ilakkiyainfo

ilakkiyainfo

முன்னாள் LTTE உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

முன்னாள் LTTE உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
October 13
14:56 2019
 • திருகோணமலை, கிளிவெட்டியில் கைது கைது
 • மனைவி, சகோதரி கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் கைது

திருகோணமலையில் நேற்றிரவு கைதான கிளிநொச்சி, அம்பாள்குளம் இளைஞனின் வீட்டிலிருந்து ரி56 துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்றைய தினம் (11) திருகோணமலை, சேருநுவர, கிளிவெட்டி பாலத்திற்கு அருகில், சேருநுவர இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் ஒருவர் ரி56 துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Weapons-Found-from-Ex-LTTE-Cadre's-House-Kilinochchi-1 முன்னாள் LTTE உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு Weapons Found from Ex LTTE Cadres House Kilinochchi 1 e1570978525699இதனையடுத்து குறித்த சந்தேகநபர், சேருநுவர பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த ஜோசப் பீட்டர் எனவும், அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று (12) கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள  குறித்த நபரின் வீட்டில் கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையில், அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த வீட்டிலிருந்த அவரது மனைவி என தெரிவிக்கப்படும் 23 வயதான பெண் ஒருவர் மற்றும் 28 வயதான அவரது சகோதரி ஆகியோரும் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள்

 • T56 ரக துப்பாக்கி 01
 • T56 துப்பாக்கி ரவைகள் 154
 • SFG 87 வகை கைக்குண்டுகள் 03
 • C4 வெடிபெருட்கள் சிறிதளவு
 • 9mm வகை தோட்டாக்கள் 62
 • 7mm வகை தோட்டாக்கள் 09
 • தூரத்திலிருந்து சுடக்கூடிய அரை தன்னியக்க ரைபல் 01
 • மெகசின் 01
 • டெட் கோட் 02
 • பல்வேறு வகையான டெட்டனேட்டர்கள் 62
 • MGM ரவைகள் 05
 • கத்தி 01
 • GPS 01
 • சோனி கெமரா 01
 • இரட்டை தொலைகருவி 01
 • மடி கணிணி 01
 • டொங்கல் 01
 • அன்டெனா 01
 • கையடக்க தொலைபேசிகள் 04
 • LTTE தலைவர் பிரபாகரனின் புகைப்படத்துடனான ரி-சேர்ட் 04
 • கறுப்பு முகமூடி 01

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

முன்னாள் LTTE உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு-Weapons Found from Ex LTTE Cadre's House-Kilinochchi முன்னாள் LTTE உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு Weapons Found from Ex LTTE Cadre 27s House Kilinochchi 3

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News