ilakkiyainfo

ilakkiyainfo

யுத்தத்தின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி யாரும் வரவில்லை!!: (கமல் குண­ரத்ன வழங்கிய விசேட செவ்வி..)

யுத்தத்தின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி யாரும் வரவில்லை!!:  (கமல் குண­ரத்ன வழங்கிய விசேட செவ்வி..)
September 19
10:34 2016

யுத்­தத்தின் இறுதி நாளன்று வெள்­ளைக்­கொ­டி­யேந்திக் கொண்டு எவரும் வர­வில்லை. அப்­படி வெள்­ளைக்­கொ­டி­யேந்­திக்­கொண்டு வந்­தார்கள் என்று எவ­ரா­வது கூறினால் நான் அதை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.

இறுதி யுத்தம் வரை பிர­பா­கரன் களத்தில் இருந்தார். நாங்கள் 19ஆம் திகதி வரை­யி­லேயே பிர­பா­கரன் நந்­திக்­கடல் பிர­தே­சத்தில் இருந்தார் என்­பதை அறிந்­து­கொண்டோம்.

அதன் பின்­னரே அப்­பி­ர­தே­சத்தை நோக்கி தாக்­கு­தலை மேற்­கொண்டோம் என்று நந்தி கடல் இறு­தி­யுத்­தத்தை மேற்­கொண்ட 53ஆவது படை­ய­ணியின் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன ஞாயிறு லங்­கா­தீ­ப­விற்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி: உங்­களை நீங்கள் அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்டால்….

பதில்: நான் பிறந்­தது கொழும்பு பன்­னி­பிட்­டி­யவில். அதற்கு பின்னர் பன்­னிப்­பிட்­டிய தர்­ம­பால வித்­தி­யா­ல­யத்தில் ஐந்தாம் ஆண்­டு­வரை கல்வி பயின்றேன்.

ஆறாம் ஆண்­டி­லி­ருந்து கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரியில் கல்­வியைத் தொடர்ந்தேன். அங்கு நான் சாரணர் இயக்­கத்தில் ஜனா­தி­பதி பதக்கம் பெற்றேன்.

அதேபோல் நான் சிரேஷ்ட மாணவர் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்டேன். மேலும், கல்­லூரி கால்­பந்து அணியில் ஒரு வீர­னாக களம் இறங்­கினேன். க.பொ.த. உயர்­த­ரத்தில் சித்தி பெற்­ற­வுடன் “கடேட்” அதி­கா­ரி­யாக ராணு­வத்தில் இணைந்து கொண்டேன்.

கேள்வி: இரா­ணுவப் பத­வியை நீங்கள் தெரிவு செய்­ததேன்-?

பதில்: நான் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் போதே இரா­ணு­வத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்­றி­யது.

ஆனந்தா கல்­லூ­ரியில் நான் சேர்ந்­த­வுடன் இரா­ணு­வத்தில் சேர­வேண்டும் என்ற விருப்பம் மேலும் அதி­க­ரித்­தது.

காரணம், ஆனந்தா கல்­லூ­ரியில் கல்வி பயின்ற பலர் இரா­ணு­வத்தில் இணைந்­தி­ருக்­கின்­றனர். அவர்கள் கல்­லூ­ரிக்கு இரா­ணுவ சீரு­டை­யுடன் வரு­வது வழக்கம்.

இதைப் பார்த்­த­வுடன் இரா­ணு­வத்தில் சேரும் எனது ஆசை மேலும் அதி­க­ரித்­தது. எமது கல்­லூரி அதி­ப­ராக கேர்ணல் டி. டபிள்யூ. ராஜபக் ஷ

பதவி வகித்தார். நான் இரா­ணு­வத்தில் இணை­வ­தற்கு அவர் முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கினார். ஆனந்தா கல்­லூ­ரியின் பழைய மாண­வர்கள் பலர் இரா­ணு­வத்தில் இணைந்து இறு­தி­யுத்தம் வரை தலைமை தாங்­கினர்.

கோத்­த­பாய ராஜபக் ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, அட்­மிரல் வசந்த கரன்­ன­கொட, அட்­மிலர் சரத் வீர­சே­கர, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் பிர­சன்ன சில்வா, மேஜர் ஜெனரல் கமல்­ரத்ன, மேஜர் ஜெனரல் கால்­லகே ஆகிய அனை­வரும் ஆனந்தா கல்­லூ­ரியின் பழைய மாண­வர்கள்.

அதேபோல் கல்­லூ­ரியின் அதிபர் கேர்ணல் டி. டபிள்யூ. ராஜபக் ஷவின் சிஷ்ய மாண­வர்­க­ளாவர்.

கேள்வி: நீங்கள் இரா­ணு­வத்தில் எந்தக் கால­கட்­டத்தில் இணைந்­தீர்கள்?

பதில்: 1980 ஆம் ஆண்டு உயர்­த­ரத்தில் சித்­தி­யெய்­தினேன். நான் இரா­ணு­வத்தில் இணைய விண்­ணப்­பித்தேன்.

நேர்­முகப் பரீட்­சைக்கு ஒரு வருட கால­மா­னது. பல்­வேறு மட்­டத்தில் நேர்­முகப் பரீட்­சைகள் நடந்­தன. 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி நான் இரா­ணுவ அதி­கா­ரி­யாக இரா­ணு­வத்தில் இணைந்­து­கொண்டேன்.

கேள்வி: 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை சம்­ப­வங்கள் இடம் பெற்ற போது நீங்கள் பத­விக்கு புதி­யவர். எவ்­வாறு அன்று இச்­சம்­ப­வத்தை நோக்­கி­னீர்கள்?

பதில்: லெப்­டிணன் வாஸ் குண­வர்­தன மற்றும் 12 இரா­ணுவ வீரர்கள் கொலை­யுண்­ட­துதான் 1983 கறுப்பு ஜூலைக்கு கார­ண­மாக அமைந்­தது.

வாஸ் குண­வர்­த­னவும் நானும் ஆனந்தா கல்­லூ­ரியில் ஒரே வகுப்பில் ஒன்­றாக அமர்ந்து கல்வி கற்­ற­வர்கள்.

நான் பயிற்­சி­யி­லி­ருந்து பாஸ் அவுட் ஆன­வுடன் இச்­சம்­பவம் நடை­பெற்­றது. அது புதிய அனு­பவம். அது இலங்­கை­யில இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­ப­வங்­களில் ஒன்று. அப்போது இச்­சம்­ப­வத்தால் நாம் பாடம் கற்­றுக்­கொள்­ள­வில்லை என்றே நினைக்கின்றேன்.

பின்னர் அதற்கு பிந்­திய காலத்தில் அதன் பிர­தி­ப­லன்­களைப் பார்த்து நாங்கள் பல பாடங்­களைக் கற்­றுக்­கொண்டோம் என்­பது உண்மை.

கேள்வி: மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக யுத்தம் நடை­பெற்­றது. அதன் ஆரம்பம் முதல் இறு­தி­வரை நீங்கள் சேவையில் இருந்­துள்­ளீர்கள்? இக்­கா­ல­கட்­டத்தில் ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின்­படி பிர­பா­கரன் என்ற நபரை நீங்கள் எவ்­வாறு அறி­மு­கப்­ப­டுத்­து­வீர்கள்?

Ltte-Leder  யுத்தத்தின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி யாரும் வரவில்லை!!:  (கமல் குண­ரத்ன வழங்கிய விசேட செவ்வி..) Ltte Leder
பிர­பா­கரன் என்­பது-?

பதில்: பிர­பா­க­ரனை அறி­மு­கப்­ப­டுத்த பல முறைகள் இருக்­கின்­றன. ஆயி­ரக்­க­ணக்­கான பெற்றோர் தமது பிள்­ளை­களை இழக்க கார­ண­மா­க­வி­ருந்தார்.

ஆயி­ரக்­க­ணக்­கான பெண்கள் தமது கண­வர்­மாரை இழக்­கவும் அவர் காரணமாகவிருந்தார்.

இலங்கை சரித்­தி­ரத்தில் மிகக் கொடூ­ர­மான மனி­த­ராக அவரை அறி­மு­கப்­ப­டுத்­தலாம். இதுதான் அவரை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான சிறந்த முறை­யென நினைக்­கின்றேன்.

இதற்கும் மேலாக இன்னும் பல தரங்­களில் அவரை அறி­மு­கப்­ப­டுத்த முடியும். ஒரு தலைவர் என்ற வகையில் அவர் மிகவும் சிறந்த திற­மை­மிக்க தலைவர்.

இன்று உலகில் பல பயங்­க­ர­வாத அமைப்­புக்கள் மனித வெடி­குண்­டு­களை பயன்­ப­டுத்­து­கின்­றன. இருந்தும் மனித வெடி­குண்­டு­களை முதன் முத­லாக அறி­மு­கப்­ப­டுத்­தி­யவர் பிர­பா­கரன்.

இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள், அல்–­கைதா பயங்­க­ர­வா­திகள் மனித வெடிகுண்­டு­களைப் பயன்­ப­டுத்தி பல அழி­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.

மனித வெடி­குண்­டுதான் இன்று பயங்­கர ஆயு­த­மாக உலகில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இது முஸ்லிம் பயங்­க­ர­வா­தி­களின் கருத்­துப்­படி சுவர்க்­கத்­துக்கு செல்­வ­தற்­காக மனித வெடி­குண்­டு­களை வெடிக்க வைத்து மர­ணிப்­பது.

இருந்தும் பிர­பா­க­ரனின் பயங்­க­ர­வா­தத்தில் சுவர்க்கம் இருக்­க­வில்லை. அவர்கள் கனவு ஈழத்தை அடை­யவே உயிரை விட்­டனர். இது­போன்ற நோக்­கத்­துக்­காக ஆயிரக்கணக்கான மனித வெடி­குண்டு பயங்­க­ர­வா­தி­களை உரு­வாக்­கிய அவர் அசாதாரண­மான தலை­வ­ராவார். அவர் ஊக்­கு­விப்­பதைப் போலவே தமக்­குத்­தே­வை­யா­னதை தேவை­யான விதத்தில் செய்து முடிக்­கக்­

கூ­டிய வல்­லமை பெற்­ற­வ­ராக விளங்­கினார்.

அதே­போல மது­வுக்கோ அல்­லது மாதுக்­க­ளுக்கோ அடி­மைப்­பட்­டி­ருக்­க­வில்லை. இருந்தும் அவ­ரது வாழ்க்­கை­யி­லி­ருந்த பிர­தான நோக்கம் பழி­வாங்­கு­வ­துதான்.

யாரா­வது ஒருவர் அவ­ருக்கு ஒரு சிறி­த­ளவு வலியை ஏற்­ப­டுத்­தி­னாலும் அந்த நபரை இந்த உல­கை­விட்டு ஒழித்­துக்­கட்டும் வரை அவர் நிம்­ம­தி­யாக உறங்­க­மாட்டார்.

இதற்கு சிறந்த உதா­ரணம் ராஜீவ் காந்­தியை கொலை செய்­தமை. இதன் கார­ண­மாக பழி­வாங்கும் ரெளத்­திர குணத்தைக் கொண்­டவர் எனவும் அவரை இனங்­காட்ட முடியும். நான் இது தொடர்­பாக எனது நூலில் குறிப்­பிட்­டுள்ளேன். இந்த நூலை வாசிப்­ப­வர்கள் பிர­பா­கரன் என்ன மாதி­ரி­யா­னவர் என்­பதை புரிந்­து­கொள்ள முடியும்.

கேள்வி: யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இறுதி நட­வ­டிக்­கை­யான வன்னி நட­வ­டிக்கை மனி­தா­பி­மான நட­வ­டிக்கை என கூறப்­பட்­டது. இதற்­கான காரணம் என்ன?

பதில்: இது அந்தச் சொல்லின் கருத்­துப்­ப­டியே நியா­ய­மான பெய­ரி­ட­லாகும். நாங்கள் ஒவ்­வொரு நட­வ­டிக்­கைக்கும் ஒரு பெயரைச் சூட்­டினோம்.

அந்தப் பெயர் அந்த நட­வ­டிக்­கைக்கு தொடர்­பு­டைய பொருத்­த­மான பெய­ராகும். இந்த நட­வ­டிக்­கைக்கு மனி­தா­பி­மான நட­வ­டிக்கை எனப் பெய­ரி­டப்­பட்டு வன்னி மக்­களை மீட்டெ­டுக்க மாத்­தி­ர­மல்ல வன்னி பிர­தே­சத்தை விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்டுக் கொள்­வதே பிர­தான நோக்­க­மா­க­வி­ருந்­தது.

இந்த இரு பிர­தான நோக்­கங்­க­ளுக்­கா­கவே இந்த நட­வ­டிக்­கைக்கு வன்னி மனி­தா­பி­மான நட­வ­டிக்கை எனப் பெய­ரி­டப்­பட்­டது. அது உண்­மை­யி­லேயே மிகச் சிறந்த மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­யா­கவே தான் பார்க்­கின்றேன்.

கேள்வி: வன்னி மனி­தா­பி­மான நட­வ­டிக்­கையின் ஆரம்­பத்­தி­லி­ருந்து இறு­தி­வரை சென்ற பய­ணத்தில் பிர­பா­கரன் பல்­வேறு யுத்த சூட்­சு­மங்­களை பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். அது தொடர்­பான உங்கள் அனு­ப­வங்கள் என்ன?

275px-Prabhakaran  யுத்தத்தின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி யாரும் வரவில்லை!!:  (கமல் குண­ரத்ன வழங்கிய விசேட செவ்வி..) 275px Prabhakaran

பதில்: பிர­பா­கரன் இந்த சந்­தர்ப்­பத்தில் இரண்டு தவ­று­களைச் செய்தார். ஒன்று அவ­ ரது அமைப்பு குறித்து அதீத நம்­பிக்கை வைத்­ தி­ருந்­தது

மற்­றது இரா­ணு­வத்தின் மீது குறை­வாக மதிப்­பிட்­டி­ருந்­தது. இரா­ணு­வத்தின் தகுதி குறை­வா­னது என்றும் அவ­ரது உறுப்­பி­னர்­களின் தகுதி மேலா­னது என்றும் அவர் கருதினார்.

அவ்­வாறு நினைத்துக் கொண்டு அவர் முறை­யான யுத்த நட­வ­டிக்­கையில் ஈடு­படத் தொடங்­கினார். முன்னர் அவர் மேற்­கொண்டு வந்த யுத்த சூட்­சு­மங்­களை கைவிட்­ட­துதான் அவ­ரது தோல்­விக்கு கார­ண­மாக அமைந்­தது.

கேள்வி: இறுதிச் சந்­தர்ப்­பத்தில் இரா­ணு­வத்­தி­னரை திசை திருப்ப பிர­பா­கரன் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார்? பெண்கள்,பிள்­ளைகள் ஊன­முற்ற போரா­ளி­களை மனித வெடி­குண்­டு­க­ளாக பாவித்­தா­ரல்­லவா?

பதில்: நாங்கள் தமது ஊன­முற்ற படை­வீ­ரர்­களை மனி­தா­பி­மா­னத்­து­ட­னேயே நோக்­குவோம்.

அந்த மனிதர் தனது கை, கால்­களை இந்த நாட்­டுக்­காக தியாகம் செய்தார் என்ற மனி­தா­பி­மானம் எமது எண்­ணத்தில் எழும். அவ­ரது இன்­றைய தினம் நாட்டு மக்­களின் நாளைய தினத்­துக்­காக மேற்­கொண்ட தியாகம் என்றே அவரை இனங்­காண்போம்.

இருந்தும் பிர­பா­கரன் தனது அமைப்பின் உறுப்­பி­னர்­களை இவ்­வாறு பார்க்­க­வில்லை. அவ­ரது கட்­டளை ஆண்­டவன் கட்­ட­ளைக்கு மேலா­னது என்று ஏற்­றுக்­கொண்ட அவ­ரது உறுப்­பி­னர்கள் எந்த மாதி­ரி­யான பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­னாலும் அதை பரி­தா­பத்­துடன் பார்க்­க­வில்லை.

அவர் அவ­ரது அமைப்­பையும், குடும்­பத்­தையும் ஈழ தேசத்­தையும் மாத்­தி­ரமே கவ­னத்தில் கொண்­டி­ருந்தார். இதன் கார­ண­மா­கவே அவர் பெண்­க­ளையும் பிள்­ளை­க­ளையும் மனித வெடி குண்­டு­க­ளாகப் பயன்­ப­டுத்­தினார்.

கேள்வி : இறுதிச் சந்­தர்ப்­பத்தில் பிர­பா­க­ரனின் இறுதிப் பொறி தொடர்­பாக நீங்கள் பெற்ற நேரடி அனு­ப­வங்கள் என்ன?

பதில்: மேலும் பாரிய அனு­ப­வங்கள் உறு­தி­யான நோக்­கத்தைக் கொண்ட இரா­ணு­வத்­தி­ன­ருடன் போராடக் கிடைத்­தது பாரிய அனு­ப­வ­மாகும். அங்கு கடு­மை­யான பல நிலை­மை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது.

நாம் எவரும் எமது படை­வீ­ரர்கள் ஊன­ம­டை­வதை விரும்­ப­மாட்டோம். அதேபோல் உயி­ரி­ழப்­ப­தையும் விரும்­ப­மாட்டோம். நூற்­றுக்­க­ணக்­கான இரா­ணுவ வீரர்கள் மற்றும் பொது மக்­களின் உயி­ரா­பத்தை குறைப்­ப­தற்­காக வேக­மாக ஒரு தீர்­மா­னத்தை எடுக்க முடி­யா­தி­ருந்­தது.

தீர்­மானம் எடுப்­ப­திலும் தாமதம் ஏற்­பட்­டது. இது­தொ­டர்­பாக பேசு­வ­தனால் நாட்­க­ணக்கில் பேசலாம். அந்த நட­வ­டிக்­கை­களின் போது ஏற்­பட்ட நிலை இதுதான்.

111  யுத்தத்தின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி யாரும் வரவில்லை!!:  (கமல் குண­ரத்ன வழங்கிய விசேட செவ்வி..) 111
கேள்வி: நந்திக் கடல் வாவி பாரிய நிலப்­ப­ரப்பைக் கொண்­டது. அங்கு மாதக் கணக்கில் திட்­டத்­தினை வகுத்துப் போராட வேண்­டி­யி­ருந்­தது. எப்­படி சவால்­களை வெற்றி கொண்­டீர்கள்?

பதில் : நாங்கள் சுமார் மூன்­றரை மாத காலம் வரை நந்­திக்­கடல் சுற்­றா­டலில் யுத்­தத்தை மேற்­கொண்டோம்.

நந்­திக்­கடல் வாவிக்கு தெற்­கி­லி­ருந்து முல்­லைத்­தீவு பிர­தே­சத்தில் ஜெனரல் நந்­தன உட­வத்­தயின் கீழ் இரா­ணுவப் படை பல மாதங்­க­ளாக யுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­னது.

அதன் பின்னர் அப்­பி­ர­தே­சங்­களை கைப்­பற்­றினர். நான் உட்­பட எனது குழு­வினர் சுமார் இரண்­டரை மாத கால­மாக புது­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தை மீட்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்தோம்.

இந்த நட­வ­டிக்­கையில் ஜெனரல் சவேந்­திர சில்­வாவின் படை­ய­ணி­யி­னரும் இணைந்து கொண்­டனர்.

இந்த இரண்டு படை­ய­ணி­களும் இணைந்து அப்­பி­ர­தே­சத்தை மீட்­டெ­டுத்தோம். அதன் பின்னர் யுத்த சூனியப் பிர­தே­சத்தில் பிர­வே­சித்தோம்.

அது முழு­மை­யாக நந்­திக்­கடல் வாவிக்கு அரு­கி­லி­ருந்த பிர­தே­ச­மாகும். இதற்கும் மேலாக யுத்­தத்தின் இறுதி நட­வ­டிக்கை நந்­திக்­கடல் வாவிக்கு வடக்கு முனை­யி­லுள்ள கடற் தாவ­ரங்­களைக் கொண்ட சதுப்பு நிலப்­பி­ர­தே­ச­மாகும்.

கேள்வி : இறுதி யுத்­தத்தின் போது வெள்ளைக் கொடி­யேந்தி வந்த குழு­வினர் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக செய்தி பர­வி­யது. இதன் உண்­மைத்­தன்மை என்ன?

பதில்: வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு எவரும் வர­வில்லை. இதை நான் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை.

கேள்வி : பிர­பா­கரன் இறு­தி­வ­ரை­யிலும் போராட்­டத்­தி­லி­ருந்து பின்­வாங்கப் போவ­தில்­லை­யெனத் தெரி­வித்­தி­ருந்தார். இது தொடர்­பாக நீங்கள் என்ன கூற­வி­ரும்­பு­கின்­றீர்கள்?

பதில் : நானும் இதை ஏற்­றுக்­கொள்­கின்றேன். நாங்கள் இறு­தி­வரை பிர­பா­கரன் நந்­திக்­கடல் வாவிப் பகு­தியில் இருப்­பா­ரென அறிந்­தி­ருக்­க­வில்லை.

யாரா­வது இந்த விட­யத்தை நாங்கள் அறிந்­தி­ருந்தோம் எனக் கூறினால் அது பச்சைப் பொய்­யாகும்.

தான் அப்­போது அப்­பி­ர­தேச கட்­ட­ளை­யிடும் அதி­காரி என்ற ரீதியில் மிகவும் பொறுப்­பாக இதைக் கூறு­கின்றேன். பிர­பா­கரன் அங்­கி­ருக்­கின்றார் என்­பதை 19 ஆம் திகதி காலை­யி­லேயே அறிந்து கொண்டோம்.

அதன் பின்னர் அப்­பி­ர­தே­சத்தை நோக்கி தாக்­கு­தலை மேற்­கொண்டோம். இறுதி நேரம் வரை போரா­டினோம். இருந்தும் பிர­பா­கரன் தனிப்­பட்ட ரீதியில் போரா­டி­னாரா என்­பது குறித்து எமக்குத் தெரி­யாது. இருந்தும் அவ­ரது தரப்­பினர் இறுதிக் குண்­டு­வரை போரா­டினர். சர­ண­டை­வ­தற்கு இறு­தி­வரை முயற்­சிக்­க­வில்லை.

prabahran  யுத்தத்தின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி யாரும் வரவில்லை!!:  (கமல் குண­ரத்ன வழங்கிய விசேட செவ்வி..) prabahran
கேள்வி : உங்­க­ளது குழு­வி­லுள்ள படை­வீ­ரர்கள் பிர­பா­க­ரனின் உடலை தூக்­கிக்­கொண்டு வந்த போது என்ன நினைத்­தீர்கள்?

பதில்: உண்­மை­யி­லேயே எனது படை­ய­ணி­யி­லுள்ள வீரர்கள் 30 வரு­டங்­க­ளாக இந்த நாட்டை இருண்ட யுகத்­துக்கு இட்டுச் சென்ற அதேபோல் இலங்­கையில் வாழ்ந்த பல்லா­யிரக் கணக்­கான அப்­பாவி மக்­களை மிரு­கத்­த­ன­மாக கொன்­றொ­ழித்த இலங்கை தேசம் காட்டு மிராண்­டி­களின் தேசம் என்றும் இங்­குள்ள மக்கள் காட்­டு­மி­ராண்­டிகள் என்றும் இனங்­காட்டி எமது நாட்டின் பெய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­திய கொடூ­ர­மான பிர­பா­க­ரனைக் கொன்று எனக்கு அருகே கொண்டு வந்த சந்­தர்ப்­பத்தில் ஏற்­பட்ட எனது மன உணர்வை வார்த்­தை­களால் கூற முடி­யாது. அதை எனது வாழ்க்­கையில் மிக முக்­கிய தரு­ண­மா­கவே கரு­து­கின்றேன்.

கேள்வி: இன்­றைய நிலையில் நீங்கள் பாது­காப்பு சேவை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றி­ருக்­கின்­றீர்கள். யுத்தம் ஆரம்­பித்­த­தி­லி­ருந்து இறு­தி­வரை களத்­தி­லி­ருந்த நீங்கள் கடந்த காலம் குறித்து என்ன நினைக்­கின்­றீர்கள்?

பதில் : நான் யுத்தம் ஆரம்­ப­மா­ன­தி­லி­ருந்து இறு­தி­வரை களத்­தி­லி­ருந்த அதி­காரி நான். வெற்றி, தோல்வி இரண்­டையும் அனு­ப­வித்­தவன். யுத்த தோல்வி எவ்­வ­ளவு கசப்­பா­ன­தென்­ப­தையும் வெற்றி எவ்­வ­ளவு மகிழ்ச்சி என்­ப­தையும் நான் அறிவேன்.

யுத்­த­மென்றால் வெற்­றியும் தோல்­வியும் ஏற்­படும். இருந்தும் தோல்வி ஏற்­பட்­ட­வுடன் துவண்­டு­வி­டாமல் தோல்­விக்­கான காரணம் என்­ன­வென்­பதை ஆராய்ந்­த­றிந்து அதற்கான தீர்வு என்ன, தோல்வி மீண்டும் ஏற்­ப­டாமல் திட்­ட­மிட்டு வெற்­றியை நோக்கி படை வீரர்­களை இட்டுச் செல்ல வேண்டும்.

அத்­துடன் வீரர்­க­ளுடன் இணைந்து களத்தில் போராட வேண்டும். அந்த நாட்­களைத் திரும்பிப் பார்க்­கையில் எனக்கு பெரு­மை­யா­க­வுள்­ளது.

அவ்­வப்­போது முன்­னோக்கிச் சென்று மீண்டும் பின்­னோக்கி ஓடிய இரா­ணு­வத்தை இவ்­வாறு வீர­மிக்க படை­யி­ன­ராக மாற்­றி­ய­மைத்­தது எவ்­வா­றென்­பது முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டி­யதும் பாராட்­டப்­பட வேண்­டி­ய­து­மான விட­ய­மாகும்.

மீண்­டு­மொ­ரு­முறை திரும்பிப் பார்க்கும் போது நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

இன்று எமக்கு எமது தாய்மாரிடம் அருந்திய பாலுக்கு கடன் இல்லை என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம். யுத்தத்தில் ஏற்பட்ட நன்மைகள், தீமைகள் பற்றிய நினைவுகளுடன் வெற்றி வீரனாக தான் வீட்டுக்குச் செல்கின்றேன். அந்த வெற்றியின் பெருமை நான் உயிரிழக்கும் வரை எனது உள்ளத்திலிருக்கும்.

கேள்வி: வெற்றி கொண்ட சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்வது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: எனக்குத் தெரிந்தவரை இந்த யுத்தத்தில் சுமார் இருபதினாயிரம் படைவீரர்கள் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர்.

ஜயாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஊனமுற்றுள்ளனர். சில வீரர்கள் இன்னும் படுக்கையில் துன்பம் அனுபவிக்கின்றனர். நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்ததால் இந்த துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவைகளை நினைத்தால் துக்கம் நெஞ்சை அடைக்கின்றது. எனவே படையினர் உயிர் தியாகம் செய்துபெற்ற சுதந்திரத்தை எமது எதிர்கால பரம்பரைக்காக காத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: நீங்கள் ஒரு படைவீரர், ஒய்வு காலத்தை எவ்வாறு களிப்பீர்கள்?

பதில்: நீண்டகால யுத்த களத்தில் இருந்தேன். இப்போது நான் ஓய்வு பெற்று விட்டேன். குடும்பத்தினருடன் இன்னும் சில வாரங்கள் காலத்தை செலவிட வேண்டும் அதன் பின்னர் எதிர்காலத்தை எவ்வாறு கழிப்பதென்பதை திட்டமிடுவேன். நான் ஒன்றை மட்டும் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு போதும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை.

நன்றி: ஞாயிறு லங்காதீப தமிழில்: எஸ்.கணேசன்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

தமிழ் ஈழம் என்ற மாயை காட்டி தமிழ் இனத்தை சீரழித்து இன்று தமிழ் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News