ilakkiyainfo

ilakkiyainfo

மார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்

மார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்
April 15
05:01 2019

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 156 கோடியை செலவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு செலவிடும் தொகையை இருமடங்காக அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு 22.6 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.156 கோடி) செலவிட்டுள்ளது.

201904150947116585_1_FBPic100._L_styvpf  மார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக் 201904150947116585 1 FBPic100மார்க் சூக்கர்பர்க் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு டாலர் எனும் மிகக்குறைந்த தொகையை வருவாயாக பெறுகிறார். 2017 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு ரூ.62 கோடி செலவிடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இது பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

இதுதவிர தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்தியதில் மார்க் சூக்கர்பர்க் ரூ.18 கோடி செலவிட்டிருக்கிறார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு சார்ந்த பிரச்சனையில் சிக்கியது முதல் அந்நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

ஃபேஸ்புக்கின் மூத்த நிர்வாக அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் 2018 ஆம் ஆண்டு ரூ.164 கோடிகளை வருவாயாக பெற்றிருக்கிறார். முந்தைய ஆண்டில் இவர் ரூ.174 கோடிகளை சம்பளமாக பெற்றிருந்தார்.

இதுதவிர நெட்ஃப்ளிக்ஸ் மூத்த அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் ஃபேஸ்புக்கின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவார் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியிருப்பதை தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் அந்நிறுவனத்தில் இருந்து விலகுகிறார். ஃபேஸ்புக் நிறுவன நிர்வாக குழுவில் 2011 ஆம் ஆண்டு முதல் ஹேஸ்டிங்ஸ் இடம்பெற்றிருக்கிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News