ilakkiyainfo

ilakkiyainfo

“மும்பை பிக்பாஸ் போல இருக்கக்கூடாது தமிழ்நாட்டு பிக்பாஸ்!” – பொறிந்து தள்ளிய கமல் (பிக்பாஸ் சீசன் 2 : 69ம் நாள்!!- வீடியோ)

“மும்பை பிக்பாஸ் போல இருக்கக்கூடாது தமிழ்நாட்டு பிக்பாஸ்!” – பொறிந்து தள்ளிய கமல் (பிக்பாஸ் சீசன் 2 : 69ம் நாள்!!- வீடியோ)
August 26
13:07 2018

மும்தாஜின் நீண்ட பொறுமைக்கு கிடைத்த பரிசாக இன்றைய பஞ்சாயத்து நாளைக் குறிப்பிடலாம். கமல் சொன்னதுபோல் ‘டாஸ்க் செய்ய முடியாது’ என்று முன்பு அழிச்சாட்டியமாக  மைக்கை கழற்றி வைத்த மும்தாஜ், இன்று இடம் வலமாக மாறிவிட்டார்.

பெரிய கோடு வந்ததும் சிறிய கோடு தன் மதிப்பை கணிசமாக இழப்பதுபோல, மஹத் மற்றும் ஐஸ்வர்யாவின் கோபத்துக்கு முன்னால் மும்தாஜின் பொறுமை அவரை கூடுதல் நல்லவராக இன்று நிறுத்திவிட்டது. இதனால் தராசு அவர் பக்கம் இயல்பாக சாய்ந்துவிட்டது.

ஆனால் மும்தாஜின் பொறுமைக்குக் கிடைத்த அதே பரிசு டேனிக்கு கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிக்பாஸின் கேமராவும் கமலின் பஞ்சாயத்தும் வார இறுதியில் தனக்கு  நீதி சொல்லும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு மஹத்தின் அட்டூழியங்களை தாங்கிக்கொண்டிருந்தார், டேனி. ‘இரண்டு நிமிஷம்தான் பேசுவேன்.

அதுக்கு மேல பேச மாட்டேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். தனக்கான வாய்ப்பு கிடைத்ததும் அதைப் பட்டியலிடவும் செய்தார். ஆனால் சற்று ஓவராக பொங்கிவிட்டாரோ என்று தோன்றியது.

‘பாலியல் வல்லுறவு’ போன்ற பெரிய பாறாங்கல் வார்த்தைகளை அவர் உபயோகித்ததும் மஹத்தே அதிர்ச்சியடைந்துவிட்டார் (இந்தச் சம்பவம் எப்ப நடந்தது?!). தான் சொன்ன வார்த்தையின் பொருள் அறிந்துதான் டேனி சொன்னாரா? பாலியல் சீண்டல் என்பதைத்தான் அப்படி சொல்லிவிட்டாரோ? ‘பாகுபலி’ உடையில் இருந்த டேனியின் பின்பக்கத்தை தட்டுவதன் மூலம் மும்தாஜிற்கும் அதை உணர்த்த முயன்ற மஹத்தின் ஒரு கேவலமான காரியத்தைத்தான் சொல்லவந்தாரா என்று தெரியவி்ல்லை.

‘இங்க அடிச்சிட்டான் சார்” என்று தன் வயிற்றை டேனி காட்டியபோது ‘என்னாச்சு தொப்புளை சுத்தி ஊசி போட்டாங்களா’ என்று கமல் கேட்டது அக்மார்க் நையாண்டி.

சாமர்த்தியமாக செருகப்பட்ட இந்தக் குண்டூசி மஹத்தின் மூளைக்கு உறைத்தால் இனி அவர் எந்நாளும் முண்டாவை முறுக்கிக்கொண்டு சேட்டையில் இறங்கமாட்டார்.

ஆனால் ஒருவர் அத்தனை உணர்ச்சிகரமாக புகார் வைத்துக்கொண்டிருக்கும் போது சர்காஸ்டிக்காக கமல் கிண்டலடிப்பதும் முறையாக தென்படவில்லை.

‘என் உடல் சார்ந்த பிரச்னைகள் தெரிந்தும் மஹத் முரட்டுத்தனமாக கையாண்டார்’ என்று அவர் சொல்வது, குறும்புத்தனங்கள் அல்லாத கரிசனத்தோடு அணுகப்பட வேண்டியது.

“டேனிங்கிற உத்தமரைக் குத்திட்டீங்களாமே” என்று அந்தச் சமயத்திலும் கமல் குத்திக் காண்பித்தது நெருடல்.

ஒருவரின் குற்றம் கேமராவில் துல்லியமாக பதிவாகியிருந்தாலும்கூட, வாதி, பிரதிவாதி ஆகிய இருவரையும் விசாரித்து, அவர்களின் தரப்பை நிதானமாக கேட்டு பிறகு தீர்ப்பளிப்பதே உண்மையான நீதி விசாரணை.

அதுவரை அடக்கி வைத்திருந்த மனத்தாங்கல்களை வெளியில் கொட்டினாலாவது ஆசுவாசம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு போதிய வாய்ப்பு தராமல் ‘நாங்க பார்த்துட்டுதான் இருக்கோம்’ என்று அமர வைப்பது முறையானதல்ல. “நீங்க அடிபட்டதை திரும்பத் திரும்ப காண்பிச்சாக்கூட மக்கள் பக்கோடா சாப்பிட போயிடுவாங்க’ என்பதன் மூலம் பார்வையாளர்களையும் கமல் ஒருவகையில் அவமதிக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி பார்வையாளர்கள் அலட்சியமாக  திரும்பி அமர்ந்திருந்தால் ‘தவறு செய்தவர்களை தண்டியுங்கள்’ என்கிற ஆவேசக்கூச்சலும் அறச்சீற்றமும் வந்திருக்குமா?

பெரும்பாலான பஞ்சாயத்துக்களில் பெண்களின் பக்கம் அதிகம் சாயும் தராசு, ஆண்களுக்கு மீதும் அதே கரிசனத்தோடு சாய்கிறதா? ‘சரி, எழுந்து துடைச்சுட்டு போ’ என்று இடதுகையால் அலட்சியத்துடன் கையாள்கிறது.

டேனியின் பஞ்சாயத்தில் நடந்ததும் அதுதானோ என்று தோன்றுகிறது.  மும்தாஜின் குரல் ஒலித்த அளவுக்கு டேனிக்கு வாய்ப்பு தரப்படவில்லை. மும்தாஜிற்காக போடப்பட்ட குறும்படத்தில்கூட, டேனியை நோக்கி ஆவேசமாக வந்து துணியால் அடித்த மஹத்தின் காட்சி இல்லை.

‘மெனு கொடுத்திட்டீங்கள்ல சமைச்சுடறேன்’ என்று ஆவேசமாக கிளம்பிய கமலின் நளபாகத்தில் உப்பு, உறைப்பு எல்லாம் சற்று தூக்கலாகவே இருந்தது. அதே சமயம் நையாண்டி, வார்த்தை ஜாலம் போன்ற தொடுவுணவுகளின் சுவை அபாரம்.

**

உடனே சிலுவையில் அறையுமளவிற்கு மஹத் கொடூரமான குற்றவாளியல்ல. அவருடைய வயதிற்கே உரிய பக்குவமின்மையோடு நிறைய பிழைகளைச் செய்தார். ‘எங்களின் எச்சரிக்கையையும் மீறி அவன் தப்பு செய்தது உண்மைதான்.

ஆனால் அவன் அடிப்படையில் நல்லவன். அந்தப் பக்கத்தை அவன் காண்பிக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளவில்லை.’ என்று சமநிலையுடன் ஒலித்த ரித்விகா மற்றும் ஜனனியின் குரல் சரியானதாக இருந்தது. இதை புதிதாக வந்த விஜயலட்சுமியும் ஆமோதித்தார்.

பாலாஜியுடன் முன்பு சண்டையிட்ட பிறகு மனம் வருந்தி அவருடைய காலை தலையில் தொட்டு அழுது மன்னிப்பு கேட்ட மஹத், அதே ஆத்மார்த்தமான மன்னிப்பை மும்தாஜிடமும் டேனியிடமும் டாஸ்க் முடிந்த பிறகு கேட்டிருக்கலாம் அல்லது சம்பிரதாயத்திற்காக அல்லாமல் உள்ளபடியே மனம் வருந்தி இந்தச் சபையில்கூட அவர் அதைச் செய்திருந்தால்கூட அவருடைய பிம்பம் பெரிதும் சேதம் ஆகாமல் இருந்திருக்கும்.

தண்டிக்கச் சொல்லும் அதே மக்கள் மன்னிப்பை வழங்கவும் தயாராக இருப்பார்கள். “ஆமாம். தவறு செஞ்சிட்டேன், திருத்திக்கறேன், என்ன இப்போ.’ என்கிற அளவில் அவர் நிறுத்திக்கொண்டதிலிருந்து ‘தான் செய்தது நியாயம்’ என்று இன்னுமும் நம்பிக்கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News