ilakkiyainfo

ilakkiyainfo

யாழில் இளைஞர்களிடம் நுட்பமாக பணம் பறிக்கும் கும்பல்

யாழில் இளைஞர்களிடம் நுட்பமாக பணம் பறிக்கும் கும்பல்
February 03
10:23 2019

யாழ்ப்­பா­ணத்தில் இளை­ஞர்­க­ளிடம் நுட்­ப­மாக பணம் பறிக்கும் செயற்­பா­டு­களில் சிலர் ஈடு­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்ற வண்­ண­முள்­ளன. குறிப்­பாக வங்­கி­களில் வேலை பெற்றுத் தரு­வ­தாக இந்த மோசடி இடம்­பெ­று­கி­றது. எனினும் பெரி­ய­ளவில் பணத்தை கோராமல் குறு­கிய தொகையை அவர்கள் கோரு­வதால் இந்தச் சம்பவங்கள் வெளியே வரு­வ­தில்லை.

இந்த வாரம் நடை­பெற்ற சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

வலி­காமம் கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட இள­வாலைப் பகு­தியில் உள்ள பாட­சாலை ஒன்­றுக்கு தொலை­பேசி ஊடாக அழைத்த ஒருவர், அங்கு க.பொ.த. உயர்­தரப் பரீட்சை முடித்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்­காக உள்­ள­வர்கள் இருந்தால் வங்­கியில் வேலை­வாய்ப்பு உள்­ளது, யாழ்ப்­பா­ணத்­துக்கு நேரில் வந்து தொடர்­பு­கொள்­ளலாம் எனக்­கூறி கைய­டக்கத் தொலை­பேசி இலக்­கத்தை வழங்­கி­விட்டு அழைப்பைத் துண்­டித்­துள்ளார்.

இந்த தொலை­பேசி அழைப்பு வந்த போது, பாட­சாலை அதிபர் அலு­வ­ல­கத்தில் இருக்­க­வில்லை. அதனால் அடுத்த நிலை அலு­வ­ல­கரே இந்தத் தக­வலைப் பெற்று அங்­குள்­ள­வர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

இதனால் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்­காகக் காத்­தி­ருந்த மாண­வி­ ஒ­ருவர் அவ­ருடன் தொடர்பு கொண்­டுள்ளார். அந்த நபர் முதலில் யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சாலை வீதியில் உள்ள வங்கிக் கிளைக்கு வரு­மாறு கூறி­யுள்ளார்.

பின்னர் வங்­கியின் தலை­மை­ய­கத்­துக்கு வரு­மாறு குறிப்­பிட்­டுள்ளார். அந்த வங்­கிக்கு யாழ்ப்­பா­ணத்தில் எங்கு தலை­மை­யகம் உண்டு எனக் கேட்ட போது, அந்த மாண­வியை கோப்­பாய்க்கு வரு­மா­று ­கூ­றி­யுள்ளார்.

பின்னர் மாண­விக்கு மீண்டும் அழைப்பை எடுத்த அந்த நபர், நவீன வச­திகள் கொண்ட வர்த்­தக நிலை­யத்­திற்கு சென்று 5 ஆயிரம் ரூபா ‘ஈசிகாஸ்’ செலுத்­தி­வி­டு­மாறும் அதன் பின்னர் தொலை­பேசி அழைப்பு வரும் போது வரு­மாறும் கூறியுள்ளார்.

அதனை நம்பி அந்த மாண­வியும் பணத்தைச் செலுத்தத் தயா­ரா­கிய போது, அவரின் சகோ­த­ரனை சந்­திக்க நேரிட்­டது.

அவ­ரிடம் அந்த மாணவி நடந்­த­வற்றைக் கூறி­யுள்ளார். அந்த தொலை­பேசி இலக்­கத்தை வாங்கி சகோ­தரன் பல தட­வைகள் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். எனினும் அந்த மோசடி நபர் அழைப்­புக்கு பதி­ல­ளிக்க­ வில்லை.

மாணவி பணம் செலுத்தச் சென்ற போது, சகோ­த­ரனைச் சந்­திக்க நேரிட்­டதால் பண மோச­டி­யி­லி­ருந்து தப்­பித்துக் கொண்டார்.

இதே­வேளை பாட­சாலை நிர்­வா­கத்­தி­னரால் குறித்த வங்­கிக்கும் இவ்­வா­றான சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத் தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    “ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

0 comment Read Full Article
    பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த  இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News