வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஓருவரை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

IMG-2033  முதியவரை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு IMG 2033

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த இ.தேவராஜா (வயது 74) என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டிலிருந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

IMG-2032  முதியவரை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு IMG 2032

அவர் தொடர்பில் பல்வேறு இடங்களிலும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் அவரை கண்டு பிடிக்காமையால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.