒழுங்­குப்­ப­டுத்தக் கூடிய organizing skillsசும் இந்தச் சம­யத்­துல அதி­கமா இருக்­குமாம் ஆஃபீஸ் லேப்­டாப்ல இருக்­குற files-அ ஒழுங்கா organize பண்ணி அந்­தந்த folderல போடு­றது, வீட்டு அல­மா­ரிய அடுக்கி வைக்­கு­றது, மொபைல்ல, பேஸ்­புக்ல, blogலலாம் தேவை­யில்­லா­தலாம் தூக்­கிட்டு, ஒழுங்­கான முறைல வைக்­கு­றது. இப்­படி நமக்குத் தொடர்­பு­டைய எல்­லாத்­து­லயும் வேண்­டா­தத களை­யெ­டுத்­துட்டு, வேண்­டி­யத ஒழுங்­குப்­ப­டுத்த கூடிய phase தான் இந்த Luteal phase.

4. Menstrual Phase

woman-1  மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள் woman 1

அதான் நம்ம, “வந்தாள் உதிர தேவியே”ன்னு பாடக் கூடிய phase. Day 1 to Day 4. பீரியட்ஸ் டைம். சில­ருக்கு Luteal phaseலயி­ருந்த PMS தொந்­த­ர­வுலாம் காணாம போயி, மனசு தானா சாந்­த­மா­குற phase. இது ஓய்­வுக்­கான நேரம். இந்தச் சம­யத்­துல நமக்கு சுய பிர­தி­ப­லிப்பு எண்­ணங்கள் அதி­கமா இருக்­குமாம். முன்­னாடி நடந்­தது எல்­லாத்­தையும் யோசிச்சு பாத்து, நம்­ம­ளோட நிறை குறை­கள நாமே தெரிஞ்­சிக்கக் கூடிய phase.

டைரி எழு­து­றது, அனு­பவக் கட்­டுரை எழு­து­ற­துனு self reflection தொடர்­பு­டைய எல்­லாமே நமக்குக் கொஞ்சம் சுல­பமா செய்ய வரும். தனிமை விரும்­பியா கூட சில சமயம் இருக்கத் தோணும். நம்ம நமக்­குள்ள மட்­டுமே பேசி, நம்­மள பத்­தியே நம்ம நல்லா தெரிஞ்­சிக்கக் கூடிய phase தான் இந்த menstrual phase.

இங்க நான் ‘தனிமை விரும்பி’ன்னு குறிப்­பிட்­டி­ருக்­கு­றத வச்­சிட்டு, “நம் முன்­னோர்கள் ஒன்றும் முட்­டாள்கள் இல்லை. பாத்­தீங்­களா இதுக்­காகத் தான் அப்­பவே பொண்­ணுங்­கள வீட்­டுக்கு வெளிய தனியா உக்­காரச் சொல்­லி­ருக்­காங்க”ன்னு யாரும் கம்பு சுத்­திட்டு வர வேண்டாம்.

எந்த அறைல, எந்த நேரத்­துல, எந்த மாதிரி தான் தனி­மையா இருக்­க­ணும்னு, ஒருத்­தங்க விரும்பி முடிவு பண்­றது வேற.

இந்த எடத்­துல, இந்த நேரத்­துல, இந்த மாதிரி தான் நீ தனி­மையா இருக்­க­ணும்னு ஒருத்­தங்­கள தனி­மைப்­ப­டுத்­து­றது வேற.

அறி­வி­யல சுத்தி உங்க முன்­னோர்கள் கட்­ட­மைச்­சி­ருக்­குற மூட­நம்­பிக்­கை­னா­லயே, அதுல இருந்த கொஞ்­ச­னெஞ்ச அறி­வி­யலும் செத்து சுண்­ணாம்­பாகி பல காலம் ஆச்சு. அத­னால இனி­மே­லாச்சும், தனி­மைய திணிக்­காம, அவங்­க­வங்க விருப்­பப்­படி இருக்க விடுவோம்.

செரி நம்ம இப்போ, முன்­னோர்­கள ஒரு ஓரமா உக்­காரச் சொல்­லிட்டு, நம்­ம­ளோட topicக்கு வருவோம்.பெண்­க­ளுக்குத் தான் இந்த 28 days cycle. ஆண்­க­ளுக்கு வெறும் 1 day cycle தான். எல்லா நாளும் ஒரே மாதிரி தான் இருக்கும் அவங்­க­ளுக்கு. ஆண்­க­ளோட மன­நி­லைக்கு மட்­டுமே ஏத்த மாதிரி தான் எல்லா அலு­வ­ல­கங்­க­ளுமே இயங்­கிட்டு இருக்கு. பெண்­களும் ஆண்கள் மாதி­ரியே எல்லா நாளும் ஒரே மாதிரி consistent-ஆ இருக்­க­ணும்னு எதிர்ப்­பாக்­குது.

இத­னா­லயே பல நாளு, அது luteal phaseனு தெரி­யாம, புது வேலைய கைல வச்­சிட்டு, எனக்கு ஏன் எனர்­ஜியே இல்ல. எனக்கு ஏன் வேலை செய்­யவே புடிக்க மாட்­டேங்­கிது. எனக்கு ஏன் அறிவே இல்­லன்னு கடுப்­பாகி பொலம்­பிட்டு இருந்­து­ருக்கேன்.அத­னால அலு­வ­ல­கத்­துக்குப் போற பெண்கள், இப்­படிப் பண்­ணலாம்.

Follicular phaseல ஒரு புது வேலையப் பத்தி big pictureல யோசிச்சு பிளான் பண்­ணிட்டு, Ovulation phaseல மத்­த­வங்­க­கிட்ட அதப் பத்தி பேசு­ற­துக்கு மீட்டிங் arrange பண்­ணிட்டு, Luteal phaseல detail orientedட்டா செயல்­பட்டு வேலைய முடிச்­சிட்டு, Menstrual phaseல அதோட நிறை குறைகள் பத்தி self reflect பண்ணி பாக்­கலாம். தவ­று­களைச் சரி செய்­யலாம்.

மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள்

அலு­வ­லக அமைப்பு பெண்­க­ளுக்கு ஏத்த மாதிரி நாலு பகு­தி­யாவும் பிரிக்க முடி­யாது. ஏன்னா ஒவ்­வொரு பொண்­ணுக்கும் அது ஒவ்­வொரு மாதி­ரி­யான phase-ஆ இருக்கும்.ஆனா ஒண்ணு பண்­ணலாம், பெண்­க­ளோட இந்த மாத சுழற்­சியப் புரிஞ்­சிக்­குற மாதிரி, அவ­ளுக்குக் குடுக்­கப்­பட்ட வேலைய அவ அவ­ளோட இயல்­பான நுண்­ண­றி­வோட, நேர்த்­தி­யோட, ‘தி பெஸ்ட்’டா முடிச்சு குடுக்­கு­ற­துக்கு ஏத்த மாதி­ரி­யான சூழ்­நி­லை­யயும், அவ­ளுக்குத் தேவை­யான நேரத்­தையும் குடுக்­கலாம். பெண்கள் தான் இத தைரி­யமா கேட்டு வாங்­கணும்.

நம்­ம­ளோட இயல்­புக்கு ஏத்த மாதிரி அந்தச் சூழ்­நி­லைய மாத்­துனா மட்டும் தான், நம்­ம­ளால அதுல ரொம்ப நாள் survive பண்ண முடியும். சந்­தோ­சமா வேலை செய்ய முடியும். இல்­லனா பாதி­லயே மன அழுத்­தம்னு சொல்­லிட்டு, மறு­ப­டியும் வீட்­டுக்­குள்­ளயே அடைஞ்சி கெடைக்க வேண்டியது தான். அதனால, masculine-ஆ இருக்குற அலுவலகச் சூழ்நிலைய பெண்களுக்கு ஏத்த மாதிரியும் கண்டிப்பா மாத்தியே ஆகணும்.

இந்த four phases of menstrual cycle பத்தி நீங்களும் கொஞ்சம் பகுத்தறிஞ்சு பாத்துட்டு, உங்களுக்கும் இது பொருந்துற மாதிரி இருந்துருச்சுனா, இதுல இருக்குற தீர்வ பின்பற்றுங்க. இல்லனாலும் no problem. இதுல இருக்குற எல்லாத்தையும் மறந்துட்டு, எப்போ எந்த மாதிரி வேலை செய்யணும்னு உங்களுக்கு ஆர்வமா இருக்கோ, அப்போ அந்த மாதிரி வேலைய பண்ணுங்க. அது கரெக்ட்டா தான் இருக்கும். Just go with the flow.

 

(சுபா கணேஷன் )

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News