மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு

மன்மதன், செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு – ஜோதிகா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்கள்.
சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்த ‘மன்மதன்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்கள்.
இவர்களுடன் இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜோதிகா நடித்து வரும் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த படப்பிடிப்பின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார்.
இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.
Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str always top ya