ilakkiyainfo

ilakkiyainfo

மைத்­திரி-,மஹிந்த தலை­மையில் கூட்­ட­ணி­ அ­மைக்கும் பணிகள் தீவிரம்

மைத்­திரி-,மஹிந்த தலை­மையில் கூட்­ட­ணி­ அ­மைக்கும் பணிகள் தீவிரம்
February 08
20:23 2019

டலஸ் தலை­மையில் விசேட குழுவும் நிய­மனம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அணியும் இணைந்து பொது கூட்­ட­ணி­யொன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­க­ப்பெ­ரும தலை­மையில் விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் நேற்று முன்­தினம் இரவு கொழும்பில் சந்­தித்து முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர். இதன்­போதே இந்த குழுவை நிய­மிப்­ப­தற்கும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மைத்­திரி அணியும் மஹிந்த அணியும் இணைந்து பொது கூட்­ட­ணி­யொன்றை அமைப்­பது தொடர்­பா­கவே இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

அந்த வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டளஸ் அழ­க­பெ­ரும தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த குழுவில் முன்னாள் எம்.பி. ஜி.எல். பீரிஸ் மற்றும் சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான உத­ய­கம்­பன்­பில, திலங்க சும­தி­பால உள்­ளிட்­ட­வர்­களும் ஏனைய கட்­சி­களின் தலை­வர்­களும் இடம்­பெ­று­கின்­றனர்.

இவர்கள் விரைவில் விசேட கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சி­களின் தலை­மையில் அனைத்­துக்­கட்­சி­க­ளையும் இணைத்து பொது­வான பய­ண­மொன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளனர்.

இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டளஸ் அழ­க­பெ­ரும கேச­ரிக்கு தகவல் தரு­கையில்;

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன உள்­ளிட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு எதி­ரான அனைத்­துக்­கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து பொது இணக்­கப்­பாட்­டுடன் பய­ணிப்­பது தொடர்பில் ஏற்­க­னவே விரி­வாக ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலையில் அந்த கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் அதற்­கான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தற்­காக எனது தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தக்­கு­ழு­வா­னது எதிர்­வரும் வாரங்­களில் இது­தொ­டர்பில் ஆராய்ந்து தீர்­மா­னங்­களை எடுக்­க­வுள்­ளது. குறிப்­பாக ஐக்­கிய தேசி­ய­கட்­சிக்கு எதி­ராக அனைத்­துக்­கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஒரு பல­மான கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தக்­கூட்­டணி அடுத்­து­வரும் தேர்­தல்­களில் மிகவும் பல­மான சக்­தி­யாக போட்­டி­யிடும் . இத­னு­டைய ஏனைய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்­மா­னங்­களை எடுக்­கவே எனது தலை­மையில் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக்­கு­ழுவில் பல உறுப்­பி­னர்கள் இடம்பெறுகின்றனர். அனைத்துக்கட்சிகளினதும் பிரதிநிதிகள் அதில் இடம்பெறுகின்றனர்.

கேள்வி சின்னம் குறித்தும் ஆராயப்படுமா?

பதில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பின்னர் ஆராயவேண்டிய விடயமாகும். முதலில் நாங்கள் இணைந்து பொதுக் கூட்டணியை அமைக்கவேண்டும். அதன் பின்னரே ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்றார்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News