ilakkiyainfo

ilakkiyainfo

யாழ் மாநகரசபையில் நடந்த விசித்திர சம்பவம்!! நடந்தது என்ன?

யாழ் மாநகரசபையில் நடந்த விசித்திர சம்பவம்!! நடந்தது என்ன?
February 12
18:21 2018

2018 ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விசித்திரமான சம்பவம் ஒன்று யாழ் மாநகர சபை பிரதேசத்தில்   பதிவாகி உள்ளது.

குறித்த தேர்தலில் யாழ் மாநகர சபை சார்பாக தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 14 ஆசனங்களை  மக்களின் ஆணையுடன் பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு இரண்டு பட்டியல் உறுப்பினர்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் ஒதுக்கபட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு பட்டியல் ஆசனங்களும் எவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என இன்னும் அக் கட்சி தீர்மானம் எடுக்காத நிலையில் 13 ஆம் வட்டாரத்தில் தோல்வியடைந்த ஒரு வர்த்தகருக்கு  தான் ஆசனம் வழங்கப்படும் என  தன்னிடம் கட்சி தெரிவித்ததாக  வடக்கு மாகாண சபை நியமன உறுப்பினர் தோல்வி அடைந்த தரப்பினர் தெரிவித்தாராம்.

இதனை சற்று எதிர்பாராது  நம்பிய அந்த தோல்வி அடைந்த வேட்பாளர் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான சட்டவிரோத வெடிகளை(மூலவெடிகள்) கொள்வனவு செய்து  ஐந்துசந்தி பகுதி  ஒஸ்மானியா கல்லூரி சூழலில் கொளுத்தி போட்டிருந்தார்.

இந்த வெடி கொளுத்தலினால்   பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்த மக்கள் வீதியில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக  கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினரை அழைத்த கட்சி முக்கியஸ்தர்கள்  இவ்விரு ஆசனங்களும் பெண்களுக்கு தான் ஒதுக்கி இருப்பதாகவும் வேறு எவருக்கும் பகிர்ந்து அளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துளள்னர்.

இதனை அடுத்து தான் பதவியை இராஜனாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளாராம்.

 மேலும்  பட்டாசுகளை  பெருமளவில்    வீதிகளில் கொளுத்திய வேட்பாளரை மக்கள் ஏசியதுடன் தவறான தகவலை தனக்கு வழங்கி  சூழலை மாசுபடுத்திய   தோல்வி அடைந்த 13 ஆம் வட்டார  வேட்பாளர் வடக்கு மாகாண சபை உறுப்பினரை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News