ilakkiyainfo

ilakkiyainfo

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்- (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்- (படங்கள்)
May 17
21:38 2017

தமிழனப் படுகொலை இடம்பெற்ற மே 18 ஆம் திகதியான நாளைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தரப்பினரால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளில் 2006 ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய கோரத் தாண்டவம், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது.

இந்த மானிடப் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு தினம் நாளை முள்ளிவாய்க்காலில் பல்வேறு தரப்பினரால் நினைவு கூரப்படவுள்ளது.

அந்த வகையில், நாளை காலை 9.30 அளவில் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்துடன், முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரைப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், மாலை 3.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அருட்தந்தை எமில்ராஜன் அடிகளார் தலைமையில் நினைவுக் கற்கள் பொறிக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நாளை 4.00 மணியளவில் முல்லைத்தீவு பொது நோக்கு மண்டபத்தில் நினைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை 11.00 அளவில் நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொள்வதற்காக மாவட்டங்கள் ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படவுள்ளன.

ஒழுங்கு செய்யப்பட்ட பேரூந்துகளில் வரக்கூடியவர்கள் அதனூடாகவும், ஏனையவர்கள் தாங்கள் வரக்கூடிய வகையிலும் இப்புனித அஞ்சலிக்காக முள்ளிவாய்க்கால் கிழக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் தளத்துக்கு வருகை தருமாறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

591c25266842b-IBCTAMIL  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்- (படங்கள்) 591c25266842b IBCTAMIL591c2527da190-IBCTAMIL  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்- (படங்கள்) 591c2527da190 IBCTAMIL591c252731279-IBCTAMIL  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்- (படங்கள்) 591c252731279 IBCTAMIL

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

அமெரிக்க எடுபிடி ஆக உள்ள மைத்ரி அரசுக்கு ரஷ்யா அடித்த ஆப்பு இது, ஈரான், [...]

இந்த கொலை கார புளொட் காரன் சித்தம் பிழைத்தவன் , [...]

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

இலங்கை பத்திரிகைகள்

English News