தாய்லாந்து குகைக்குள் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்ட நெகிழ்ச்சி சம்பவத்துக்குப் பின்னணியில் ஒரு காதல் கதை இருப்பது தெரியவந்துள்ளது.
இத்தனை நாளும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுடனேயே தனது பிரியமானவரின் பக்கத்திலேயே அந்த அழகுப் பெண் இருந்த தகவல்கள் இப்போது புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.
Rick Stanton என்னும் மீட்புப் படைவீரர் தாய்லாந்து சிறுவர்களை மீட்கும்போது அவர் அருகிலேயே ஒரு மொழிபெயர்ப்பாளராக நின்று செயல்பட்ட Amp என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் Siripon Bugnngern என்னும் அந்த அழகிய நங்கைதான் அந்த காதல் கதையின் கதாநாயகி.
Amp வடக்கு தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு நர்ஸ் ஆவார். அவர் மீட்புக்குழுவினருக்கு மொழிபெயர்ப்பாளராக, ஒரு தன்னார்வலராக உதவ முன்வந்தார்.
மீட்பு பணி நடைபெறும் காலம் முழுவதும் அவர் மீட்புக் குழுவினரில் ஒரு பாகமாகவே மாறி Rickகுக்கும் பிற பிரித்தானிய மற்றும் தாய்லாந்து வீரர்களுக்கும் மொழி பெயர்த்து வந்தார்.
Ampக்கும் Rickகுக்கும் வயது வேறுபாடு அதிகம் என்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த காதல் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் அவர்களது திருமணத்தை எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார் அவர்களது நண்பர் ஒருவர்.
நிச்சயம் அவர்களது திருமணத்தில் மீட்புக் குழுவினரோடு மீட்கப்பட்ட சிறுவர்களும் கலந்து கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.