ilakkiyainfo

ilakkiyainfo

மூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன்? – தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்

மூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன்? – தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்
May 22
15:11 2019

சென்னை அம்பத்தூரில் மூன்றரை வயது மகனை பெற்ற தாயே தவறான நட்புக்காகக் கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அந்தப் பெண் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

kishore_final_14124  மூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன்? - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம் kishore final 14124

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு, வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரின் சொந்த ஊர் திருவாரூர். பெயின்டிங் வேலை செய்துவருகிறார். இவருக்கும் ஈரோடு, பெருந்துறையைச் சேர்ந்த சமூக சேவகி புஷ்பாவின் மகள் புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் மூன்றரை வயதுக் குழந்தை கிஷோருடன் புவனேஸ்வரி, ஈரோட்டிலிருந்து சென்னை வந்தார். கார்த்திகேயனும் புவனேஸ்வரியும் கணவன் மனைவி போல வாழ்ந்துவந்தனர்.

உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் பொற்கொடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ரமேஷ் ஆகியோர் புவனேஸ்வரியிடமும் கார்த்திகேயனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது புவனேஸ்வரி, கிஷோரை எதற்காக கொலை செய்தேன் என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு 16 வயது இருக்கும்போது ஈரோட்டைச் சேர்ந்த சோமசுந்தரத்துடன் திருமணம் நடந்தது.

எங்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் கிஷோர் பிறந்தான். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சோமசுந்தரம், என்னை தினமும் அடித்து துன்புறுத்தினார். இதனால் என் வாழ்க்கை நரகமானது. குழந்தையை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல் வாழ்ந்தேன்.

இந்தச் சமயத்தில்தான் அம்மா புஷ்பா மற்றும் சித்திமகள், நான் மற்றும் கிஷோர் ஆகியோர் சென்னை போரூரில் நடந்த பெண்கள் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்தோம்.

அவசர வேலையாக அம்மா, ஊர் திரும்பிவிட்டார். இதனால் என்னையும் சித்திமகள் மற்றும் கிஷோரைக் கவனித்துக்கொள்ளும்படி மாநாட்டுக்கு வழிகாட்டியாக வந்த திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் அம்மா கூறினார்.

அவரும் எங்களுடன் நட்பாகப் பழகினார். அவரின் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. இதனால் இருவரும் செல்போன் நம்பர்களைப் பகிர்ந்துகொண்டோம்.

boova_text_1_14341  மூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன்? - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம் boova text 1 14341

இதையடுத்து கார்த்திகேயன், என்னிடம் பேசத் தொடங்கினார். முதல் திருமணத்தில் நடந்த கசப்பான அனுபவங்களால் நான் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் இருந்தேன்.

அந்தச் சமயத்தில் கார்த்திகேயனின் அன்பு, பேச்சு என்னுடைய காயங்களுக்கு மருந்தாக இருந்தது. இதனால் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கிஷோரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தேன். சென்னையில் தங்கி கார்த்திகேயன், பெயின்டிங் வேலை பார்த்துவந்தார்.

அம்பத்தூர் மேனாம்பேடு, வ.உ.சி.நகரில் 1,200 ரூபாய் வாடகையில் முதல் மாடியில் நாங்கள் தங்கினோம். கடந்த 6 மாதங்களாக எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.

வீட்டுக்கு கார்த்திகேயன் வந்தாலே கிஷோர் அடம் பிடித்து அழத் தொடங்கிவிடுவான். முதல் திருமண வாழ்க்கைதான் சந்தோஷமாக இல்லை.

இந்த வாழ்க்கையிலும் கிஷோரால் நிம்மதியில்லாமல் போக ஆரம்பித்தது. இதனால் கிஷோர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று கிஷோரை தோசைக் கரண்டியால் அடித்தேன்.

வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்த கிஷோர் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தான். அதில் அவனின் வலது தொடைப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக கிஷோரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவனைப் பரிசோதித்த டாக்டர்கள், கிஷோரின் உடல் நலம் மோசமாக இருப்பதாகக் கூறினர்.

boova_123_14222  மூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன்? - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம் boova 123 14222

இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நானும், கார்த்திகேயனும் கிஷோரை தூக்கிக்கொண்டு சென்றோம்.

மருத்துவமனையில் இருந்த ஊழியர் ஒருவர், இது போலீஸ் கேஸ், முதலில் போலீஸுக்குத் தகவலை தெரியப்படுத்தக் கூறினார்.

போலீஸுக்குத் தகவல் தெரிந்தால் சிக்கல் எனக் கருதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறினோம். அப்போது கிஷோரின் உடலில் எந்த அசைவும் இல்லை. அவன் இறந்துவிட்டான், அடுத்து என்ன செய்யலாம் என்று இருவரும் யோசித்தோம்.

அந்தச் சமயத்தில் கிஷோரை தூக்கி வைத்திருந்த என்னால் அழக்கூட முடியாமல் அமைதியாக இருந்தேன். அப்போதுதான் கிஷோரின் சடலத்தை திருவாரூக்குக் கொண்டு சென்றால் அங்கு வைத்து யாருக்கும் தெரியாமல் எரித்துவிடலாம் என்று கார்த்திகேயன் கூறினார்.

உடனடியாக 12,000 ரூபாய் கொடுத்து ஆம்புலன்ஸில் கிஷோரின் சடலத்தோடு திருவாரூருக்குச் சென்றோம். அப்போதுதான் கிஷோர் இறந்த தகவலை அம்மா புஷ்பாவுக்கு போன் மூலம் தெரிவித்தேன்.

உடனடியாக அவர், போனில் அம்பத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டார். உடனடியாக போலீஸார் நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது.

 

boova_3_14204  மூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன்? - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம் boova 3 14204

இதற்கிடையில், பட்டுக்கோட்டை காவல் நிலையத்துக்கும் திருவாரூர் காவல் நிலையத்துக்கும் அம்மா போனில் தகவல் தெரிவித்துவிட்டார்.

அவர்களும் எங்களைத் தேடியுள்ளனர். திருவாரூரில் உள்ள கார்த்திகேயனின் சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் கிஷோரின் சடலத்தை எரிக்க கொண்டுசென்ற சமயத்தில் திருவாரூர் போலீஸார் எங்களை மடக்கிப்பிடித்துவிட்டனர்.

பிறகு கிஷோரின் சடலத்தோடு திருவாரூரிருந்து எங்களை அம்பத்தூருக்கு அனுப்பி வைத்தனர். கொலையை மறைத்து தப்பிவிடலாம் என்று எண்ணிய நாங்கள் அம்மாவால் சிக்கிக்கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கார்த்திகேயனுக்குத் திருமணமாகவில்லை. கார்த்திகேயனின் முகத்தில் எப்போதும் தாடி இருக்கும்.

அந்தத் தாடி வைத்த முகம் புவனேஸ்வரிக்கு ரொம்பப் பிடிக்கும் என்று எங்களிடம் கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், சம்பவத்தன்று கிஷோரை புவனா, அடிக்கும்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். இதனால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று கார்த்திகேயன் கூறினார்.

கிஷோர் இறந்த தகவலை ஏன் எங்களிடம் கூறவில்லை என்று கார்த்திகேயனிடம் கேட்டதற்கு அவரால் பதில் சொல்லமுடியவில்லை.

கார்த்திகேயனும் புவனேஸ்வரியும் தங்கியிருந்த வீட்டின் அருகில் விசாரித்தபோது தினமும் கிஷோரை இருவரும் சேர்ந்து அடிப்பார்கள் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அதன்அடிப்படையில்தான் புவனேஸ்வரியிடமும் கார்த்திகேயனிடமும் விசாரித்தபோது உண்மை வெளியில் தெரியவந்தது.

புவனேஸ்வரியின் முதல் கணவர் சோமசுந்தரம், சில மாதங்களுக்கு முன் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால், அவருடன் செல்ல புவனேஸ்வரி மறுத்துவிட்டார். புவனேஸ்வரி குறித்து விசாரணை நடத்த சோமசுந்தரத்தை சென்னைக்கு வர தகவல் அனுப்பியுள்ளோம்.

அவரும் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார். புவனேஸ்வரியின் அம்மா புஷ்பா மட்டும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லையெனில் இந்தக் கொலையை புவனேஸ்வரியும் கார்த்திகேயனும் மறைத்திருப்பார்கள்.

கிஷோரைக் கொலை செய்ய பயன்படுத்திய தோசைக் கரண்டி, சம்பவத்தன்று அவர் அணிந்திருந்த ஆடையில் உள்ள ரத்தக்கறைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். புவனேஸ்வரி கூறிய தகவல்களை 5 பக்கத்துக்கு வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளோம் ” என்றார்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News