துபாயில் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் தரையிறங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வானில் கூடியிருக்கும் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் ஒன்று பறந்து வந்து தரை இறங்குகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவினை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ 10 நொடி மட்டுமே ஓடியுள்ளது. இந்த வீடியோவிற்கு அந்நிறுவனம் ‘கிராண்ட் எண்ட்ரன்ஸ்’ என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளது.
இந்த வீடியோவினை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் டுவிட்டரில் பகிர்ந்தது முதல் ஆயிரக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.
Now that’s how you make a grand entrance. Video credit: Tom Jones pic.twitter.com/ojAOguED4D
— Emirates Airline (@emirates) July 31, 2019
தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஏ380 எனும் அந்த விமானம், மேகத்திலிருந்து வெளிப்படுவதை வீடியோ காட்டியுள்ளது. இதனை நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.